![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/e/e6/DFBEagle.svg.png/640px-DFBEagle.svg.png&w=640&q=50)
செருமனி தேசிய காற்பந்து அணி
ஜெர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் தேசிய சங்க கால்பந்து அணி / From Wikipedia, the free encyclopedia
செருமானியத் தேசிய கால்பந்து அணி (இடாய்ச்சு மொழி: Die deutsche Fußballnationalmannschaft) 1908 முதல் பன்னாட்டுப் போட்டிகளில் செருமனி நாட்டின் சார்பாக விளையாடும் காற்பந்தாட்ட அணியாகும்.[2] இதனை 1900இல் நிறுவப்பட்ட செருமன் கால்பந்துச் சங்கம் (Deutscher Fußball-Bund) மேலாண்மை செய்து வருகிறது.[6][7] 1949இல் செருமன் கால்பந்துச் சங்கம் மீண்டும் துவங்கப்பட்டதிலிருந்து 1990இல் செருமானிய மீளிணைவு நிகழும் வரை இது மேற்கு செருமனியைக் குறித்தது. செருமனி கூட்டணி நாடுகளின் ஆட்சியில் இருந்தபோது இரண்டு தனியான தேசிய அணிகளை பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்திருந்தது: சார்லாந்து அணி (1950–1956) மற்றும் ஜெர்மன் சனநாயகக் குடியரசு சார்பான கிழக்கு செருமனி அணி (1952–1990). இவை இரண்டுமே, அவற்றின் சாதனைகள் உட்பட,[8][9] தற்போதைய தேசிய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் ஏற்பட்ட மீளிணைவிற்கு பிறகு அலுவல்முறைப் பெயரும் குறியீடும் "செருமனி FR (FRG)" என்பதிலிருந்து "செருமனி (GER)" என்பதாக மாற்றப்பட்டது.
![]() | |||
அடைபெயர் | Nationalmannschaft (தேசிய அணி), Nationalelf (தேசிய பதினொருவர்) அல்லது DFB-Elf (டிஎஃப்பி பதினொருவர்); Die Adler (கழுகுகள்); Die Mannschaft (அணி) என்று பெரும்பாலும் இடாய்ச்சு மொழியல்லாத ஊடகங்களில் | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | செருமன் கால்பந்துச் சங்கம் (Deutscher Fußball-Bund – டிஎஃப்பி) | ||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | ஜோக்கிம் லோ | ||
அணித் தலைவர் | பிலிப் லாம் | ||
Most caps | லோதர் மத்தாசு (150) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | மிரோசுலோவ் குளோசு (71) | ||
பீஃபா குறியீடு | GER | ||
பீஃபா தரவரிசை | 2 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 1[1] (திசம்பர் 1992, ஆகத்து 1993, திசம்பர் 1993, பெப்ரவரி 1994 – மார்ச் 1994, சூன் 1994) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 22[1] (மார்ச் 2006) | ||
எலோ தரவரிசை | 3 | ||
அதிகபட்ச எலோ | 1 (1990–92, 1993–94, 1996–97) | ||
குறைந்தபட்ச எலோ | 28 (1923) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() (பேசெல், சுவிட்சர்லாந்து; 5 ஏப்ரல் 1908)[2] | |||
பெரும் வெற்றி | |||
![]() ![]() (ஸ்டாக்ஹோம், சுவீடன்; 1 சூலை 1912)[3] | |||
பெரும் தோல்வி | |||
![]() ![]() (ஆக்சுபோர்டு, இங்கிலாந்து; 13 மார்ச் 1909)[4][5] | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 17 (முதற்தடவையாக 1934 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1954, 1974, 1990, 2014 | ||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||
பங்கேற்புகள் | 11 (முதற்தடவையாக 1972 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1972, 1980, 1996 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 1999 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்) | ||
சிறந்த முடிவு | 3வது இடம், 2005 |
பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; நான்கு உலகக் கோப்பைகளையும் (1954, 1974, 1990, 2014) மூன்று ஐரோப்பிய கோப்பைகளையும் (1972, 1980, 1996) வென்றுள்ளது.[6] தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்; மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் [6] கிழக்கு செருமனி ஒலிம்பிக்கில் 1976இல் தங்கம் வென்றுள்ளது.[10] ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகின்றது.
2014 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் செருமனி பெற்றுள்ளது[11].உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவர் செருமனியை சேர்ந்த மிரோசுலோவ் குளோசு ஆவார். இவர் இதுவரை 16 கோல்களை அடித்துள்ளார்.
2014 உலகக்கோப்பையை வென்ற செருமனி தலைவர் பிலிப் லாம், 18 ஜுலை 2014 அன்று, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.