![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/5c/%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AE%25BF%25E0%25AE%25AF_%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A_%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D_%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D_%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588.png/640px-%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%259C%25E0%25AE%25BF%25E0%25AE%25AF_%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A_%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D_%25E0%25AE%259A%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D_%25E0%25AE%2587%25E0%25AE%25B2%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%2588.png&w=640&q=50)
பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி (Belgium national football team, டச்சு: Het Belgisch voetbalelftal; பிரெஞ்சு மொழி: L'équipe de Belgique de football; இடாய்ச்சு மொழி: Die Belgische Fußballnationalmannschaft) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பெல்ஜியம் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். 1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வரும் பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் மேற்பார்த்து வருகின்றது. 1895இல் நிறுவப்பட்ட பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் பழமையானதொரு கால்பந்துச் சங்கமாகும். இந்த அணியின் தன்னக விளையாட்டரங்கமாக பிரசெல்சு நகரில் உள்ள மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம் விளங்குகிறது. தேசிய அணியின் மேலாளராக மார்க் வில்மோட்சு உள்ளார். இந்த அணியினரை சிவப்புப் பேய்கள் (டச்சு: Rode Duivels ; பிரெஞ்சு மொழி: Diables Rouges; இடாய்ச்சு மொழி: Rote Teufel) எனக் குறிப்பிடுகின்றனர்.
![]() | ||||||||
அடைபெயர் | ரோடு டுயிவெல்சு டயபெல்சு ரூஜ் ரோட் டுஃபெல் (சிவப்பு பேய்கள்) | |||||||
---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் (KBVB/URBSFA) | |||||||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | |||||||
தலைமைப் பயிற்சியாளர் | மார்க் வில்மோட்சு[1][2] | |||||||
துணைப் பயிற்சியாளர் | வைடல் போர்கெல்மான்சு[3] | |||||||
அணித் தலைவர் | வின்சென்ட் கொம்பனி[4] | |||||||
Most caps | யான் செயுல்மான்சு (96)[5] | |||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பெர்னார்டு வூர்ஃகோஃப் (30)[5] Paul Van Himst (30)[5] | |||||||
தன்னக விளையாட்டரங்கம் | மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம் | |||||||
பீஃபா குறியீடு | BEL | |||||||
பீஃபா தரவரிசை | 2 ![]() | |||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 2 (சூன் 2015) | |||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 71 (சூன் 2007) | |||||||
எலோ தரவரிசை | 18[6] ![]() | |||||||
அதிகபட்ச எலோ | 2 (செப்டம்பர் 1920) | |||||||
குறைந்தபட்ச எலோ | 74 (செப்டம்பர் 2009) | |||||||
| ||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||
![]() ![]() (பிரசெல்சு, பெல்ஜியம்; 1 மே 1904) | ||||||||
பெரும் வெற்றி | ||||||||
![]() ![]() (பிரசெல்சு, பெல்ஜியம்; 4 சூன் 1994) ![]() ![]() (பிரசெல்சு, பெல்ஜியம்; 28 பெப்ரவரி 2001) | ||||||||
பெரும் தோல்வி | ||||||||
![]() ![]() (இலண்டன், இங்கிலாந்து; 17 ஏப்ரல் 1909)[note 1] | ||||||||
உலகக் கோப்பை | ||||||||
பங்கேற்புகள் | 12 (முதற்தடவையாக 1930 இல்) | |||||||
சிறந்த முடிவு | நான்காமிடம், 1986 | |||||||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | ||||||||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1972 இல்) | |||||||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 1980 | |||||||
Honours
|
பன்னாட்டுப் போட்டிகளில் பெல்ஜியம் அணியின் சிறந்த சாதனையாக உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் விளையாட ஆறுமுறை, 1982 - 2002, தகுதி பெற்றதும் 1986 உலகக்கோப்பையில் நான்காமிடத்தை எட்டியதும் ஆகும். மேலும் 1980ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ம் ஆண்டு ஒலிம்பிக்சில் சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வென்றதும் ஆகும். மற்றக் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக உலக்க் கோப்பை வாகையர்களை நான்கு முறை வீழ்த்தியதைக் குறிப்பிடலாம்: 1954இல் 2–0 என்ற கணக்கில் மேற்கு செருமனியையும், 1963இல் 5–1 என்ற கணக்கில் பிரேசிலையும் , 1982இல் 1–0 என்ற கணக்கில் அர்கெந்தீனாவையும் 2002இல் 2–1 என்ற கணக்கில் பிரான்சையும் வீழ்த்தி உள்ளனர்.[7]