இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
விக்ரம் (17 ஏப்ரல் 1966) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் சேது (1999), விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001), சாமி (2003), பிதாமகன் (2003), ஐ (2015) போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
விக்ரம் | |
---|---|
விக்ரம் 2003 | |
பிறப்பு | கென்னடி ஜான் விக்டர் 17 ஏப்ரல் 1966[1][2] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது வரை |
பெற்றோர் | வினோத் ராஜ் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | சைலஜா பாலகிருஷ்ணன் (தி. 1992) |
பிள்ளைகள் | இளவரசி அக்ஷிதா விக்ரம் |
உறவினர்கள் | தியாகராஜன் (தாய்வழி மாமா) பிரசாந்த் (உறவினர்) |
விருதுகள் | சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது (2003) சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (1999, 2003, 2010) கலைமாமணி விருது (2004) |
இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.[3]
விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.[4]
விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1966 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர்.[5][6] விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.[7]
விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லூரியில் படித்து முடித்தார்.[8] இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.[8][9][10]
இவர் 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா விக்ரம் என்ற ஒரு மகளும் உண்டு. இவரின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது திரைப்படங்க்ளில் நடித்து வருகின்றார்.
விக்ரம் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பு 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற படங்களில் நடித்தார். இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.[11] அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.
விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும்.
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
1990 | என் காதல் கண்மணி | வினோத் | தமிழ் | ||
1991 | தந்துவிட்டேன் என்னை | ராஜு | |||
1992 | காவல் கீதம் | அசோக் | |||
மீரா | ஜீவா | ||||
1993 | துருவம் | பத்ரன் | மலையாளம் | ||
சிருநவ்வுலா வரமிஸ்தாவா | தெலுங்கு | ||||
மாஃபியா | ஹரி ஷங்கர் | தமிழ் | |||
1994 | சைன்யம் | கேடட் ஜீஜி | |||
பங்காரு குடும்பம் | தெலுங்கு | ||||
புதிய மன்னர்கள் | சத்யமூர்த்தி | தமிழ் | |||
1995 | ஸ்ட்ரீட் | மலையாளம் | |||
அடல்லா மாஜகா | தெலுங்கு | ||||
1996 | மயூர ந்ரிடம் | மலையாளம் | |||
ஊஹா | மோகன் | தமிழ் | |||
அக்கா பாகுன்னாவா | |||||
மெருபு | |||||
இந்திரப்ரஸ்தம் | பீட்டர் | மலையாளம் | |||
ராசபுத்திரன் | மனு | ||||
1997 | இது ஒரு சிநேஹகதா | ராய் | |||
உல்லாசம் | தேவ் | தமிழ் | |||
1998 | கண்களின் வார்த்தைகள் | தமிழ் | |||
1999 | ஹவுஸ் புள் | ஹமீது | |||
சேது | சியான் (எ) சேது | வென்றவர்: தென்னிந்திய பிலிம்பேர் சிறப்பு விருது | |||
2000 | ரெட் இந்தியன்ஸ் | மலையாளம் | |||
2001 | இந்த்ரியம் | ||||
9 நேலாலு | வீரேந்திரா | தெலுங்கு | |||
யூத் | |||||
விண்ணுக்கும் மண்ணுக்கும் | விக்ரம் | தமிழ் | |||
தில் | கனகவேல் | ||||
காசி | காசி | வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |||
2002 | ஜெமினி | ஜெமினி | |||
சாமுராய் | தியாகராஜன் | ||||
கிங் | ராஜா சண்முகம் | ||||
2003 | தூள் | ஆறுமுகம் | |||
காதல் சடுகுடு | சுரேஷ் | ||||
சாமி | ஆறுசாமி | பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | |||
பிதாமகன் | சித்தன் | வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது |
|||
2004 | அருள் | அருள்குமரன் | |||
2005 | அந்நியன் | இராமானுசம் அந்நியன் ரெமோ | வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது | ||
மஜா | அறிவுமதி | ||||
2008 | பீமா | சேகர் | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது | ||
2009 | கந்தசாமி | கந்தசாமி | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது | ||
2010 | ராவணன் | வீரையா | தெலுங்கு மொழியாக்கப்பட்டு வெளிவந்தது;வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது | ||
ராவன் | தேவ் பிரதாப் சர்மா | இந்தி | |||
2011 | தெய்வத்திருமகள் | கிருஷ்ணன் | தமிழ் | வென்றவர்: சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது | |
2011 | ராஜபாட்டை | 'அனல்' முருகன் | |||
2012 | தாண்டவம் | சிவா | பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது | ||
2013 | டேவிட் | டேவிட் | இந்தி | தெலுங்கு மற்றும் தமிழ் மொழியாக்கப்பட்டு வெளிவந்தது | |
2015 | ஐ | லீ (எ) லிங்கேசன் | தமிழ் | தெலுங்கு மற்றும் இந்தி மொழியாக்கப்பட்டு வெளிவந்தது; விக்ரமின் ஐம்பாதாவது திரைப்படம் | |
10 எண்றதுக்குள்ள | |||||
2016 | இருமுகன் | அகிலன் வினோத் மற்றும் லவ் (இரட்டைப் பங்கு) | |||
2018 | ஸ்கெட்ச் | ஜீவா (ஸ்கெட்ச்) | |||
சாமி 2 | ஆறுச்சாமி மற்றும் ராமசாமி | ||||
2019 | கடாரம் கொண்டான் | கே. கே. | தெலுங்கு மொழியில் மிஸ்டர் கே. கே. எனும் பெயரில் வெளிவந்தது | ||
2019 | ஆதித்ய வர்மா | டேராடூனில் பார்வையாளர் | "தொலைவு" பாடலில் கேமியோ தோற்றம் | [12] | |
2022 | மகான் | காந்தி மகான் | அமேசான் பிரைம் வீடியோ படம் | [13] | |
2022 | கோப்ரா | மதியழகன் | நிறைவு | [14] | |
2022 | பொன்னியின் செல்வன்: 1 | ஆதித்த கரிகாலன் | தயாரிப்பிற்குப்பின் | [15] | |
துருவ நட்சத்திரம் | ஜான் | தாமதமாக | [16] | ||
சியான் 61 | style="background: #DDF; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2"|அறிவிக்கப்படும் | முன் தயாரிப்பு | [16] |
திரைப்படம் | ஆண்டு | குரல் கொடுக்கப்பட்டவர் | குறிப்பு |
---|---|---|---|
அமராவதி | 1993 | அஜித் குமார் | [17] |
புதிய முகம் | 1993 | வினீத் | |
பாச மலர்கள் | 1994 | அஜித் குமார் | |
காதலன் | 1994 | பிரபுதேவா | [18] |
குருதிப்புனல் | 1995 | ஜான் இடத்தட்டில் | |
காதல் தேசம் | 1996 | அப்பாஸ் | [19] |
கருப்பு ரோஜா | 1996 | அமர் சித்திக் | |
மின்சார கனவு | 1997 | பிரபுதேவா | [20] |
வி.ஐ.பி | 1997 | அப்பாஸ் | [19] |
சத்யா | 1998 | ஜே. டி. சக்ரவர்த்தி | [21] |
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | 2000 | அப்பாஸ் | [22] |
தலைப்பு | ஆண்டு | பாடல்கள் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
ஸ்ரீ | 2002 | "யாமிருக்க பயமேன்" | டி எஸ் முரளிதரன் | சங்கர் மகாதேவன், திப்பு | [23] [24] |
ஜெமினி | 2002 | "ஓ போடு" | பரத்வாஜ் | அனுராதா ஸ்ரீராம் | [25] |
கந்தசாமி மள்ளானா (தெலுங்கு) |
2009 | "எக்ஸ்க்யூஸ் மி" "இதெல்லாம் டூப்பு" "மேம்போ மாமியா" " மியாவ் மியாவ்" |
தேவி ஸ்ரீ பிரசாத் | சுசித்ரா தேவி ஸ்ரீ பிரசாத் ரீட்டா பிரியா ஹிமேஸ் |
[26] [27] |
மதராசபட்டினம் | 2010 | "மேகமே ஒ மேகமே" | ஜி. வி. பிரகாஷ் குமார் | ம. சு. விசுவநாதன், நாசர் | [28] |
தெய்வத்திருமகள் நானா (தெலுங்கு) |
2011 | "கதை சொல்ல போரேன்", "ப ப பாப்பா" |
ஜி வி பிரகாஷ் குமார் | சிரிங்கா, தனிப்பாடல் |
[29] |
ராஜபாட்டை வீடிந்தே (தெலுங்கு) |
2011 | "லட்டு லட்டு" | யுவன் சங்கர் ராஜா | சுசித்ரா, பிரியதர்சினி | [30] |
டேவிட் | 2013 | "மரிய பிதாசே" | ரெமோ பெர்னாண்டஸ் | ரெமோ பெர்னாண்டஸ் | [31] |
கடாரம் கொண்டான் | 2019 | "தீசுடர் குனியுமா" | ஜிப்ரான் | ||
பெயர் | ஆண்டு | இயக்குனர் | குறிப்பு |
---|---|---|---|
கலாட்டா குடும்பம் | 1988 | தெரியவில்லை | ஆறு பாக தொலைக்காட்சித் தொடர் |
விஸ்வநாத் | தெரியவில்லை | தெரியவில்லை | தொலைக்காட்சித் தொடர் |
சிறகுகள் | 2000 | மனோபாலா | தொலைக்காட்சிப்படம் |
தலைப்பு | ஆண்டு | தொகுத்தவர் | இயக்குநர் | பாத்திரம் | பாடல் தொகுப்பு | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
"ஏக் சுர்" | 2010 | லூயிஸ் பாங்க்ஸ் | கைலாஷ் சுரேந்திரநாத் | தானாகவே | தனிப் பாடல் | [32] [33] |
"ஒன் - தி யூனிடி சாங்" | 2012 | ஜார்ஜ் பீட்டர் | சுமேஷ் லால் | தானாகவே | தனிப் பாடல் | [34] |
"வணக்கம் சென்னை" | 2012 | கிரீஷ் கோபாலகிருஷ்ணன் | பாண்டிராஜ் | தானாகவே | மெரினா | [35] [36] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.