ஓப்பன்கைமர் (திரைப்படம்)
கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருந்த திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஓப்பன்கைமர் (Oppenheimer) என்பது 2023 இல் வெளிவந்த வாழ்க்கை வரலாற்று பரபரப்பூட்டும் ஆங்கிலத் திரைப்படம் ஆகும்.[5][6][7] கிறிஸ்டோபர் நோலன் திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டிருந்தார்.[8] அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளரும் இரண்டாம் உலகப் போரின் போது மன்காட்டன் திட்டத்தில் முதல் அணுவாயுதங்களைத் தயாரித்ததில் பெரும் பங்காற்றி "அணுகுண்டின் தந்தை" என்ற பெருமையைப் பெற்ற ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமராக கில்லியன் மேர்பி நடித்திருந்தார். இத்திரைப்படம் ஓப்பன்கைமரின் வாழ்க்கையை விவரிக்கிறது, கதை முக்கியமாக அவரது படிப்பை மையமாகக் கொண்டது, இரண்டாம் உலகப் போரின் போது லாஸ் அலமோசு ஆய்வகத்தில் அவரது பணி, அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியுடனான தொடர்பு, அதனைத் தொடர்ந்து 1954 இல் அவர் மீதான பாதுகாப்பு விசாரணை, பாதுகாப்பு அனுமதி நீக்கம் போன்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஓப்பன்கைமரின் மனைவி கிட்டியாக எமிலி பிளண்ட், மன்காட்டன் திட்டத் தலைவராக மேட் டாமன், ஐக்கிய அமெரிக்க அணுசக்திப் பொறுப்புக் குழு உறுப்பினராக ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோரும் நடித்திருந்தனர். துணை நடிகர்களாக புளோரன்சு புயூ, ஜோஷ் ஹர்த்நேட், ராமி மலேக், கென்னத் பிரனா ஆகியோரும் நடித்தனர்.
ஓப்பன்கைமர் | |
---|---|
இயக்கம் | கிறிஸ்டோபர் நோலன் |
தயாரிப்பு | |
திரைக்கதை | கிறிஸ்டோபர் நோலன் |
இசை | லுட்விக் கர்ரான்சன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஹொயிட் வேன் ஹொய்டெமா |
படத்தொகுப்பு | ஜெனிபர் லேம் |
கலையகம் | |
விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | சூலை 11, 2023 (2023-07-11) (கிறாண்டு இறெட்சு) சூலை 21, 2023 (ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 180 நிமி.[1] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $100 மில்.[2] |
மொத்த வருவாய் | $960.9 மில்.[3][4] |
அதன் பல விருதுகளில், ஓப்பன்ஹைமர் 2023 ஆம் ஆண்டின் முதல் பத்துத் திரைப்படங்களில் ஒன்றாக தேசிய மதிப்பாய்வு வாரியம், அமெரிக்கத் திரைப்படக் கழகம் ஆகியவற்றால் பெயரிடப்பட்டது. 81-ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் (சிறந்த திரைப்படம் உட்பட) ஐந்து விருதுகள், 77-ஆவது பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (சிறந்த திரைப்படம் உட்பட) ஏழு விருதுகள், 30-ஆவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் (SAG) விருதுகளில் மூன்று விருதுகள், 96-ஆவது அகாதமி விருதுகளில் (சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட) ஏழு விருதுகளும் 13 பரிந்துரைகளும் பெற்றது.