மே 7 (May 7) கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன.
- 1711 – டேவிடு யூம், இசுக்கொட்டிய பொருளியலாளர், வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1776)
- 1814 – ராபர்ட் கால்டுவெல், அயர்லாந்து திராவிட மொழியியலாளர் (இ. 1891)
- 1819 – ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1905)
- 1833 – ஜொகான்னெஸ் பிராம்ஸ், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1897)
- 1840 – பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி, உருசிய இசைமைப்பாளர் (இ. 1893)
- 1861 – இரவீந்திரநாத் தாகூர், நோபல் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)
- 1880 – பாண்டுரங்க வாமன் காணே, இந்திய இந்தியவியலாளர், சமக்கிருந்த அறிஞர் (இ. 1972)
- 1883 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941)
- 1892 – சோசப்பு பிரோசு டிட்டோ, யூகொசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (இ. 1980)
- 1901 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (இ. 1961)
- 1919 – இவா பெரோன், அர்ச்செந்தீன நடிகை (இ. 1952)
- 1927 – ரூத் பிராவர் ஜாப்வாலா, செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2013)
- 1935 – அ. மா. சாமி, தமிழக எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் (இ. 2020)
- 1949 – சு. திருநாவுக்கரசர், தமிழக அரசியல்வாதி
- 1968 – கிருஷ்ணா டாவின்சி, தமிழக எழுத்தாளர், இதழாளர் (இ. 2012)
- 1971 – தாமசு பிக்கெட்டி, பிரான்சிய பொருளியலாளர்
- 1984 – கெவின் ஓவன்சு, கனடிய மற்போர் வீரர்
- 1987 – சந்தீப் கிசன், தெலுங்குத் திரைப்பட நடிகர்
- 1989 – அதர்வா, தமிழகத் திரைப்பட நடிகர்
- 1617 – டேவிட் பாப்ரிசியசு, செருமானிய வானியலாளர், இறையியலாளர் (பி. 1564)
- 1825 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1750)
- 1964 – பி. கண்ணாம்பா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1910)
- 1990 – சாம் தம்பிமுத்து, இலங்கை அரசியல்வாதி (பி. 1932)
- 2011 – வில்லார்டு பாயில், நோபல் பரிசு பெற்ற கனடிய இயற்பியலாளர் (பி. 1924)
- 2015 – அமலெந்து குகா, இந்திய வரலாற்றாசிரியர், கல்வியாளர், நூலாசிரியர் (பி. 1924)
- 2021 – எம். ஒய். இக்பால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பி. 1951)