ஜான் திவி
இந்திய தேசிய இராணுவ வீரர் / From Wikipedia, the free encyclopedia
ஜான் திவி (John Aloysius Thivy, 1904 - 4 சூன் 1959) மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.
விரைவான உண்மைகள் ஜான் திவிJohn Thivy约翰电视, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் ...
ஜான் திவி John Thivy 约翰电视 | |
---|---|
![]() | |
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர் | |
பதவியில் 1946–1947 | |
பின்னவர் | பூத் சிங் |
பதவியில் 1946–1947 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1904 கோலாகங்சார், பேராக் |
இறப்பு | சூன் 4, 1959 கோலாலம்பூர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல் |
மூடு
இந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு பர்மா முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். 1945 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் நேரு முக்கிய பங்கு வகித்தார்.