![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/99/Flag_of_Guyana.svg/langta-640px-Flag_of_Guyana.svg.png&w=640&q=50)
கயானா
From Wikipedia, the free encyclopedia
கயானா (Guyana, /ɡaɪˈɑːnə/[5] அதிகாரபூர்வமாக கயானா கூட்டுறவுக் குடியரசு (Co-operative Republic of Guyana),[6] என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன.
கயானா கூட்டுறவுக் குடியரசு Co-operative Republic of Guyana | |
---|---|
குறிக்கோள்: "ஒரே மக்கள், ஒரு நாடு, ஒரு இலக்கு" | |
நாட்டுப்பண்: Dear Land of Guyana, of Rivers and Plains "ஆறுகளையும், சமவெளிகளையும் கொண்ட அருமை கயானா நாடே" | |
![]() | |
தலைநகரம் | ஜார்ஜ்டவுன் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
பிராந்திய மொழிகள் | 11 மொழிகள்
|
தேசிய மொழி | கயானா கிரியோல் |
இனக் குழுகள் (2002[1]) |
|
மக்கள் | கயானீசு |
அரசாங்கம் | ஒற்றையாட்சி பகுதி-சனாதிபதி குடியரசு |
• சனாதிபதி | டேவிட் கிரேஞ்சர் |
• பிரதமர் | மோசசு நாகமுத்து |
சட்டமன்றம் | தேசியப் பேரவை |
அமைப்பு | |
• டச்சு கயானா | 1667–1814 |
• பிரித்தானிய கயானா | 1814–1966 |
• பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை | 26 மே 1966 |
• குடியரசு | 23 பெப்ரவரி 1970 |
• தற்போதைய அரசமைப்புசட்டம் | 6 அக்டோபர் 1980 |
பரப்பு | |
• மொத்தம் | 214,970 km2 (83,000 sq mi) (85வது) |
• நீர் (%) | 8.4 |
மக்கள் தொகை | |
• 2014 மதிப்பிடு | 735,554[1] (165வது) |
• 2012 கணக்கெடுப்பு | 747,884[2] |
• அடர்த்தி | 3.502/km2 (9.1/sq mi) (232வது அல்லது 8வது உலகின் மிகக்குறைந்த மக்கள்தொகை நாடு) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $6.155 பில்.[3] |
• தலைவிகிதம் | $7,938[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2012 மதிப்பீடு |
• மொத்தம் | $2.788 பில்.[3] |
• தலைவிகிதம் | $3,596[3] |
மமேசு (2013) | ![]() மத்திமம் · 121வது |
நாணயம் | கயானிய டாலர் (GYD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (GYT (கயானா நேரம்)) |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | +592 |
இணையக் குறி | .gy |
கயானா முதன் முதலில் 1667 முதல் 1814 வரை டச்சுக்களின் குடியேற்ற நாடாக இருந்தது. பின்னர், பிரித்தானியரின் ஆட்சியில் பிரித்தானிய கயானா என்ற பெயரில் 150 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1966 மே 26 இல் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1970 பெப்ரவரி 23 இல் குடியரசானது. 2008 இல் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்தில் ஆரம்பகால உறுப்பினராக இணைந்தது. கரிபியன் சமூகம் என்ற அமைப்பில் உறுப்புரிமை கொண்டுள்ளது. இவ்வமைப்பின் தலைமையகம் கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ளது.
பொதுநலவாய அமைப்பில் உறுப்பினராக உள்ள கயானா தென்னமெரிக்க நாடுகளில் ஆங்கிலம் அதிகாரபூர்வமொழியாக உள்ள ஒரே ஒரு நாடு ஆகும். கயானாவின் பெரும்பாலானோர் ஆங்கிலம், டச்சு, மற்றும் அரவாக்கன், கரிபியம் கலந்த கயானிய கிரியோல் மொழியையும் பேசுகின்றனர்.
215,000 சதுர கிமீ (83,000 சதுரமைல்) பரப்பளவு கொண்ட கயானா தென்னமெரிக்காவில் உருகுவை, சுரிநாம் நாடுகளை அடுத்த மூன்றாவது சிறிய நாடாகும்.