![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Sentul_KTM_Station_outview_%2528220714%2529_01.jpg/640px-Sentul_KTM_Station_outview_%2528220714%2529_01.jpg&w=640&q=50)
செந்தூல் கொமுட்டர் நிலையம்
செந்தூல், கோலாலம்பூரில் உள்ள கொமுட்டர் நிலையம் / From Wikipedia, the free encyclopedia
செந்தூல் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Sentul Komuter Station; மலாய்: Stesen Sentul Komuter) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஈப்போ சாலைக்கு அருகில் உள்ள பெர்கெந்தியான் சாலையில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். கோலாலம்பூர், செந்தூல் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், முன்பு செந்தூல் தொடருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது.[1]
![]() | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பெர்கெந்தியான் சாலை, செந்தூல், கோலாலம்பூர் | ||||||||||
ஆள்கூறுகள் | 3°11′0″N 101°41′20″E | ||||||||||
உரிமம் | ![]() | ||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) ரேபிட் ரெயில் (MRT) | ||||||||||
தடங்கள் | ![]() பத்துமலை-புலாவ் செபாங் (கேடிஎம் கொமுட்டர்) | ||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை & 1 தீவு நடைமேடை | ||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KC01 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | KC01 1905 | ||||||||||
மறுநிர்மாணம் | 2010 | ||||||||||
மின்சாரமயம் | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
2015-ஆம் ஆண்டு முதல் இந்த நிலையம், கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையின் சிரம்பான் வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
நீண்ட காலமாக, இந்த நிலையம் செந்தூல்-கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வடக்கு முனையமாக செயல்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டை வழித்தடக் கட்டுமானத்திற்கு (Klang Valley Double Tracking Upgrade) முன்னர், இந்த நிலையம் பத்துமலை-கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் இயங்கி வந்தது.
செந்தூல் கொமுட்டர் நிலையம், செந்தூல் தீமோர் இலகுத் தொடருந்து நிலையத்தில் இருந்து வடமேற்கே 730 மீ தொலைவிலும்; செந்தூல் இலகுத் தொடருந்து நிலையத்தில் இருந்து தென்மேற்கே 900 மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[2]