From Wikipedia, the free encyclopedia
கேரி கூப்பர் (Gary Cooper, மே 7, 1901 – மே 13, 1961) என்பவர் ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகராவார்.[1][2] இவர் தனது இயல்பான நடிப்பிற்காக அறியப்படுகிறார். இவர் 1925 ஆம் ஆண்டு முதல் 1960 வரை, 35 ஆண்டுகள் திரைத் துறையில் நடித்தார். ஊமைப்படத்தின் இறுதி யுகத்திலும், ஹாலிவுட்டின் பொற்காலத்திலும் இவர் முக்கியமான நடிகராகக் கருதப்படுகிறார். இவரின் திரைத் தோற்றமானது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவராலும் ரசிக்கப்பட்டது. இவர் தான் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் தன் நடிப்பின் மூலம் அமெரிக்க நடிகர்களில் தனித்துவமான இடைத்தைப் பெற்றுள்ளார்.
கேரி கூப்பர் | |
---|---|
1936ல் கேரி கூப்பர் | |
பிறப்பு | பிராங்க் தோமைய கூப்பர் மே 7, 1901 ஹெலனா, மோன்டானா, அமெரிக்கா |
இறப்பு | மே 13, 1961 60) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை
இறப்பிற்கான காரணம் | புற்றுநோய் |
கல்லறை | புனித இருதய கல்லறை, சவுத்தாம்ப்டன், நியூயார்க் |
மற்ற பெயர்கள் | கூப் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிரிநெல் கல்லூரி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1925–60 |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
சமயம் |
|
வாழ்க்கைத் துணை | வெரோனிகா கூப்பர் (தி. 1933–1961) |
பிள்ளைகள் | 1 |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
garycooper |
கூப்பர் தனது திரை வாழ்க்கையை துணைக் கதாப்பத்திர நடிகராகவும், சண்டைக் காட்சிகளில் நடிப்பவராகவும் துவங்கி, பின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். பின் நவீன கதாநாயகராக ஊமைப்படங்களில் நடித்தார். 1929ஆம் ஆண்டில் விர்ஜினீயன் எனும் பேசும் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[3] பின் 1930களில் திரைப்படம் மற்றும் நாடகத் திரைப்படங்களில் தன் கதாப்பத்திரத் தேர்வில் அதிக கவனம் செலுத்தினார். இதில் குறிப்பிடத்தக்கவையாக 1932இன் எ ஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ் மற்றும் 1935இன் தெ லைவ்ஸ் ஆஃப் எ பெங்கால் டேன்சர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[4] இவரின் திரைக்காலங்களில் புதுவகையான நடிகர், சாதாரண மனிதர்களின் வாகையாளர் போன்ற கதாப்பாத்திரங்களைக் கொண்ட மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டூ டவுன் (1936)[5]. 1941 இல் மீட் ஜான் தோ[6] , த பிரைட் ஆஃப் த யன்கீஸ்[7], 1943இல் ஃபார் ஹூம் த பெல்ஸ் டோல்ஸ்[8] ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
1933ஆம் ஆண்டில் அறிமுக நடிகையான நியூயார்க்கைச் சேர்ந்த வெரோனிகா பால்ஃப் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார்.[9] செர்ஜன்ட் யார்க் மற்றும் ஹை நூன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக அகாதமி விருதைப் பெற்றார்.[9] திரைத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக கெளரவ அகாதமி விருதை 1961இல் பெற்றார். 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதல் 10 திரைப் பிரபலங்களின் தர வரிசையில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 18 ஆண்டுகள் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகத் திகழ்ந்தார். அமெரிக்கத் திரைப்பட நிறுவனமானது பழமையான ஹாலிவுட் திரைப்படங்களின் தலை சிறந்த 25 ஆண் நாயகர்களில் 11வது நாயகராக இவரைத் தேர்வு செய்தது.
கேரி கூப்பர் மே 7, 1901 இல் ஹெலேனா, மொன்ட்டானாவில் பிறந்தார்.[10] இவரின் தந்தை சார்லஸ் ஹென்றி கூப்பர், தாய் அலைஸ். இவரின் தந்தை பெட்ஃபோர்ட்ஷைரிலுள்ள ஹாக்டன் ரெஜிசிலிருந்து புலம்பெயர்ந்த வழக்கறிஞராக இருந்தார்.[11] பின் மொண்ட்டானா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்தார்.[12] இவரின் தாய் கில்லின்ஹாம் , கென்ன்டிலிருந்து புலம்பெயர்ந்து சார்லசை திருமணம் புரிந்தார்.[13] 1906 ஆம் ஆண்டில் சார்லஸ் மிசோரி ஆற்றங்கரையோரத்தில் வடக்கு ஹெலேனாவில் 600 ஏக்கர் திறந்தவெளிக் கால்நடைப்பண்ணையை விலைகு வாங்கினார்[14][15].[16] ஃபிராங்க் மற்றும் அவனது மூத்த சகோதரான ஆர்தரும் அவர்களின் கோடைகால விடுமுறையினை அங்கு சென்று குதிரையேற்றம் செய்தல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டனர்.[17][18] கூப்பர் ஹெலேனாவில் உள்ள சென்ட்ரல் கிரேடு பள்ளியில் பயின்றார்.[19]
அலைஸ் தனது மகனுக்கு ஆங்கிலக்கல்வி வேண்டுமென நினைத்தார். எனவே அவர் தனது மகனை இங்கிலாந்திலுள்ள டன்ஸ்டபிலுள்ள கிராமர் பள்ளியில் சேர்த்தார் அங்கு கேரி கூப்பர் தனது பரம்பரை வீட்டில் உறவினர்களான வில்லியம், எமிலி பார்டன் ஆகியோருடன் தங்கினார். [20][21] கூப்பர், இலத்தீன், பிரஞ்சு, மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றார்.[22]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.