அணு எண் 24 கொண்ட வேதிப்பொருள். From Wikipedia, the free encyclopedia
குரோமியம் (தமிழில் நீலிரும்பு, Chromium) Cr என்கிற வேதியியல் குறியீடு கொண்டுள்ள ஒரு தனிமம். இதுவொரு மாழையும் (உலோகமும்) ஆகும். இதன் அணுவெண் 24. குரோமியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. குரோமியத்தின் செழுமை பூமியின் மேலோட்டுப் பகுதியில் ஓரளவு செறிவாகக் (0.02 %) காணப்படுகிறது. குரோமியம், குரோமைட்டு என்ற செவ்வீயத் தாது, குரோமிடைட்டு, குரோகோய்சைட்டு போன்ற கனிமங்களில் காணப்படுகின்றது. இதில் குரோமைட்டு கனிமம் இந்தியாவில் சேலம் மாவட்டத்திலும் துருக்கி, ஈரான், அல்பேனியா, பின்லாந்து, பிலிப்பைன்சு, மலகாசி, தென் உரொடீசியாவிலும் கிடைக்கின்றது.
குரோமியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
24Cr | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி போன்ற உலோகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | குரோமியம், Cr, 24 | |||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈkroʊmiəm/ KROH-mee-əm | |||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 6, 4, d | |||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
51.9961(6) | |||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ar] 4s13d5 2, 8, 13, 1 | |||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 7.19 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 6.3 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 2180 K, 1907 °C, 3465 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 2944 K, 2671 °C, 4840 °F | |||||||||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 21.0 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 339.5 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 23.35 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 6, 5, 4, 3, 2, 1, -1, -2 (வலிமையான அமில ஒக்சைட்டு) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.66 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: 652.9 kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1590.6 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 2987 kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 128 பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 139±5 pm | |||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic | |||||||||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | AFM (rather: SDW[1]) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 125 nΩ·m | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 93.9 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 4.9 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (20 °C) 5940 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 279 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 115 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 160 GPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.21 | |||||||||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
8.5 | |||||||||||||||||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 1060 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 1120 MPa | |||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-47-3 | |||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: குரோமியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
இத் தனிமம் 1797 ல் வாக்குலின் என்ற வேதியலாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குரோ கோய்சைட்டு கனிமத் தூளை பொட்டாசியம் கார்பனேட்டுடன் கலந்து கொதிக்க வைக்க ஈய கார்பனேட்டும் ஒரு வகையான மஞ்சள் நிற நீர்மமும் விளைந்தன. இது ஒரு வகைப் புதிய காடியின் (அமிலத்தின்) பொட்டாசிய உப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். பல்வேறு வினைமங்களுடன் இந்த நீர்மத்தைச் சேர்க்க கரைசல் பல்வேறு நிறங்களைப் பெறுவதைக் கண்டார். பாதரச உப்புக்கள் சிவப்பு நிறத்தையும், ஈய உப்புக்கள் மஞ்சள் நிறத்தையும், டின் குளோரைடு பச்சை நிறத்தையும், கரைசலுக்கு ஊட்டின. இதன் காரணமாக நிறம் என்ற பொருள் தரக் கூடிய கிரேக்க மொழிச் சொல்லான 'குரோமா' என்ற சொல்லிலிருந்து குரோமியம் என்ற சொல்லை உருவாக்கி அப்புதிய தனிமத்திற்குப் பெயர் சூட்டினார்
அலுமினியத்தினால், குரோமியம் ஆக்சைடை ஆக்சிசனீக்க வினைக்கு வெப்பவூட்டல் முறையினால் உட்படுத்திப் பெறமுடியும். இது மாங்கனீசு உலோகத்தைத் தனித்துப் பிரிப்பதற்குப் பின் பற்றப்படும் வழிமுறையை ஒத்தது.
தோராயமாக 2013 ஆம் ஆண்டில் மட்டும் 28.8 மில்லியன் மெட்ரிக் டன் சந்தைப்படுத்தப்படும் குரோமைட்டு தாது குரோமைட் தாது உற்பத்தி செய்யப்பட்டது மற்றும் 7.5 மெட்ரிக் டன் குரோமியத் தாதுவானது பெரோகுரோமியமாக மாற்றப்பட்டது[2]. குரோமைட்டு தாது இறுதிகட்டச் செயல்முறையில் பெர்ரோகுரோமாக மாற்றப்படுகிறது. இதன் இறுதிப்பயன்பாடு துரு ஏறாத எஃகு தயாரிக்கப் பயன்படுவதுமேயாகும் என்று யான் எஃப். பாப் என்பவர் ஒரு செய்தி இதழில் வெளியிட்டார். உலகில் 2013 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா (48%), கசகிசுத்தான் (13%), துருக்கி (11%), இந்தியா (10%) போன்ற நாடுகள் அதிக அளவில் குரோமியம் தாதுவை உற்பத்தி செய்தன. எஞ்சியிருக்கும் 18% குரோமியத்தை உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்தன. குரோமியம் தாதுவை சுத்திகரிப்பு செய்வதால் இரண்டு முக்கிய பொருட்கள் பெரோகுரோமியமும் உலோக குரோமியமும் முக்கியமான விளைபொருட்களாகக் கிடைக்கின்றன. இந்த பொருட்களை தாதுப்பொருள்களில் இருந்து தயாரிக்கும் செயல்முறைகள் கணிசமாக வேறுபடுகின்றன. பெரோகுரோமியம் பேரளவில் உற்பத்தி செய்ய குரோமைட்டு தாதுவானது (FeCr2O4), மின்சாரவில் உலையில் இட்டு ஒடுக்கப்படுகிறது. அல்லது அலுமினோ வெப்பச் செயல்முறையில் சிறிய உலைகளில் இட்டு ஒடுக்கப்படுகிறது. தூய குரோமியம் தயாரிப்பதற்கு முதலில் இரும்பு குரோமியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு வறுத்தல் மற்றும் கழுவிப்பகுத்தல் என்ற இரண்டு படி நிலைகள் பயன்படுகின்றன. கால்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியவற்றை குரோமியத் தாதுவுடன் சேர்த்து கலவையை காற்றின் முன்னிலையில் சூடுபடுத்த வேண்டும். குரோமியம் அதன் ஆறு இணைதிற வடிவில் ஆக்சிசனேற்றமடைகிறது. இரும்பு அதனுடைய நிலைப்புத்தன்மை மிக்க Fe2O3 சேர்மமாக மாறுகிறது. உயர் வெப்பனிலைகளில் மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த கழுவிப்பகுத்தல் செயல்முறைகளால் குரோமேட்டுகள் கரைந்து கரையாத இரும்பு ஆக்சைடு வீழ்படிவாகிறது. குரோமேட்டு கந்தக அமிலத்தின் மூலம் டைகுரோமேட்டாக மாற்றப்படுகிறது.
இவ்வினையில் உருவாகும் டைகுரோமேட்டை கார்பன் சேர்த்து அலுமினோ வெப்பச் செயல்முறை மூலம் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.
குரோமியம் ஒரு சாம்பல் நிற அதிக பளபளப்பும் கடினமும் கொண்டுள்ள மாழை. அதன் உருகுநிலை உயர்வானது. குரோமியத்தில் பெரும்பாலுமாக காணப்படும் உயிரியவேற்ற (ஆக்சிசனேற்றா) நிலைகள் +2, +3, +6 ஆகும்; அதில் +3 உயிரியவேற்ற நிலை அதிகளவு நிலைப்பானது. +1, +4, +5 உயிரியவேற்ற நிலைகள் அரிதானவை. +6 உயிரியவேற்ற நிலை கொண்டுள்ள நீலிரும்புச் சேர்மங்கள் வலுவான உயிரியவேற்றிகள் (oxidants). குரோமியம் ஆக்சிசனுடன் மந்தமாகவே தாக்கமடையும், அதாவது மிகமெல்லிய, கரையாத, பாதுகாப்பளிக்கும் ஆக்சைடுப் படலத்தைக் குரோமியத்தின் மேல் தோற்றுவிக்கும். இது மேலும் அந்த உலோகம் ஆக்சிசனேற்றமடைவதைத் தடுக்கிறது.
இதன் வேதிக் குறியீடு Cr ஆகும் .இதன் அணுவெண் 24 ,அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும். குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான, பொலிவு மிக்க, உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும். அதனால் இதை முழுஅளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை ஆக்ஸி- ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது . செந்தணலாய் சூடுபடுத்தப் பட்ட குரோமியம் நீராவியைப் பகுக்கின்றது .
காற்று வெளியில் நிலையானது. நீர்த்த அமிலங்களில் மெதுவாகக் கரைந்து, காற்று வெளித் தொடபில்லாத போது நீல நிறத்தில் குரோமஸ் உப்புக் கரைசலையும், ஐதரசனையும், காற்று வெளித் தொடர்பு கொள்ளும் போது அக்கரைசல் விரைந்து பச்சை நிறங் கொண்ட குரோமிக்கு உப்புக் கரைசலாகவும் மாற்றம் பெறுகிறது. உயர் உருகு நிலை, உயரளவு கடினத் தன்மை ,பிற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகத்தை ஏற்படுத்தக் கூடிய நல்லிணக்கம், போன்ற பண்புகள் கலப்பு உலோகத் துறையில் பலன் தருகின்றன. மிகச் சிறிதளவு வேற்றுப் பொருள் தூய குரோமியத்தோடு கலந்திருந்தாலும் அதை நொறுங்கும் தன்மையுடையதாக்கி விடுகின்றது. ஆனால் குரோமியக் கலப்பு உலோகங்கள் இக் குறைபாடுகளைப் பெற்றிருப்பதில்லை .
குரோமியம் நல்ல மின் மற்றும் வெப்பங் கடத்தியாக உள்ளது. ஆனால் 37 பாகை செல்சியசில் குரோமியத்தின் இத்தகைய பண்புகள் மாறுதலுக்கு உள்ளாகின்றன. இதன் அக உராய்வு பெருமத்தை எட்டுகிறது. மீள் குணகம் சிறுமத்தைத் தொடுகிறது. வெப்பஞ் சார்ந்த பெருக்கம், வெப்ப மின்னியக்கு விசை ,மின் கடத்தும் திறனில் கூட திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெப்ப நிலை சார்ந்து இணை திறனில் ஏற்படும் மாற்றங்கள் குரோமியத்தின் உலோக நிலைகளை வேறுபடுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர்
அதிக எண்ணிக்கையில் குரோமியம்(III) சேர்மங்கள் அறியப்படுகின்றன. தனிம நிலைக் குரோமியத்தை ஐதரோ குளோரிக் அமிலம் அல்லது கந்தக அமிலங்க்களில் கரைத்து குரோமியம்(III)அயனிகளைப் பெறலாம். அலுமினியம் அயனியின் கிட்டத்தட்ட அதே அணு ஆரத்தை குரோமியம் அயனியும்(III) கொண்டுள்ளது. குரொம் படிகாரம் மற்றும் படிகாரம் போன்ற சில சேர்மங்களில் அவை ஒன்றுக் கொன்று தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. குரோமியம் அயனிகள் எண்முக அனைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. குரோமியம் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அயனிகளைப் பொருத்தே அந்த அணைவுச் சேர்மத்தின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது.
அதிக எண்ணிக்கையில் குரோமியம்(III) சேர்மங்கள் அறியப்படுகின்றன. தனிம நிலைக் குரோமியத்தை ஐதரோ குளோரிக் அமிலம் அல்லது கந்தக அமிலங்க்களில் கரைத்து குரோமியம்(III)அயனிகளைப் பெறலாம். அலுமினியம் அயனியின் கிட்டத்தட்ட அதே அணு ஆரத்தை குரோமியம் அயனியும்(III) கொண்டுள்ளது. குரொம் படிகாரம் மற்றும் படிகாரம் போன்ற சில சேர்மங்களில் அவை ஒன்றுக் கொன்று தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. குரோமியம் அயனிகள் எண்முக அனைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. குரோமியம் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அயனிகளைப் பொருத்தே அந்த அணைவுச் சேர்மத்தின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.