![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/53/CBF_logo.svg.png/640px-CBF_logo.svg.png&w=640&q=50)
பிரேசில் தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
பிரேசில் தேசிய கால்பந்து அணி (போர்த்துக்கேய மொழி: Seleção Brasileira) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் பிரேசில் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை பிரேசிலில் கால்பந்தாட்டத்தை கட்டுப்படுத்தும் பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு (CBF) நிர்வகிக்கிறது. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் 1923 முதல் அங்கத்தினராக உள்ளது; தென்னமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் 1916 முதல் அங்கத்தினராக உள்ளது.
![]() | |||||||||||||||||||||||
அடைபெயர் | Canarinho (சிறிய கேனரி) A Seleção (தேர்ந்தவர்) Verde-Amarela (பச்சையும் மஞ்சளும்) Pentacampeões (ஐமுறை வாகையாளர்கள்) | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | Confederação Brasileira de Futebol (CBF) | ||||||||||||||||||||||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா) | ||||||||||||||||||||||
தலைமைப் பயிற்சியாளர் | லூயி பெலிப் இசுகோலரி | ||||||||||||||||||||||
Most caps | காஃபு (142)[1][2] | ||||||||||||||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பெலே (77)[2] | ||||||||||||||||||||||
பீஃபா குறியீடு | BRA | ||||||||||||||||||||||
பீஃபா தரவரிசை | 10[3] ![]() | ||||||||||||||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 1 (ஏழு காலங்களில் 151 முறை [4]) | ||||||||||||||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 22 (சூன் 2013) | ||||||||||||||||||||||
எலோ தரவரிசை | 1[5] ![]() | ||||||||||||||||||||||
அதிகபட்ச எலோ | 1 (38 முறை 7,708 நாட்கள்[6]) | ||||||||||||||||||||||
குறைந்தபட்ச எலோ | 18 (நவம்பர் 2001) | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||||||||||||||||||||||
![]() ![]() (புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா; செப்டம்பர் 20, 1914) | |||||||||||||||||||||||
பெரும் வெற்றி | |||||||||||||||||||||||
![]() ![]() (இசுடேடியோ அசுடெக்கா, மெக்சிக்கோ; அக்டோபர் 17, 1975) | |||||||||||||||||||||||
பெரும் தோல்வி | |||||||||||||||||||||||
![]() ![]() ( பெலோ அரிசாஞ்ச் பிரேசில்; சூலை 8, 2014) | |||||||||||||||||||||||
உலகக் கோப்பை | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 20 (முதற்தடவையாக 1930 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள் ![]() 1970, 1994 மற்றும் 2002 | ||||||||||||||||||||||
கோப்பா அமெரிக்கா | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 33 (முதற்தடவையாக 1916 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள் ![]() 1949, 1989, 1997, 1999, 2004, 2007 | ||||||||||||||||||||||
ரோக்கா கோப்பை | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 13 (முதற்தடவையாக 1914 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள் ![]() | ||||||||||||||||||||||
கான்காகேப் தங்கக்கோப்பை | |||||||||||||||||||||||
Appearances | 3 (முதற்தடவையாக 1996 இல்) | ||||||||||||||||||||||
Best result | இரண்டாமிடம் ![]() | ||||||||||||||||||||||
கூட்டமைப்புகள் கோப்பை | |||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1997 இல்) | ||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள் ![]() | ||||||||||||||||||||||
Honours
|
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
உலகக்கோப்பை | ||
![]() | 1958 சுவீடன் | அணி]] |
![]() | 1962 சிலி | அணி]] |
![]() | 1970 மெக்சிக்கோ | அணி]] |
![]() | 1994 ஐக்கிய அமெரிக்கா | அணி]] |
![]() | 2002 தென் கொரியா மற்றும் சப்பான் | அணி]] |
![]() | 1950 பிரேசில் | அணி]] |
![]() | 1998 பிரான்சு | அணி]] |
![]() | 1938 பிரான்சு | அணி]] |
![]() | 1978 அர்கெந்தீனா | அணி]] |
பதக்க சாதனைகள் | ||
---|---|---|
கூட்டமைப்புக்களின் கோப்பை | ||
![]() | 1997 சவூதி அரேபியா | அணி]] |
![]() | 2005 செருமனி | அணி]] |
![]() | 2009 தென் ஆபிரிக்கா | அணி]] |
![]() | 2013 பிரேசில் | அணி]] |
![]() | 1999 மெக்சிக்கோ | அணி]] |
உலகக்கோப்பை காற்பந்து வரலாற்றில் பிரேசில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணியாக விளங்குகிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் நான்கு முறை வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளனர். 1997, 2005, 2009 மற்றும் 2013 ஆண்டுகளில் கோப்பையை வென்று நடப்பு வாகையாளர்களாக உள்ளனர். இதுவரை நடந்த அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் பங்கேற்ற ஒரே தேசிய அணியாக பிரேசில் சாதனை படைத்துள்ளது. [9]
பிரேசில் தேசிய கால்பந்து அணி உலக கால்பந்து எலோ தர வரிசையில் உலகின் முதலிடத்தைப் பெற்றுள்ளது.[5][10][11][12][13][14] பிபா தர வரிசையில் 11ஆம் இடத்தில் உள்ளது.
நான்கு வெவ்வேறு கண்டங்களில் நடந்த உலகக்கோப்பைகளில் வென்ற பெருமையும் பிரேசிலுக்கு உண்டு: ஐரோப்பாவில் சுவீடனில் 1958இலும் தென் அமெரிக்காவில் சிலியில் 1962இலும் வட அமெரிக்காவில் (இருமுறை) மெக்சிக்கோவில் 1970இலும் ஐக்கிய அமெரிக்காவில் 1994இலும் ஆசியாவில் கொரியா/சப்பானில் 2002இலும் கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்த அலுவல்முறையான 35 ஆட்டங்களில் தோல்வியடையாத சாதனையை எசுப்பானியாவுடன் பகிர்கின்றனர்.[15][16][17] கால்பந்து இரசிகர்களிடையே பரவலான மேற்கோளுரை: "Os ingleses o inventaram, os brasileiros o aperfeiçoaram" ("ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தனர், பிரேசிலியர் கச்சிதப் படுத்தினர்").[18]
பிரேசில் 2014 உலகக்கோப்பையை நடத்தும் நாடாக இருப்பதால் தானியக்கமாக போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறது.