![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/Kajang_2014-02-22_19-41.jpg/640px-Kajang_2014-02-22_19-41.jpg&w=640&q=50)
காஜாங்
From Wikipedia, the free encyclopedia
காஜாங் (ஆங்கிலம், மலாய்: Kajang) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்த நகரம் உலு லங்காட் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.[3] சிலாங்கூர் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் காஜாங் நகரமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் காஜாங், நாடு ...
காஜாங் | |
---|---|
Kajang | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°59′35″N 101°47′20″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | உலு லங்காட் மாவட்டம் |
உருவாக்கம் | 1807 |
நகராட்சி | 1 சனவரி 1997 |
அரசு | |
• நகராட்சித் தலைவர் | ரோசுலி ரகுமான் |
பரப்பளவு | |
• ![]() | 235.71 km2 (91.01 sq mi) |
• நிலம் | 787.61 km2 (304.10 sq mi) |
மக்கள்தொகை (2020[1]) | |
• ![]() | 2,36,240 |
• அடர்த்தி | 1,326/km2 (3,393/sq mi) |
• பெருநகர் | 10,47,356[2] |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 43000 |
தொலைபேசி எண் | 03 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | http://www.mpkj.gov.my |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/75/Kajang_Town_Main_Junction.jpg/640px-Kajang_Town_Main_Junction.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Masjid_Kajang.jpg/640px-Masjid_Kajang.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Haji_Samuri.jpg/640px-Haji_Samuri.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Lotus%27s_Kajang_%28220713%29.jpg/640px-Lotus%27s_Kajang_%28220713%29.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Courts_Mammoth_Kajang.jpg/640px-Courts_Mammoth_Kajang.jpg)
கடந்த சில ஆண்டுகளில், காஜாங் நகரின் மக்கள் தொகை விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் மக்கள் தொகை வளர்ச்சி, ஆண்டுக்கு சராசரி 9% என மதிப்பிடப்பட்டுள்ளது. காஜாங் நகரும் துரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.