பாரிட் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
பாரிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Parit Federal Constituency; சீனம்: 巴力国会议席) என்பது மலேசியா, பேராக், பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P069) ஆகும்.[7]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...
பாரிட் (P069) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Parit (P069) Federal Constituency in Perak | |
மாவட்டம் | பேராக் தெங்கா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 47,915 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாரிட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாரிட், துரோனோ, செரி இசுகந்தர், போத்தா, பூசிங், புருவாஸ், பத்து காஜா |
பரப்பளவு | 560 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் இசுமிமாட் தாயிப் (Muhamamd Ismi Mat Taib) |
மக்கள் தொகை | 60,988 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
மூடு
பாரிட் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.