இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
பரத்வாஜ் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 7 மார்ச்சு 1960[1] |
இசை வடிவங்கள் | திரையிசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 1998–தற்போதுவரை |
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரது தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]
காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குனர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]
ஆண்டு | தமிழ் | மற்ற மொழிகள் | குறிப்புகள் |
---|---|---|---|
1998 | காதல் மன்னன் | முதல் திரைப்படம் | |
பூவேலி | |||
1999 | அமர்க்களம் | ||
ரோஜாவனம் | |||
2000 | பார்த்தேன் ரசித்தேன் | ||
2001 | பாண்டவர் பூமி | ||
பெண்கள் | |||
2002 | ரோஜாக்கூட்டம் | ||
ஜெமினி | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
தமிழ் | |||
தயா | |||
ராஜ்ஜியம் | |||
ஜங்ஷன் | |||
ஐ லவ் யூ டா | |||
2003 | ஜே ஜே | ||
காதல் டாட் காம் | |||
காலாட்படை | |||
அன்பே அன்பே | |||
2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | ||
ட்ரீம்ஸ் | |||
ஜனனம் | |||
ஒரு முறை சொல்லிவிடு | |||
ஆட்டோகிராப் | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
அட்டகாசம் | |||
2005 | ஐயா | ||
பிரியசகி | |||
குண்டக்க மண்டக்க | |||
பிப்ரவரி 14 | |||
2006 | இதயத் திருடன் | ||
திருப்பதி | |||
ஜாம்பவான் | |||
உள்ள கடத்தல் | |||
மை ஆட்டோகிராப் (கன்னடம்) | |||
திருட்டுப் பயலே | |||
வட்டாரம் | |||
2007 | பள்ளிக்கூடம் | ||
ஒன்பது ரூபாய் நோட்டு | |||
விகாரி (தெலுங்கு) | |||
நம்பர்.73, சாந்தி நிவசா (கன்னடம்) | |||
முனி | |||
2008 | வல்லமை தாராயோ | ||
2009 | நாளை நமதே | ||
சொல்ல சொல்ல இனிக்கும் | |||
காதலுக்கு மரணமில்லை | திரைப்படம் வெளியாகவில்லை | ||
அசல்[4] | |||
2010 | களவாடிய பொழுதுகள் | ||
நந்தி | |||
2014 | அதிதி | ||
அரண்மனை | |||
அழகிய பாண்டிபுரம் | |||
2016 | ஆயிரத்தில் இருவர் | படப்பிடிப்பில் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.