From Wikipedia, the free encyclopedia
நெடுங்குழு 16 தனிமங்கள் கால்கோசன்கள் (Chalcogens) என்று அழைக்கப்படுகின்றன. இவை தனிம வரிசை அட்டவணையின் கீழிருந்து மேலாக அமையும் 16 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ளன. இத்தனிமங்களை ஆக்சிசன் குழு தனிமங்கள் என்றும் அழைப்பார்கள். ஆக்சிசன் (O), கந்தகம் (S), செலீனியம் (Se), தெலூரியம் (Te), மற்றும் கதிரியக்க தனிமமான பொலோனியம் (Po) ஆகியத் தனிமங்கள் இந்த நெடுங்குழுவில் அடங்கியுள்ளன. செயற்கைத் தனிமமான லிவர்மோரியம் (Lv) தனிமமும் இக்குழுவில் அடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[1] [2][3] பெரும்பாலும் ஆக்சிசன் காற்கோசென்களில் இருந்து பிரித்தே பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் ஆக்சிசனை இக்குழுவில் இருந்து விலக்கியும் வைப்பதுண்டு. ஏனெனில் கந்தகம், செலீனியம், தெலூரியம் மற்றும் பொலேனியம் போன்றவற்றின் வேதி பண்புகளில் இருந்து இதன் பண்புகள் முற்றிலும் வேறுபடுகின்றன. காற்கோசென் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து தருவிக்கப்பட்ட சொல்லாகும்.
நெடுங்குழு 16 தனிமங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
↓ Period | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2 | ஆக்சிசன் (O) 8 Diatomic nonmetal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3 | கந்தகம் (S) 16 Polyatomic nonmetal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
4 | செலீனியம் (Se) 34 Polyatomic nonmetal | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 | தெலூரியம் (Te) 52 உலோகப்போலி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
6 | பொலோனியம் (Po) 84 குறை மாழை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7 | லிவர்மோரியம் (Lv) 116 Unknown chemical properties | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Legend
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆற்றலை உருவாக்கும் நோக்கத்திற்காக கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தண்ணீர், அமினோ அமிலங்கள் மற்றும் டி.என்.ஏ போன்ற பிற உயிரியல் சேர்மங்களின் முக்கிய கூறாக ஆக்சிசன் உள்ளது. மனித இரத்தத்தில் அதிக அளவு ஆக்சிசன் கலந்துள்ளது. மனித எலும்புகளில் 28% , மனித திசுக்களில் 16% ஆக்சிசன் கலந்துள்ளது. ஒரு 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனில் 43 கிலோகிராம் ஆக்சிசன் பெரும்பாலும் நீர் வடிவில் உள்ளது.
கந்தகம் பண்டைய காலந்தொட்டே அறியப்பட்டு வந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆக்சிசன் ஒரு தனிமமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செலீனியம், தெல்லூரியம், பொலேனியம் போன்ற தனிமங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டன. லிவர்மோரியம் 2000 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அனைத்து காற்கோசென்களும் ஆறு இணைதிறன் எதிர்மின்னிகளைக் கொண்டுள்ளன. −2, +2, +4, மற்றும் +6 என்பன இவற்றின் பொதுவான ஆக்சிசனேற்ற நிலைகளாகும். இவற்றின் குறிப்பாக இலேசான காற்கோசென்களின் அணு ஆரம் மிகவும் குறைவு ஆகும்.
தனிமநிலையில் இலேசான காற்கோசென்கள் நச்சுத்தன்மை அற்று காணப்படுகின்றன. வழ்க்கைக்கு மிகவும் அவசியமானவையாகவும் இவை உள்ளன. கன காற்கோசென்கள் நச்சுத்தன்மை மிகுந்தவையாகக் காணப்படுகின்றன. இவை அனைத்துமே உயிரியல் செயல்முறைகளில் நச்சு அல்லது ஊட்டச்சத்து என்று ஏதாவது ஒரு பங்களிப்பை அளிக்கின்றன. செலீனியம் ஊட்டச்சத்தாகவும் நச்சாகவும் செயல்படுகிறது.தெலூரியம் மற்றும் பொலேனியம் தனிமங்கள் அவற்றின் கதிரியக்கப்பண்பு, நச்சுத்தன்மை இரண்டிலுமே தீங்கு விளைவிப்பனவாக உள்ளன.
கந்தகம் கிட்டத்தட்ட 20 புறவேற்றுமை வடிவங்களுக்கு மேல் காணப்படுகிறது. ஆக்சிசன் ஒன்பது வடிவங்களும், செலீனியம் ஐந்து வடிவங்களும், பொலேனியம் இரண்டு வடிவங்களும் தெல்லூரியம் ஒரேயொரு படிக கட்டமைப்பும் கொண்டுள்ளன. கரிம காற்கோசென் சேர்மங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கரிம கந்தகச் சேர்மங்கள் மிக அதிக அளவில் கரிம வேதியியலில் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக கரிம செலீனியம் சேர்மங்களும் கரிம தெல்லூரியம் சேர்மங்களும் மிகுந்து காணப்படுகின்றன. காற்கோசென்கள் மற்றும் கார்பன் குழு தனிமங்களிலும் இப்போக்கு காணப்படுகிறது.
ஆக்சிசன் பெரும்பாலும் காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாயு மற்றும் எண்ணெய்களில் இருந்து கந்தகம் பிரித்தெடுக்கப்படுகிறது. தாமிரத்தை சுத்திகரிக்கும் போது தெல்லூரியமும் செலீனியமும் உடன் விளைபொருள்களாக கிடைக்கின்றன. பொலேனியமும் லிவர்மோரியமும் துகள் முடுக்கிகளில் காணப்படுகின்றன. எஃகு உற்பத்தியில் ஆக்சிசனும், கந்தக அமிலம் உற்பத்தியில் கந்தகமும் பெரிதும் பயன்படுகின்றன. வேதித் தொழிசாலைகளில் கந்தக அமிலம் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலீனியம் கண்ணடித் தயாரிப்பிலும் தெல்லுரியம் ஒளியியல் வட்டு கருவிகள், மின்னியல் கருவிகள், சூரிய மின்கலன்களில் பயன்படுகின்றன. பொலேனியத்தின் கதிரியக்கப் பண்புகள் பல்வேறு பயன்களை வழங்குகிறது.
காற்கோசென்களின் வெளிக்கூட்டில் ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு காணப்படுகிறது. அனைத்திலும் ஒரே எண்னிக்கையில் இணைதிரன் எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன. எனவே வேதியியல் பண்புகளில் ஒரே மாதிரியான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
அனைத்து காற்கோசென்களும் ஆறு இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.திண்ம நிலையிலுள்ள நிலைத்தன்மை கொண்ட காற்கோசென்கள் மென்மையானவையாக உள்ளன. இவற்றை அதிகமாக சூடுபடுத்தக்கூடாது. அணு எண் அதிகம் கொண்ட காற்கோசென்களை நோக்கிச் செல்கையில் இவற்றின் மின்னெதிர்தன்மை குறைகிறது. பிற பண்புகளான அடர்த்தி, கொதிநிலை, உருகு நிலை, அணு ஆரம் போன்றவை அணு எண் அதிகம் கொண்ட காற்கோசென்களை நோக்கிச் செல்கையில் அதிகரிக்கின்றன [4].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.