From Wikipedia, the free encyclopedia
பழைய எகிப்து இராச்சியத்தின் வரலாறு கிமு 2686-இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது.[1] இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை மம்மியாக்கி அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இந்த பழைய எகிப்து இராச்சியத்தை மூன்றாம் வம்சத்தவர் முதல் ஆறாம் வம்சத்தினர் வரை கிமு 2681 முதல் கிமு 2181 முடிய 500 ஆண்டுகள் ஆண்டனர்.
பழைய எகிப்து இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2686–கிமு 2181 | |||||||||
தலைநகரம் | மெம்பிசு | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
பார்வோன் | |||||||||
• கிமு 2686 – 2649 | மூன்றாம் வம்ச மன்னர் ஜோசெர் (முதல்) கிமு 2686 – 2613 | ||||||||
ஆறாம் வம்ச மன்னர் நெயிட்டு குவர்டி சிப்தா அல்லது 7/8-ஆம் வம்சத்தின் நேபெரிர்கரே (இறுதி) | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கிமு 2686 | ||||||||
• முடிவு | கிமு 2181 | ||||||||
|
பழைய எகிப்திய இராச்சியத்தின் நான்காம் வம்ச மன்னர் சினெபெரு என்பவர் பிரமிடு கட்டிடக் கலை நுணுக்கத்தை நன்கறிந்தவர். இவ்வம்சத்தின் கூபு, காப்ரா, மற்றும் மென்கௌரே போன்ற மன்னர்கள் புகழ்பெற்ற கிசா பிரடுமிகளைக் கட்டினர்.[2] பண்டைய எகிப்து தனது நாகரீகத்தை, பழைய எகிப்து இராச்சியத்தின் ஆட்சிக் காலம் முதல், எகிப்தின் மத்தியகால இராச்சியம் மற்றும் புது எகிப்து இராச்சியம் வரை நைல் சமவெளியில் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
பழைய எகிப்து இராச்சியம் என்ற சொல்லை, பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றாளர்கள், துவக்கால முதலிரண்டு வம்சங்களின் ஆட்சிக் காலத்துடன் வேறுபடுத்திக் காண்பிக்கவே பயன்படுத்தினர். துவக்க கால எகிப்தின் முதலிரண்டு வம்ச மன்னர்களின் மற்றும் பழைய எகிப்திய இராச்சியத்தின் முதல் மன்னர்களின் தலைநகரமாக மெம்பிஸ் விளங்கியது.
மேற்படி இரண்டு எகிப்திய ஆட்சியாளர்களின் காலப்பகுதிகளை, புகழ்பெற்ற பெரிய அளவிலான பிரமிடுக் கட்டிடக் கலையும், பொருளாதார வளர்ச்சியுமே வேறுபடுத்தி காட்டுகிறது.[3]
எகிப்தின் பழைய இராச்சியமானது, எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர்களின் ஆட்சியிலிருந்து, ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலமான கிமு 2686 – கிமு 2181 வரையிலான பகுதியாக கணக்கிடப்படுகிறது.
பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் பார்வோன்கள் என அழைக்கப்படவில்லை. ஆனால் புது எகிப்திய இராச்சிய ஆட்சியின் போது கடவுள்களுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்ற மன்னர்களை பார்வோன்கள் என்றழைத்தனர்.[4]
எகிப்தின் மூன்றாம் வம்சத்தின் பழைய எகிப்திய இராச்சியத்தின் முதல் மன்னர் ஜோசெர் ஆட்சிக் காலத்தில், எகிப்தின் தலைநகரம் மெம்பிசுக்கு மாற்றப்பட்டது.
இவரது ஆட்சியில் சக்காரா பகுதியில் கற்களாலான படிக்கட்டுகள் அமைப்பில், பிரமிடு கட்டிடக் கலையின் புதுயுகம் துவங்கியது.[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தில் இறந்த மன்னர்கள், அரசிகள், அரச குடும்பத்தினர்கள் மற்றும் அரசவை பிரபுக்களுக்குத் தக்கவாறு, அவர்களது பிணங்களைப் பதப்படுத்தி மம்மியாக்கி, பிரமிடுகளில் உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர். இக்காரணத்திற்காக பழைய எகிப்திய இராச்சியத்தின் காலம் பிரமிடுகளின் காலம் என அழைக்கப்படுகிறது.
பழைய எகிப்து இராச்சியத்தை மூன்றாவது வம்சத்தினர் முதல் ஆறாவது வம்சத்தினர் வரை கிமு 2686 முதல் கிமு 2181 முடிய 505 ஆண்டுகள் ஆண்டனர்
பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவியவர் மன்னர் ஜோசெர் (கிமு 2691 – 2625) ஆவார். இவரே தனக்கான படிக்கட்டுப் பிரமிடுவை எகிப்தின் சக்காரா நகரத்தில் நிறுவினார்.
முதலில் அறியப்பட்ட எகிப்திய மன்னர்களின் உருவம், எகிப்தின் மூன்றாம் வம்சத்தின், பழைய இராச்சிய மன்னர் ஜோசெர் தலைச் சிற்பம், (கிமு 2650-2600) மேல் எகிப்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின், புருக்ளீன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[5]பழைய எகிப்திய இராச்சியத்தின் மக்கள், மன்னரை கடவுளாக வழிபட்டனர்.[6]
நான்காம் எகிப்திய வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2613–2494), பழைய எகிப்திய இராச்சியத்தின் புகழ் அதன் உச்சியைத் தொட்டது. எகிப்திய மன்னர் சினெபெரு கருங்கற்களால் சிறிதும் பெரிதுமான வளைந்த பிரமிடு மற்றும் செம்பிரமிடு போன்ற மூன்று பிரமிடுகளை நிறுவினார்.[7][7] மன்னர் சினெபெருவின் மகன் கூபு (கிமு 2589–2566) கிசாவின் பெரிய பிரமிடை நிறுவினார்.
கூபுவின் மறைவிற்குப்பின் அவரது மகன்கள் ஜெதெப்பிரே (கிமு 2566–2558) மற்றும் காப்ராவிற்கு இடையே வாரிசுரிமைக்கு சர்ச்சை ஏற்பட்டது. ஜெதேப்பிரா ஆட்சிக் காலத்தில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் கட்டப்பட்டது.[8]இவரது ஆட்சிக் காலத்தில் கானான் தேசமும், நூபியா (தற்கால சூடான் நாடு) தேசமும் கைப்பற்றப்பட்டன.[9]
எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட மூன்றாம் வம்ச மன்னர்களில் முதலாமர் ஜோசெர் ஆவார். இவர் எகிப்தின இரண்டாம் வம்சத்தவர்களை வென்று, பழைய எகிப்திய இராச்சியத்தை கைப்பற்றினார்.[10] இவ்வம்சத்தினர் பழைய எகிப்திய இராச்சியதை கிமு 2686 முதல் கிம் 2613 முடிய ஆண்டனர். இவர்களது தலைநகரம் மெம்பிஸ் ஆகும். சக்காரா நகரம் இறந்த மன்னர்களை புதைக்கும் இடமாகவும், கோயில்களாகவும் இருந்தன. [11]மன்னர் ஜோசெர் சக்காராவின் படிக்கட்டு பிரமிடை நிறுவினார்.
எகிப்தின் நான்காம் வம்சத்தவர்கள் ஆண்ட பழைய எகிப்திய இராச்சியத்தில் [12] அமைதி மற்றும் செழிப்புடன் நிலவியது. மேலும், இக்காலம் பிற நாடுகளுடன் மேற்கொண்ட வர்த்தகங்கள் ஆவணப்படுத்தப்பட்ட காலமாகும்.
எகிப்தின் நான்காம் வம்ச மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இறந்த மன்னர்களின் உடலை பதப்படுத்தி உயரமான பிரமிடு கட்டிடங்களில் அடக்கம் செய்யும் வழக்கம் செழித்தோங்கியது. இவ்வம்ச ஆட்சியில் பண்டைய எகிப்தில் சித்திரக் கலை, சிற்பக் கலை மற்றும் கட்டிடக் கலை வளர்ந்தது. மன்னர் சினெபெரு காலத்தில் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைகாக சடலங்களை மம்மிப்படுத்தி பிரமிடுகளில் அடக்கம் செய்ய கீசா நகரத்தில் பிரமிடுகள் நிறுவப்பட்டன.[13] இவ்வம்சத்தின் ஒவ்வொரு மன்னரும் தனக்கென குறைந்தது ஒரு நினைவுச் சின்னமாக கல்லறைப் பிரமிடு நிறுவினார்கள். பழைய எகிப்திய இராச்சியத்தின் கீசா நகரத்தின் கிசாவின் பெரிய பிரமிடு உள்ளிட்ட பிரமிடுகளின் தொகுதிகளாலும், பெரிய ஸ்பிங்ஸ்களாலும் புகழ்பெற்றது.
எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் ஆண்ட பழைய இராச்சிய ஆட்சிக் காலத்தில் (கிமு 2498 – 2345) மன்னர் யுசர்காப் (கிமு 2494–2487) ஆட்சியில் இரா எனும் சூரியக் கடவுள் வழிபாடு துவங்கியது. சூரியக் கடவுளுக்கு வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன.
யுசர்காப்பின் மகன் சகுரா ஆட்சியில் (கிமு 2487–2475) எகிப்தின் அண்டைப்பகுதிகளைக் கைப்பற்றினார். சகுராவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் நெபெரிர்கரே ககாய் (கிமு 2475–2455), புதிய அரச பட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஐந்தாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் நெபெரிர்கரே ககை ஆட்சியில் கிமு 2,40-இல் கட்டப்பட்ட கல்லறை, டிசம்பர், 2018ல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.[14][15][16]
இவருக்குப் பின்னர் வந்த மன்னர்களான நெபெரேபிரே (கிமு 2455–2453) மற்றும் செப்செகரே ஆகியோர் குறுகிய காலமே பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்டனர்.[17]
நீண்ட காலம் எகிப்தை ஆண்டவர்களின் இவ்வம்சத்தின் மன்னர்கள் நியூசெர்ரே இனி, மென்கௌஹோர் கையூ, ஜெத்கரே இசேசி மென்கௌரே மற்றும் உனாஸ் ஆவர்.
பழைய எகிப்திய இராச்சியத்தினர் செங்கடல் வழியாக, பண்டைய அண்மை கிழக்கு நாடுகளுக்கு கருங்காலி மரப்பொருட்கள், நறுமண ஊதுபத்திகள், தங்கம் மற்றும் செப்புப் பாத்திரங்களை ஏற்றுமதி செய்வதற்கு மரக்கலங்களை கட்டினர்.
பழைய எகிப்திய இராச்சியத்தின் ஆறாம் வம்ச மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2345–2181), மன்னர்களின் ஆதிக்கம், பிரதேச மாகாண ஆளுநர்களின் எழுச்சியால் படிப்படியாக வீழ்ச்சியடைத் துவங்கியது.
மன்னர் இரண்டாம் பெப்பியின் (கிமு 2278–2184) மறைவிற்குப் பின் வாரிசுரிமைக்காக நடைபெற்ற உள்நாட்டுப் போரால், பழைய எகிப்திய இராச்சியம் முற்றிலும் வீழ்ச்சியடைந்தது. மேலும் நைல் ஆற்றின் வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும் பழைய எகிப்திய இராச்சியம் சீரழிந்தது. பழைய எகிப்திய இராச்சியத்தின் முடிவில் கிமு 2184 முதல் கிமு 2055 முடிய 129 ஆண்டுகள் எகிப்தில் எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் நிலவியது.[18]
எகிப்தின் பழைய இராச்சியத்தின் 3 – 6 வரையிலான வம்ச ஆட்சியாளர்கள் காலத்தில் (கிமு 2649–2150) கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலைகள் செழித்திருந்தது. தங்கம், வெள்ளி, செப்பு மற்றும் நவரத்தினங்களால் அழகிய நகைகள் செய்தனர். மரம், கல், படிகத்தால் அழகிய சிற்பங்களை வடித்தனர். கருங்கற்களால் பெரிதும், சிறிதுமான பிரமிடுகள் கட்டப்பட்டது. இறந்த மன்னர்கள், அரச குடும்பத்தினரது பதப்படுத்தப்பட்ட மம்மிகளை பிரமிடுகளில் மரியாதைகளுடன் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது.[19]மக்கள் பார்வோனை கடவுளாக வழிபட்டாலும், இரா எனும் சூரியக் கடவுள் வழிபாடும் இருந்தது.
இந்த இராச்சியத்தின் கலைகள் எகிப்திய சமயத்தை மையமாகக் கொண்டு விளங்கியது.[20]கல்லறைப் பிரமிடுகள், கடவுள்களில் சிற்பஙகள் மற்றும் கடவுளர்களின் விலங்கு மற்றும் பறவைச் சித்திரங்களை வரைதல், வரலாற்று நிகழ்வுகளை கருங்கல் பலகைகளில் எழுதுதல் போன்ற கலைகளை, துவக்க கால அரச மரபுகளைப் பின்பற்றி பழைய எகிப்து இராச்சியத்தினரும் வளர்த்தனர்.[20][21][22]
இவர்களது சிற்பங்கள் விலங்கு அல்லது பறவைகளின் தலையுடனும், மனித உடலுடன் கூடியதாக விளங்கின.[20] மேலும் மனிதத் தலையுடன் விலங்குகளின் உடலுடனும் பல சிற்பங்களும், சித்திரங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மனித தலையுடன், விலங்கு உருவம் கொண்டது. இவர்களது சிற்பங்களில் கடவுளின் சிற்பங்களுடன் பார்வோன்களின் சிற்பங்களும் முதன்மையாக இடம் பெற்றுள்ளன. சிற்பங்களிலும், சித்திரங்களிலும் ஆண்களைப் பெரிதாகவும், பெண்களை அதைவிடச் சற்று சிறிதாக காண்பிக்கும் வழக்கம் நிலவியது.
ஆண்ட எகிப்தின் இராச்சியங்களுக்கு தக்கவாறு மனிதச் சிற்பங்களிலும் வேறுபாடு கொண்டிருந்தது. பழைய எகிப்து இராச்சியக் கால ஆண்களின் சிற்பங்கள் அகன்ற தோளுடன், நீண்ட சதைப்பற்றுள்ள உடலுடன் அமைந்திருந்தது. பெண்களின் சிற்பங்களின் குறுகிய தோள், சிறுத்த உடல், இடை மற்றும் நீண்ட கால்களுடன் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பெண்களின் கண்கள் நீண்டதாக இருந்தது. இதற்காக சிற்பக் கலையில் உடலைப் பிரித்து வகைப்படுத்துவதில் எட்டு வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தனர். அவை; தலையின் மேல் பகுதி, முடி ஒழுங்கு, கழுத்தின் அடிப்பகுதி, கையின் அக்குல் பகுதி, முழங்கை முனைப் பகுதி, தொடையின் மேல் பகுதி, இடுப்பின் கீழ் பகுதி, முழங்கால், மற்றும் காலின் நீண்ட பகுதி ஆகும். சிற்பம் அல்லது சித்திரங்களின் கால் பாதம் முதல் முடி வரை மூன்றாக பிரித்தனர். அவைகள் பாதம் முதல் முழங்கால் வரை முதல் பகுதியாகவும், முழங்கால் முதல் முழங்கை வரை ஒரு பகுதியாகவும்; இறுதியாக முழங்கை முதல் மயிர் வரை ஒரு பகுதியாக பிரித்துள்ளனர்.
மன்னர்களின் சிற்பங்கள், சித்திரங்கள் இளமை மற்றும் அழகுடன் தனித் தன்மையாக விளங்கியது.[25] பழைய எகிப்து இராச்சியத்தின் மன்னர்களின் சிற்பங்கள் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் தங்கள் மனைவிமார்கள் அல்லது கடவுளருடன் இருக்கும் குழு சிற்பங்கள் சாதாரனமாக காணப்படுகின்றன. சிற்பங்களை நிறுவுவதற்கு கருங்கல் அல்லது தீக்கல் பயன்படுத்தினர்.[26]
பண்டைய எகிப்திய மொழியில் நான்கு வேறுபட்ட நிறங்களை சுட்டுகிறது. அவைகள் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகும். கருப்பு நிறம் பண்டைய எகிப்தில் நைல் ஆற்றின் வெள்ளத்தின் போது கொண்டு வரப்படும் கருநிற வண்டல் மண்ணைக் குறிக்கிறது. பச்சை நிறம் வேளாண்மை, மறுபிறப்பையும், சிவப்பு நிறம் இரா எனும் சூரியக் கடவுளையும் மற்றும் அதன் கதிர்களையும், பிறவிச் சுழற்சியையும், வெள்ளை நிறம் தூய்மை மற்றும் புனிதத்தையும் குறிக்கிறது.
எகிப்தின் பழைய இராச்சியத்தின் பார்வோன் மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் கூடிய சிற்பம் எகிப்தியர்களின் சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.[27]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.