மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia
மகாலெட்சுமி அர்ஜூனன் (பிறப்பு: 25 மே 1969); (மலாய்: Mahaletchumy Arujanan; ஆங்கிலம்: Mahaletchumy Arujanan); என்பவர் மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவியலாளர் ஆவார்.[1]
மகாலெட்சுமி அர்ஜூனன் Mahaletchumy Arujanan | |
---|---|
மகாலெட்சுமி அர்ஜூனன் தன் தொழில் பயணம் குறித்து உரை நிகழ்த்துகிறார் | |
பிறப்பு | 25 மே 1969 கிள்ளான், சிலாங்கூர், மலேசியா |
பெற்றோர் | அர்ஜூனன் பெரியசாமி மரியாயி |
வாழ்க்கைத் துணை | செல்வமுத்து ராஜா |
பிள்ளைகள் | கோமளா தீபா |
அனைத்துலக விவசாய உயிரித் தொழில்நுட்பப் பயன்பாட்டு அமைப்பின் (International Service for the Acquisition of Agribiotech Applications) ஒருங்கிணைப்பாளராகப் பணி புரிகிறார்.
அதே வேளையில் மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தின் (Malaysian Biotechnology Information Center) நிர்வாக இயக்குனராகவும் சேவை செய்கிறார்.[2][3]
மகாலெட்சுமி அர்ஜூனன், மலேசியா, சிலாங்கூர், கிள்ளான், நகரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் செல்வமுத்து ராஜா, ஒரு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணி புரிந்தவர்.
கிள்ளானில் தன் தொடக்க நிலைக் கல்வியைத் தொடங்கினார். 1993-ஆம் ஆண்டில் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல்; உயிர் வேதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 2013-ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் அறிவியல் தகவல் தொடர்பு துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
2003-ஆம் ஆண்டு சனவரி மாதம், மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தில் திட்டமிடல் அதிகாரியாகச் சேர்ந்தார். பின்னர் 2005-ஆம் ஆண்டு மே மாதம், அதே மையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றார்.[4]
மலேசியாவின் முக்கிய அமைச்சகங்களுக்கும்; அரசாங்க நிறுவனங்களுக்கும் மலேசிய உயிரித் தொழில்நுட்பத் தகவல் மையத்தை அறிமுகப் படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். மேலும் அனைத்துலக அமைப்புகளுடன் வலுவான உறவுகளை உருவாக்கினார்.[5][6]
மலேசியப் பெண்கள் வார இதழின் (Malaysian Women's Weekly) 2015 டிசம்பர் இதழில், சிறந்த பெண்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப் பட்டார்.[7]
அமெரிக்க அறிவியல் சஞ்சிகையின் (The Scientific American Worldwide View) 7-ஆவது பதிப்பில் உலகளாவிய உயிரித் தொழில்நுட்பத் துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக இவர் பட்டியலிடப்பட்டு உள்ளார்.[8]
மலேசியாவின் முதல் உயிரியல் தொழிநுட்பச் செய்தித்தாள் தி பெட்ரி டிஷ் (The Petri Dish). அதை மகாலெட்சுமி அர்ஜூனன் தான் நிறுவினார்.
2010-ஆம் ஆண்டு, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான அறிவியல் பொதுப் புரிதலுக்கான உலக அறிவியல் அகாடமி (The World Academy of Sciences) பரிசைப் பெற்றவர்.
மகாலெட்சுமி அர்ஜூனன் பல அமைப்புகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.