பிரேசில்
தென் அமெரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
பிரேசில் (Brazil; போர்த்துக்கேய மொழி: Brasil; பிரேசிலிய போர்த்துக்கீசம்: [bɾaˈziw] ( கேட்க)) அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil, போர்த்துக்கேய மொழி: República Federativa do Brasil, ஒலிப்புⓘ),[9] தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.[10][11] பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.[10] பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில.[10] பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்களாகும்.
பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு República Federativa do Brasil (போர்த்துக்கேய மொழி) | |
---|---|
குறிக்கோள்: Ordem e Progresso (போர்த்துக்கேய மொழி) " ஒழுங்கு மற்றும் முன்னேற்றம்" | |
நாட்டுப்பண்: Hino Nacional Brasileiro (போர்த்துக்கேய மொழி) "பிரேசிலிய தேசியக் கீதம்" | |
தேசிய முத்திரை | |
தலைநகரம் | பிரசிலியா 15°47′S 47°52′W |
பெரிய நகர் | சாவோ பாவுலோ 23°33′S 46°38′W |
ஆட்சி மொழி மற்றும் தேசிய மொழி | போர்த்துக்கேயம் |
இனக் குழுகள் |
|
சமயம் |
|
மக்கள் | பிரேசிலியர் |
அரசாங்கம் | கூட்டாட்சி தலைவர் ஆளும் அரசியல்சட்ட குடியரசு |
• அரசுத்தலைவர் | லுலா ட சில்வா |
• துணை அரசுத்தலைவர் | ஜெரால்டோ அல்க்மின் |
• பிரதிநிதிகள் அவை தலைவர் | ஆர்தர் லிரா |
• கூட்டாட்சி மூப்பவை தலைவர் | ரோட்ரிகோ பச்சேகோ |
• உச்ச கூட்டாட்சி நீதிமன்ற தலைவர் | ரோசா வெபர் |
சட்டமன்றம் | தேசியப் பேராயம் |
• மேலவை | கூட்டாட்சி மூப்பவை |
• கீழவை | பிரதிநிதிகள் அவை |
விடுதலை போர்த்துக்கல் இடம் இருந்து | |
7 செப்டெம்பர் 1822 | |
• அங்கீகரிக்கப்பட்டது | 29 ஆகத்து 1825 |
• குடியரசு | 15 நவம்பர் 1889 |
• தற்போதைய அரசியலமைப்பு | 5 அக்டோபர் 1988 |
பரப்பு | |
• மொத்தம் | 8,515,767 km2 (3,287,956 sq mi) (5வது) |
• நீர் (%) | 0.65 |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 217,240,060[5] (7வது) |
• அடர்த்தி | 25/km2 (64.7/sq mi) (193வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $3.680 டிரில்லியன்[6] (9வது) |
• தலைவிகிதம் | $17,208[6] (88வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.833 டிரில்லியன்[6] (12வது) |
• தலைவிகிதம் | $8,570[6] (104வது) |
ஜினி (2019) | 53.4[7] உயர் |
மமேசு (2021) | 0.754[8] உயர் · 87வது |
நாணயம் | ரெயால் (R$) (BRL) |
நேர வலயம் | ஒ.அ.நே−2 முதல் −5 வரை (BRT) |
திகதி அமைப்பு | நாநா/மாமா/ஆஆஆஆ (பொ.ஊ.) |
வாகனம் செலுத்தல் | வலம் |
அழைப்புக்குறி | +55 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BR |
இணையக் குறி | .br |
போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.[10]
1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் குடியேற்ற நாடாக இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.[12]
1822 ஆம் ஆண்டில் பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு அரசியல் சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.[13] கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.[13][14]
பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும்.[15][16] உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் தொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது. பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.[10]
பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது.[17] சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர்.[18] பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.[19]