பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்
மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் தொடருந்து சேவை / From Wikipedia, the free encyclopedia
பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம் அல்லது சிரம்பான் வழித்தடம் (ஆங்கிலம்: Seremban Line அல்லது Batu Caves–Pulau Sebang Line; மலாய்: Laluan Seremban அல்லது Laluan Komuter Seremban) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.
பத்துமலை-புலாவ் செபாங் Batu Caves–Pulau Sebang Line | |||
---|---|---|---|
KL சென்ட்ரலில் KTM 92 ரக இரயில் | |||
கண்ணோட்டம் | |||
நிலை | செயலில் உள்ளது | ||
உரிமையாளர் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
வழித்தட எண் | (நீலம்) | ||
வட்டாரம் | சிலாங்கூர் கோலாலம்பூர் நெகிரி செம்பிலான் மலாக்கா | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 26 + 3 நிலையங்கள் | ||
இணையதளம் | www | ||
சேவை | |||
அமைப்பு | கேடிஎம் பயணிகள் KTM Komuter | ||
சேவைகள் | பத்துமலை - தம்பின் - புலாவ் செபாங் | ||
பாதை எண் | 1 | ||
செய்குநர்(கள்) | மலாயா தொடருந்து நிறுவனம் | ||
பணிமனை(கள்) | சிரம்பான் | ||
சுழலிருப்பு | 37 தொடருந்துகள் (six-car trains) | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 14 ஆகத்து 1995; 28 ஆண்டுகள் முன்னர் (1995-08-14) | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 135 km (84 mi) | ||
தட அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) | ||
மின்மயமாக்கல் | வார்ப்புரு:25 kV 50 Hz | ||
இயக்க வேகம் | Up to 120 km/h (75 mph) | ||
|
இந்த வழித்தடம், மின்சார இரயில்கள் மூலமாக இயக்கப்படுகிறது. பத்துமலை; புலாவ் செபாங்; தம்பின் ஆகிய மூன்று நகரங்களை இந்தச் சேவை இணைக்கின்றது.
இந்தச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் சிரம்பான் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன.
15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை கோலாலம்பூர் ரவாங் நகரங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் இப்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த வழித்தட அமைப்பு கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்புக் கூறுகளில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில் இந்த பத்துமலை-புலாவ் செபாங் வழித்தடம்; என நீல நிறத்தில் அடையாளமிடப்பட்டு உள்ளது. அந்த முன்னாள் சிரம்பான் வழித்தடத்திற்கு சிரம்பான் தொடருந்து நிலையத்தின் பெயரிடப்பட்டது.