நவ்ஜோத் சிங் சித்து
இந்தியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
நவ்ஜோத் சிங் சித்து (Navjot Singh Sidhu, பிறப்பு: அக்டோபர் 20 1963, இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார், இவர் இந்தியத் துடுப்பாட்ட அனிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் பஞ்சாப் மாநில அமைச்சராக உள்ளார்.தற்போது்இவர் இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1983 – 1998 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நவ்ஜோத் சிங் சித்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 166) | நவம்பர் 12 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 6 1999 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 61) | அக்டோபர் 9 1987 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | செப்டம்பர் 20 1998 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: espncricinfo, சனவரி 1 2009 |
இவர் 1981 -1982 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் திடரில் முதல் முறையாக முதல்தரத் துடுபபட்டப் போட்டிகளில் விளையாடினார். சுமார் 19 ஆண்டுகாலம் இவர் துடுபாடம் விளையாடியுள்ளார். சில காலங்கள் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்.அதில் சிறப்பாக விளையாடியதனால் 1983 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் நான்கு அரை நூறுகள் அடித்தார். பெரும்பான்மையாக இவர் துவக்க வீரராகவே களம் இறங்குவார். இவர் ஆறு ஓட்டங்கள் திறனின் மூலம் இவர் பரவாலக அறியப்பட்டார். இந்தத் திறனின் மூலம் இவர் சிக்சர்ஸ் சித்து எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.[2] தனது ஓய்விற்குப் பிறகு துடுப்பட்டப் போட்டிகளின் வர்ணனையாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் பணிப்ரிந்தார். 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகள்வரை நடைபெற்ற காமெடி நைட் வித் கபில் எனும் நகைச்சுவைத் தொடரில் நிரந்தர விருந்தினராகப் பங்குபெற்றார்.பின் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.