மலேசிய மலாயர்
மலேசியாவில் குடியேறிய மலாய் துணை இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
மலேசிய மலாயர் (மலாய்: Orang Melayu Malaysia; ஆங்கிலம்: Malaysian Malays; சீனம்: 亚罗牙也县) என்பவர்கள் மலாய் இனத்தைச் சேர்ந்த மலேசியர்கள் ஆவார்கள். இவர்களின் வம்சாவளியினர் மலாய் உலகில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தோன்றியவர்கள் ஆவார்கள்.
விரைவான உண்மைகள் ملايو مليسيا, மொத்த மக்கள்தொகை ...
ملايو مليسيا | |
---|---|
மலேசிய மலாயர் | |
மொத்த மக்கள்தொகை | |
17,610,458 மலேசிய மக்கள் தொகையில் 57.9% (2023)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா | |
மொழி(கள்) | |
மலாய் | |
சமயங்கள் | |
சன்னி இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
மூடு
2023-ஆம் ஆண்டு மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மலேசியாவின் மொத்த மக்கள்தொகையில் 17.6 மில்லியன்; அதாவது 57.9% விழுக்காடாக உள்ளனர். இவர்கள் நாட்டின் மிகப்பெரிய இனக்குழுவினர் ஆகும்.
இவர்களை இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்: பூர்வீக மலாயர்கள் அல்லது உள்ளூர் மலாயர்கள் (Indigenous Malays or Local Malays); மற்றும் வர்த்தக மலாயர்கள் அல்லது வெளிநாட்டு மலாயர்கள் (Trading Malays or Foreign Malays).[2][3]