From Wikipedia, the free encyclopedia
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.
0.800–1.000 (very high)
0.700–0.799 (high) 0.550–0.699 (medium) |
0.350–0.549 (low) Data unavailable |
2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]
இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4].
2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131
ஆவது இடத்திலும் உள்ளன
2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6]
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7]
குறிப்பு:
|
|
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11].
குறிப்பு:
|
|
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14].
குறிப்பு:
தரவரிசை | நாடு | ம.மே.சு | ||
---|---|---|---|---|
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [12] |
2015ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[12] | 2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [12] |
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு [12] | |
1 | நோர்வே | 0.944 | 0.002 | |
2 | ஆத்திரேலியா | 0.935 | 0.002 | |
3 | சுவிட்சர்லாந்து | 0.930 | 0.002 | |
4 | டென்மார்க் | 0.923 | ||
5 | நெதர்லாந்து | 0.922 | 0.002 | |
6 | செருமனி | 0.916 | 0.001 | |
6 | (2) | அயர்லாந்து | 0.916 | 0.004 |
8 | ▼ (1) | ஐக்கிய அமெரிக்கா | 0.915 | 0.002 |
9 | ▼ (1) | கனடா | 0.913 | 0.001 |
9 | (1) | நியூசிலாந்து | 0.913 | 0.002 |
11 | சிங்கப்பூர் | 0.912 | 0.003 | |
12 | ஆங்காங் | 0.910 | 0.002 | |
13 | லீக்கின்ஸ்டைன் | 0.908 | 0.001 | |
14 | சுவீடன் | 0.907 | 0.002 | |
14 | (1) | ஐக்கிய இராச்சியம் | 0.907 | 0.005 |
16 | ஐசுலாந்து | 0.899 | ||
17 | தென் கொரியா | 0.898 | 0.003 | |
18 | இசுரேல் | 0.894 | 0.001 | |
19 | லக்சம்பர்க் | 0.892 | 0.002 | |
20 | ▼ (1) | சப்பான் | 0.891 | 0.001 |
21 | பெல்ஜியம் | 0.890 | 0.002 | |
22 | பிரான்சு | 0.888 | 0.001 | |
23 | ஆஸ்திரியா | 0.885 | 0.001 | |
24 | பின்லாந்து | 0.883 | 0.001 | |
25 | சுலோவீனியா | 0.880 | 0.001 | |
26 | எசுப்பானியா | 0.876 | 0.002 | |
27 | இத்தாலி | 0.873 | ||
28 | செக் குடியரசு | 0.870 | 0.002 | |
29 | கிரேக்க நாடு | 0.865 | 0.002 | |
30 | எசுத்தோனியா | 0.861 | 0.002 | |
31 | புரூணை | 0.856 | 0.004 | |
32 | சைப்பிரசு | 0.850 | ||
32 | (1) | கத்தார் | 0.850 | 0.001 |
34 | அந்தோரா | 0.845 | 0.001 | |
35 | (1) | சிலவாக்கியா | 0.844 | 0.005 |
36 | ▼ (1) | போலந்து | 0.843 | 0.003 |
37 | லித்துவேனியா | 0.839 | 0.002 | |
37 | மால்ட்டா | 0.839 | 0.002 | |
39 | சவூதி அரேபியா | 0.837 | 0.001 | |
40 | அர்கெந்தீனா | 0.836 | 0.003 | |
41 | ▼ (1) | ஐக்கிய அரபு அமீரகம் | 0.835 | 0.002 |
42 | சிலி | 0.832 | 0.002 | |
43 | போர்த்துகல் | 0.830 | 0.002 | |
44 | அங்கேரி | 0.828 | 0.003 | |
45 | பகுரைன் | 0.824 | 0.003 | |
46 | (1) | லாத்வியா | 0.819 | 0.003 |
47 | ▼ (1) | குரோவாசியா | 0.818 | 0.001 |
48 | ▼ (1) | குவைத் | 0.816 | |
49 | மொண்டெனேகுரோ | 0.802 | 0.001 |
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது [15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16].
குறிப்பு:
தரவரிசை | நாடு | ம.மே.சு. | ||
---|---|---|---|---|
2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு |
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு | 2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு [15] |
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு [15] | |
1 | நோர்வே | 0.944 | 0.001 | |
2 | ஆத்திரேலியா | 0.933 | 0.002 | |
3 | சுவிட்சர்லாந்து | 0.917 | 0.001 | |
4 | நெதர்லாந்து | 0.915 | ||
5 | ஐக்கிய அமெரிக்கா | 0.914 | 0.002 | |
6 | செருமனி | 0.911 | ||
7 | நியூசிலாந்து | 0.910 | 0.002 | |
8 | கனடா | 0.902 | 0.001 | |
9 | (3) | சிங்கப்பூர் | 0.901 | 0.003 |
10 | டென்மார்க் | 0.900 | ||
11 | ▼ (3) | அயர்லாந்து | 0.899 | ▼ 0.002 |
12 | ▼ (1) | சுவீடன் | 0.898 | 0.001 |
13 | ஐசுலாந்து | 0.895 | 0.002 | |
14 | ஐக்கிய இராச்சியம் | 0.892 | 0.002 | |
15 | ஆங்காங் | 0.891 | 0.002 | |
15 | (1) | தென் கொரியா | 0.891 | 0.003 |
17 | ▼ (1) | சப்பான் | 0.890 | 0.002 |
18 | ▼ (2) | லீக்கின்ஸ்டைன் | 0.889 | 0.001 |
19 | இசுரேல் | 0.888 | 0.002 | |
20 | பிரான்சு | 0.884 | ||
21 | ஆஸ்திரியா | 0.881 | 0.001 | |
21 | பெல்ஜியம் | 0.881 | 0.001 | |
21 | லக்சம்பர்க் | 0.881 | 0.001 | |
24 | பின்லாந்து | 0.879 | ||
25 | சுலோவீனியா | 0.874 | ||
26 | இத்தாலி | 0.872 | ||
27 | எசுப்பானியா | 0.869 | ||
28 | செக் குடியரசு | 0.861 | ||
29 | கிரேக்க நாடு | 0.853 | ▼ 0.001 | |
30 | புரூணை | 0.852 | ||
31 | கத்தார் | 0.851 | 0.001 | |
32 | சைப்பிரசு | 0.845 | ▼ 0.003 | |
33 | எசுத்தோனியா | 0.840 | 0.001 | |
34 | சவூதி அரேபியா | 0.836 | 0.003 | |
35 | (1) | லித்துவேனியா | 0.834 | 0.003 |
35 | ▼ (1) | போலந்து | 0.834 | 0.001 |
37 | அந்தோரா | 0.830 | ||
37 | (1) | சிலவாக்கியா | 0.830 | 0.001 |
39 | மால்ட்டா | 0.829 | 0.002 | |
40 | ஐக்கிய அரபு அமீரகம் | 0.827 | 0.002 | |
41 | (1) | சிலி | 0.822 | 0.003 |
41 | போர்த்துகல் | 0.822 | ||
43 | அங்கேரி | 0.818 | 0.001 | |
44 | பகுரைன் | 0.815 | 0.002 | |
45 | கியூபா | 0.815 | 0.002 | |
46 | ▼ (2) | குவைத் | 0.814 | 0.001 |
47 | குரோவாசியா | 0.812 | ||
48 | லாத்வியா | 0.810 | 0.002 | |
49 | அர்கெந்தீனா | 0.808 | 0.003 |
சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.
வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17].
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18]
குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18] குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.
முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.
2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]
|
|
|
2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[2]
பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (▼), மற்றும் நீலக்கோடு () ஆகியன 2010ம் ஆண்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.
|
|
|
தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.
முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[2] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது.
அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[19] அவையாவன:
|
|
|
பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.
கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.
கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.