![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/SBK_Line_Kajang_Station_Common_Concourse_1.jpg/640px-SBK_Line_Kajang_Station_Common_Concourse_1.jpg&w=640&q=50)
காஜாங் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
காஜாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kajang Railway Station; மலாய்: Stesen Keretapi Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிரம்பான் வழித்தடம், காஜாங் வழித்தடம் ஆகிய இரு வழித்தடங்களில் அமைந்து உள்ளது. மலேசியாவில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரங்களில் ஒன்றான காஜாங் பெருநகர மையத்தில் இருந்து தெற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது.[1]
![]() காஜாங் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | காஜாங், சிலாங்கூர், மலேசியா | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 2°58′58″N 101°47′25″E | ||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | எம்ஆர்டி நிறுவனம் (MRT Corp) ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | ரேபிட் ரெயில் (Rapid Rail) மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) | ||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | மலாயா மேற்கு கடற்கரை ![]() ![]() 14 புத்ராஜெயா ஒற்றைத் தண்டூர்தி ETS கேடிஎம் இடிஎஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை; 1 தீவு நடைமேடை (KTM) 1 தீவு நடைமேடை (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 (KTM) 2 (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | KB06 மேற்பரப்பு KG35 உயர்த்தப்பட்டது PT01 உயர்த்தப்பட்டது | ||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை அளவுகள் | 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | 31 | ||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | KB06 KG35 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1897 (KTM) 17 சூலை 2017 (MRT) | ||||||||||||||||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 10 நவம்பர் 1995 (KTM) | ||||||||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 1995 (KTM) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முந்தைய பெயர்கள் | காஜாங் நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
புத்ராஜெயா ஒற்றைத் தண்டூர்தி சேவைக்கும், காஜாங் தொடருந்து நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் புத்ராஜெயா ஒற்றைத் தண்டூர்தி சேவைக்கு ஒரு முனையமாகவும், புத்ராஜெயா வழித்தடற்கான இறுதி நிலையமாகவும் காஜாங் தொடருந்து நிலையம் செயல்படுகிறது. கோலாலம்பூர் மாநகரில் இருந்து காஜாங் பெருநகரம் 21 கி.மீ. தொலைவில், சற்றே அருகில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.
அத்துடன், மலேசியத் தலைநகரமான கோலாலம்பூருக்கு அடுத்த நிலையில் காஜாங் பெருநகரில் அதிகமான கல்விக் கழகங்களும் உள்ளன. அதனால் மாணவர்களின் நடமாட்டமும் அதிகமாகவே உள்ளது. மலேசியாவின் முன்னோடி நகரங்களில் காஜாங் நகரமும் ஒன்றாகும். காஜாங் நகரம் 1800-ஆம் ஆண்டுகளில் உருவானது.[2]