மகாராட்டிரம்
மேற்கு இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र Mahārāṣṭra, ஒலிப்பு: ⓘ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் அவேலி, வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கில் சத்தீசுக்கர், தெற்கில் கருநாடகம், தென்கிழக்கில் தெலுங்கானா மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ. / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
மகாராட்டிரா | |
---|---|
மேலிருந்து இட-வலமாக: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதாப்கட் கோட்டை, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், அசந்தா குகைகளில் உள்ள அவலோகிதரின் ஓவியங்கள், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில், இந்தியாவின் நுழைவாயில் (மும்பை), எலிபண்டா குகைகளில் உள்ள மும்மூர்த்திகள் சிலை, சனிவார்வாடா கோட்டை மற்றும் ஆசூர் சாகிப் நாந்தேத் | |
சின்னம் | |
இந்தியாவில் மகாராட்டிராவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (மும்பை): 18.97°N 72.820°E | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 1 மே 1960 |
தலைநகரங்கள் | மும்பை நாக்பூர்[1] |
மாவட்டங்கள் | 36 |
அரசு | |
• நிர்வாகம் | மகாராட்டிர அரசு |
• ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
• முதலமைச்சர் | ஏக்நாத் சிண்டே |
• சட்டமன்றம் | ஈரவை சட்டமன்ற மேலவை 78 சட்டமன்ற பேரவை 288 |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,07,713 km2 (1,18,809 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3-ஆவது |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 11,23,72,972 |
• தரவரிசை | 2-ஆவது |
• அடர்த்தி | 370/km2 (950/sq mi) |
இனம் | மகாராட்டியர் |
GDP | |
• மொத்தம் (2018–19) | ₹27.96 இலட்சம் கோடி (US$350 பில்லியன்) |
• தலைக்கு (2017–18) | ₹1,80,596 (US$2,300) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MH |
வாகனப் பதிவு | MH |
அலுவல்முறை மொழிகள் | மராத்தி[5][6] |
HDI (2017) | 0.695[7] (medium) · 15-ஆவது |
படிப்பறிவு (2011) | 82.34%[8] |
பால் விகிதம் (2011) | 929 ♀/1000 ♂[8] |
இணையதளம் | www |
†The State of Bombay was split into two States i.e. Maharashtra and Gujarat by the Bombay Reorganisation Act 1960[9] †† Common high court |
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960-இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06-ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15%- உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%-உம் பங்களிக்கிறது.[10][11][12][13]
பிரிவுகள்
மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
- விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள்),
- மராத்வாடா (ஔரங்காபாத் மண்டலம்),
- வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் (நாசிக் மண்டலம்),
- மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் (புணே மண்டலம்),
- கொங்கண் (கொங்கண் மண்டலம்).
நிர்வாகம்
3,07,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்
கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்
அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்
நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்
நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்
புணே கோட்டத்தின் மாவட்டங்கள்
மாநகராட்சிகள்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.[14] இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 18,18,792 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.
மொழி
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், இந்தி, உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்
- மும்பை
- புனே
- நாக்பூர்
- தானே
- பிம்பிரி-சிஞ்ச்வடு
- நாசிக்
- கல்யாண்-டொம்பிவலி
- வசாய்-விரர்
- நவி மும்பை
- அவுரங்காபாத்
சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.