From Wikipedia, the free encyclopedia
குழந்தைகள் தினம் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு சூன்,ஞாயிறு (கிழமை) அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது ஆகும். அவர் குழந்தைகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கான ஒரு நாளை ஏற்படுத்தினார். தொடக்கத்தில் அதற்கு பூக்கள் ஞாயிறு என பெயர் இருந்தது பின்னர் குழந்தைகள் தினம் என ஆனது.[1][2][3]
அனைத்துலக குழந்தைகள் தினம் டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத் திட்டங்களை உலகெங்கும் நடத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பன்னாட்டு குழந்தைகள் நாள் பல நாடுகளில் ஜூன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.
கிரிகோரியன் நாள்காட்டி | |||||||
---|---|---|---|---|---|---|---|
நிகழ்வு | நாள் | நாடுகள் | |||||
ஜனவரி முதல் வெள்ளி | ஜனவரி 6, 2017 | பஹமாஸ் | |||||
ஜனவரி 11 | தூனிசியா | ||||||
ஜனவரி இரண்டாவது சனி | ஜனவரி 14, 2017 | தாய்லாந்து | |||||
பெப்ரவரி இரண்டாவது ஞாயிறு | பெப்ரவரி 12, 2017 | குக் தீவுகள் | |||||
பெப்ரவரி 13 | மியான்மர் | ||||||
மார்ச் முதல் ஞாயிறு | மார்ச் 5, 2017 | நியூசிலாந்து | |||||
மார்ச்17 | வங்காளதேசம் | ||||||
இந்தியாவில் ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
இலங்கையில் குழந்தைகள் தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
அர்கெந்தீனா நாட்டில் குழந்தைகள் தின விழாவானது ஆகஸ்டு மாதம் 3 ஆவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
ஆர்மீனியா நாட்டில் சூன் 1 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது.
ஆத்திரேலியாவில் குழந்தைகள் வாரமானது வருடம்தோறும் அக்டோபர் மாதம் நாண்காவது வாரத்தில் கொண்டாடப்படுகிறது. உலக குழந்தைகள் தினத்திற்கு முந்தைய சனி (கிழமை) முதல் அதற்கு அடுத்த ஞாயிறு (கிழமை) வரை குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினமானது ஆத்திரேலியாவின் பல மாகாணங்களில் நடைபெற்றது. மேலும் நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 1984 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது.[4]
வங்காளதேசத்தில் மார்ச் 17 அன்று குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சேக் முஜிபுர் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் தினமும் கொண்டாடப்படுகிறது. 2009]] ஆம் ஆண்டு முதல் ஜேக்கொ அறக்கட்டளையானது நவம்பர் 20 அன்று நாடு முழுவதும் தொடக்கக்கல்வி மற்றும் குழந்தைகளின் நலம் தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.
பொலிவியாவில் ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
பொசுனியா எர்செகோவினா நாட்டில் 1993 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
பல்காரியாவில் சூன் 1 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.[5] இங்கு பாரம்பரியமாக குழந்தைகளை அவர்களின் பிறந்தநாள் போன்றே பரிசுகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். 1925 ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
கமரூன் நாட்டில்1990ஆம் ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கமரூன், எக்குவடோரியல் கினி, காபோன், சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற நாடுகளில் டிசம்பர் 25 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு குழந்தைகள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
சீனாவில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சீனக் குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட போது அதன் அமைச்சரவையானது சூன் 1 அன்று அரை நாள் விடுமுறை நாளாக அறிவித்தது. பின்பு 1956 ஆம் ஆண்டு முதல் முழுநாள் விடுமுறை தினமாக அறிவித்தது. அன்றைய தினங்களில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், பேரணி , இலவச திரைப்படங்கள் பார்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவர்.
கொலம்பியாவில் ஏப்ரல் மாதம் கடைசி சனி (கிழமை) அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2001 ஆம்
ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
கோஸ்ட்டா ரிக்காவில் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.
கியூபாவில் சூலை மாதம் மூன்றாவது ஞாயிறு (கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
செக் குடியரசு சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. 1950 ஆண்டு முதல் விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.
எக்குவடோர் நாட்டில் சூன் 1 அன்று கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிகள் வழங்குவர்.
எகிப்து நாட்டில் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.