துரோனோ
From Wikipedia, the free encyclopedia
துரோனோ (Tronoh, சீனம்: 宝座), மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம் உள்ளது. பத்து காஜா, மெங்லெம்பு போன்ற சிறு நகரங்கள் உள்ளன. பூசிங், லகாட், புக்கிட் மேரா (கிந்தா), பாப்பான் போன்ற குறு நகரங்களும் உள்ளன. துரோனோ, ஈப்போ மாநகரத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. துரோனோ சட்டமன்றத் தொகுதிக்கு வி. சிவகுமார் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
விரைவான உண்மைகள் துரோனோTronoh பேராக், நாடு ...
![]() | |
ஆள்கூறுகள்: 4°25′21.91″N 100°59′35.36″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
மலேசியாவில் பிரசித்தி பெற்ற மலேசியப் பெட்ரோனாஸ் பல்கலைக்கழகம், 1000 ஏக்கர் நிலப்பரப்பில் 1997ஆம் ஆண்டு இங்கு உருவாக்கம் பெற்றது. இந்தப் பல்கலைக்கழகமும்கூட அந்த நன்னீர் ஏரிகளுக்கு மையத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.