மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகு From Wikipedia, the free encyclopedia
போத்தா (மலாய்: Bota) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், பேராக் தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மாவட்டக் கிராமப்பகுதி ஆகும். முக்கிம் என்று அழைக்கப் படுகிறது. இரு பகுதிகளை உள்ளடக்கியது: போத்தா கிரி (Bota Kiri) மற்றும் போத்தா கானான் (Bota Kanan). இரு பகுதிகளும் பேராக் நதியால் பிரிக்கப்பட்டு உள்ளன. போத்தா அதன் டுரியான் பழங்களுக்கு நன்கு அறியப் பட்ட கிராமப் பகுதியாகும்.
போத்தா Bota | |
---|---|
ஆள்கூறுகள்: 4°21′0″N 100°52′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி. 1700 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
இணையதளம் | http://www.mdpt.gov.my/ |
போத்தா பகுதியின் பழைய பெயர் பிரம்மன் இந்திரா (Brahman Indera). [1] பூதம் எனும் சொல்லில் இருந்து போத்தா எனும் சொல் உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தப் பகுதியின் பெயர் 18-ஆம் நூற்றாண்டில் இங்கு இருந்த ஒரு மாபெரும் பூதத்தின் பெயருடன் இணைந்து வந்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.[2]
உள்ளூர்வாசிகளின் நம்பிக்கையின்படி போத்தா என்பது குகைகளில் மறைந்து வாழும் ஒரு பெரிய இராட்ச பூதமாகும்.[3]) அந்தப் பூதத்தின் பெயரில் அந்த இடத்திற்கும் பெயர் வந்து இருக்கலாம் என்று இன்றும் நம்புகிறார்கள்.
இங்கு மலாய் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இவர்களை மூன்று முக்கியக் குழுக்களாகப் பிரிக்கலாம். பஞ்சார் (Banjar) மக்கள்; பேராக் மாநிலப் பூர்வீக மக்கள்; மற்றும் கெடா மாநிலப் பூர்வீக மக்கள். பஞ்சார் மக்கள் என்பவர்கள் போர்னியோ, கலிமந்தான் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
போத்தாவின் பெரும்பான்மையான மக்கள் பேராக் மாநிலப் பூர்வீகவாசிகள். இவர்கள் பேராக் ஆற்றின் கரைகளில் குடியமர்ந்து உள்ளனர். கெடா பூர்வீகவாசிகள் 1960-களில் இந்த நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இப்பகுதியில் ஜாவானிய மற்றும் பூகிஸ் மக்களின் தடயங்களும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.