வளர்ந்த நாடுகள்
From Wikipedia, the free encyclopedia
வளர்ந்த நாடுகள் அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகள் (developed countries) எனப்படுபவை குறிப்பிட்ட சில திட்ட அளவைகளின்படி உயர் வளர்ச்சித் தரத்தைக் காட்டும் நாடுகளாகும். ஆனால் எந்த நாடுகள் வளர்ந்த நாடுகள் என்பதிலும், எந்த அளவீடுகள் அதனை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதிலும் தொடர்ந்து விவாதங்கள் உள்ளன. பொருளாதார அளவீடுகள் எவை என்பதே அதிகளவு விவாதத்துக்கு உட்படும் விடயமாகும். நபர்வாரி வருமானம்; நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கு எடுத்துக் கொள்ளப்படும் முக்கிய அலகாகும். தொழில்மயமாக்கம் என்பதும் இன்னொரு திட்ட அளவையாகும். அண்மையில் மனித வளர்ச்சிச் சுட்டெண் பிரபலமான ஒரு திட்ட அளவையாக அறியப்படுகின்றது. இந்தச் சுட்டெண்ணானது பொருளாதார அளவீடு, தேசிய வருமானம் போன்றவற்றுடன் ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி போன்றவற்றையும் கருத்தில் கொண்டுள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண் அதிகம் உள்ள நாடுகள் வளர்ந்த நாடுகள் எனவும், அல்லாதவை வளர்ந்துவரும் நாடுகள் அல்லது வளர்ச்சியடையாத நாடுகள் எனவும் அழைக்கப்படும்.
மனித வளர்ச்சிச் சுட்டெண்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.