![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Christopher_nolan.jpg/640px-Christopher_nolan.jpg&w=640&q=50)
கிறிஸ்டோபர் நோலன்
21ம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைக்கதைகளை எழுதியுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். இவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கிறிஸ்டோபர் நோலன் Christopher Nolan | |
---|---|
![]() சான்டா பார்பரா திரைப்பட கண்காட்சியில் கிறிஸ்டோபர் நோலன் | |
பிறப்பு | கிறிஸ்டோபர் ஜோனதன் ஜேம்ஸ் நோலன் சூலை 30, 1970 (1970-07-30) (அகவை 53) இலண்டன் ஐக்கிய இராச்சியம் |
இருப்பிடம் | லாஸ் ஏங்ஜெலேஸ், கலிபோர்னியா அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | கிறிஸ் நோலன் |
குடியுரிமை | இங்கிலாந்து அமெரிக்கா |
கல்வி | ஆங்கில மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார் |
பணி | திரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1985 – இன்றுவரை |
சொந்த ஊர் | இலண்டன், இங்கிலாந்து, சிகாகோ, இல்லியனாயிஸ் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | சின்காபி திரைப்படங்கள் |
வாழ்க்கைத் துணை | எம்மா தாமஸ் (1997–இன்றுவரை) |
உறவினர்கள் | ஜோனதன் நோலன் (சகோதரன்) மாத்தியு பிரான்சிஸ் நோலன் (சகோதரன்)[1] |
நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கியப் பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழகக் கல்லூரியில் பெற்றார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கும் முன் பல குறும்படங்களை உருவாக்கினார். நோலன் தனது இரண்டாவது படமான மெமெண்டோ (2000) மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். அதற்காக இவர் சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]
இன்சோம்னியா (2002) மூலம் தனது சொந்த திரைப்படத் தயாரிப்பிற்கு மாறினார். மேலும் தி டார்க் நைட் முத்தொகுப்பு (2005-2012), தி ப்ரெஸ்டீஜ் (2006) மற்றும் இன்செப்ஷன் (2010) ஆகிய படங்களுடன் விமர்சன மற்றும் வணிக வெற்றியைக் கண்டார். இவற்றில் கடைசியாக நோலனுக்கு சிறந்த படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என இரண்டு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்ஸ்டெர்டெல்லர் (2014), டன்கிர்க் (2017) மற்றும் டெனட் (2020) ஆகிய படங்களை இயக்கினார். டன்கிர்க் படத்திற்காக, இவர் இரண்டு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்றார். இதில் சிறந்த இயக்குனருக்கான முதல் பரிந்துரையும் அடங்கும். நோலன் தனது 12வது படமான ஓப்பன்ஹைமர் (2023)[3] படத்திற்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்திற்கான அகாதமி விருதை வென்றார்.