மலேசிய இந்தியர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய இந்தியர்கள் (மலாய்: Orang India Malaysia; ஆங்கிலம்: Malaysian Indians; மலையாளம்: മലേഷ്യ ഇന്ത്യൻ വംശജർ; இந்தி: भारतीय मलेशियन; தெலுங்கு:మలేషియన్ భారతీయులు); என்பவர்கள் இந்திய மரபுவழி மலேசியர்கள்.
| |||||||||||||||||||||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(2,019,600 - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்) | |||||||||||||||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||
மலேசியத் தீபகற்பம் | |||||||||||||||||||||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||||||||||||||||||||
(பெரும்பான்மை/ஆதிக்கம்): தமிழ் மேலும்: ஆங்கிலம் · மலாய் · மலையாளம் · தெலுங்கு · பஞ்சாபி · வங்காளம் · குசராத்தி · இந்தி · மங்லீஷ் (கிரியோல்) | |||||||||||||||||||||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||
இந்து சமயம் · கிறித்தவம் · சீக்கிய சமயம் · பகாய் சமயம் · இசுலாம் · சமணம் |
இவர்களில் பெரும்பாலோர் மலாயாவின் பிரித்தானியர்களின் குடிமைப் படுத்தலின் போது இந்தியாவில் இருந்து குடியேறிவர்களின் சந்ததியினர் ஆவர்.
இதற்கு முன்பு 6-ஆம் நூற்றாண்டில் இருந்தே தமிழர்கள் இங்கு குடியேறி உள்ளனர். தற்கால மலேசியாவில், மலாய்; மலேசிய சீனர் இனங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரும் இனக் குழுவாக உள்ளனர்.
2020-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மலேசிய மக்கள்தொகையில் 6.8% விழுக்காட்டினர்.[1] இருப்பினும் மலேசியாவின் தொழில்முறைப் பணியாளர்களில் இவர்களின் விழுக்காடு மிகக் கூடுதலாக உள்ளது.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர் மலேசியத் தமிழர்கள் ஆகும். மலேசிய மலையாளிகள், மலேசியத் தெலுங்கர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற இனக் குழுக்களும் உள்ளனர்.
வெளிநாடு வாழ் உலக இந்தியர்களில் மலேசிய இந்தியர்கள் ஐந்தாவது பெரிய சமூகமாக உள்ளனர்.