Remove ads
From Wikipedia, the free encyclopedia
குழந்தை அல்லது கைக்குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையைக் குறிக்கும். தமிழில் பச்சிளம் எனும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக 1 மாதம் மற்றும் 12 மாதங்களுக்கு இடையே இளம் குழந்தைகளை நாம் கைக்குழந்தை என்றழைக்கலாம்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
புதிதாக பிறந்த ஒரு குழந்தையின் தோள்கள் மற்றும் இடுப்பு அகலமாக இருக்கும். வயிறு சற்று துருத்தியிருக்கும், மற்றும் கை கால்கள் குழந்தைகளுக்கான உடலை ஒப்பிடும் போது நீண்டு இருக்கும். உலக நாடுகளில் குழந்தைகளுக்கு சராசரி மொத்த உடல் நீளம், 35.6-50.8 செ.மீ. (14-20 அங்குலம்) எனப்படுகிறது. ஆனால், முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கான உடலின் நீளம் மிகவும் சிறியதாக இருக்கலாம்.
பொதுவாக வளர்ந்த நாடுகளில், ஒரு முழுமையான காலத்தில் பிறந்த சராசரி குழந்தையின் எடை (7 ½ பவுண்ட்) சுமார் 3.4 கிலோ மற்றும் 2.7-4.6 கிலோ (அலகு 5.5-10 பவுண்டுகள்) வரை உள்ளது. பிறந்த முதல் 5-7 நாட்களில் குழந்தையின் உடல் எடை 3% -7% வரை குறைகிறது.[1] எடை குறைவதற்கான காரணம் நுரையிரலில் நிரம்பி உள்ள நீர் சிறுநீராக வெளியேறுவதனாலேயே ஆகும். முதல் வாரத்திற்கு பின்பு, ஆரோக்கியமான குழந்தைகள் 10-20 கிராம் / கிலோ * நாளொன்றுக்கு எடை கூடுவார்கள்.
பிறந்த ஒரு குழந்தைக்கு உடலின் விகிதத்தை ஓப்பிடும் பொழுது தலை மிகப்பெரியதாக இருக்கும் மற்றும் மண்டை ஓடு முகத்தை விட பெரியதாக இருக்கும். வயது வந்தோருக்கான மனித மண்டையோடு மொத்த உடல் நீளத்தில் ஏழில் ஒரு பங்கு இருக்கும் போது, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ¼ பங்கு இருக்கும். பிறந்த ஒரு குழந்தைக்கு இயல்பாக தலையின் சுற்றளவு 33-36 செ.மீ. அளவு இருக்கும்.[2] குழந்தை பிறந்த பொழுது மண்டை ஓட்டின் சில பகுதிகள் எலும்பாக மாறியிருக்காது; அவை மெல்லிய பகுதிகளாகவே இருக்கும்.
தலையின் மேல் முன் பகுதியில் அமைந்துள்ளது வைர வடிவ முன்புற மண்டை ஓடு மற்றும் தலையின் பின்புறம் ஒரு சிறிய முக்கோண வடிவ பின்பக்க மண்டை ஓடு ஆக மொத்தம் இரண்டு பெரிய மண்டை ஓடுகள் இருக்கின்றன. இவை இரண்டும் நாளிடைவில் இயற்கையாகவே இணைந்து விடும். நோகின் (noggin) எனப்படும் ஒரு புரதம் குழந்தையின் மண்டை ஓடுகள் இணைவதற்கு காரணம் ஆகும்.[3]
சில பிறந்த குழந்தையின் உடல் மீது மென்மையான பட்டு போன்ற மயிர் இருக்கும். முன்கூட்டியே பிறந்த கைக்குழந்தைகளுக்கு தோள்கள், நெற்றி, காதுகள் மற்றும் முகத்தில் மயிர் குறிப்பிடத் தகுந்த வகையில் இருக்கலாம். கைக்குழந்தைகள் பிறந்தபொழுது முழுமையான தலைமயிருடன் இருக்கலாம். குறிப்பாக முடியில்லாமல் புதிதாக பிறந்த குழந்தைகளில், உச்சந்தலையில் தற்காலிகமாக காயம்பட்டோ அல்லது வீக்கமாகவோ இருக்கலாம். மேலும், கண்களை சுற்றியுள்ள பகுதியில் வீங்கி இருக்கலாம்.
அண்மையில் பிரசவித்த குழந்தையின் தோல் பெரும்பாலும் சாம்பல் அல்லது மங்கிய நீல நிறத்தில் இருக்கிறது. அதன் பின்னர் குழந்தை மூச்சு விட தொடங்கும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் தோலின் நிறம் அதன் இயல்பான தொனியை அடைகிறது. பிறந்த குழந்தையின் மேல் ஈரமான இரத்த கீற்றுக்களால் மூடப்பட்டிருக்கும். மேலும், வேர்நிக்ஸ் காசேசா(vernix caseosa) என அழைக்கப்படும் ஒரு வெள்ளை பொருளும் பூசப்பட்டிருக்கும். இது ஓர் எதிர்பாக்டீரியா போல செயல்படும்.
ஆண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்புகள் வழக்கத்திற்கு மாறாக பெரிய விதைப்பை கொண்ட, விரிவாக்கப்பட்ட நிலையிலும் மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு கூட மார்பகங்கள் விரிவாக்கப்பட்ட அல்லது விரிந்த நிலையில் காணப்படும். இது இயற்கையாகவே தாயின் ஹார்மோன்கள் மூலம் நிகழும் ஒரு தற்காலிக நிலைதான். பெண்கள் (மற்றும் கூட ஆண்கள்) உண்மையில் (சில நேரங்களில் சூனிய பால் என அழைக்கப்படுகிறது) அவர்களது முலைக்காம்புகளிலிருந்து பால் வெளியேற்றம் மற்றும்/அல்லது புணர்புழையின் இருந்து ஓர் இரத்தக்களரி அல்லது பால் போன்ற பொருள் வெளியேறலாம்.
ஒரு பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியின் வெண்ணீல நிறமாக இருக்கும். பிறந்த பின்னர், தொப்புள்கொடியானது பொதுவாக ஒரு 1-2 அங்குலம் விட்டு வெட்டப்படும். இவ்விடத்தில் தொற்று எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக மருத்துவமனையில் மருத்துவ குணம் கொண்ட ஒரு சாயம் பூசப்படும். அது ஓர் ஊதா நிறத்தைக் கொடுக்கும். தொப்புட்கொடி சுருங்கி, காய்ந்து, வறண்டு, கறுப்பு நிறமாக மாறிப், பின்னர் தானாகவே 3 கிழமைகளில் விழுந்துவிடும். அந்த இடமே பின்னர் தொப்புள்ளாக காணப்படும்.
குழந்தைகளுக்கு பெரியவர்களை விட கூடுதலாக சுமார் 100 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு பிறக்கும்போது சுமார் 300 எலும்புகள் உள்ளன, அவற்றில் பலவற்றுக்கு இடையில் குருத்தெலும்புகள் உள்ளன. இந்த கூடுதல் நெகிழ்வுத்தன்மை அவர்களுக்கு பிறப்பு கால்வாய் வழியாக எளிதில் கடந்து செல்ல உதவுகிறது. மேலும் விரைவான வளர்ச்சியையும் அனுமதிக்கிறது. வயதுக்கு ஏற்ப, எலும்புகள் பல ஒன்றிணைந்து, சராசரி வயதுவந்தவுடன் 206 எலும்புகளால் ஆன எலும்புக்கூட்டை உருவாக்கும்.[4]
காற்று மூலம் சுவாசிக்க வேண்டிய குழந்தை கருப்பைக்கு வெளியே வந்தவுடன் தொப்புள் கொடி இல்லாமல் வாழ்க்கையை வாழ அனுசரிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு கருப்பைக்கு வெளியே வந்தவுடன் அனைத்து உணர்வுகளையும் தன்மையுடன் இருக்கும். ஆனால், கட்டி அணைத்தல், மென்மையாக தடவிக்கொடுத்தல் போன்ற செயல்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் பதிலளிக்கும். முன்னும் பின்னுமாக யானையில் ஆட்டுவது, உடற்பிடிப்பு, சூடான குளியல் போன்றவை ஒரு அழும் குழந்தையை அமைதிப்படுத்தும். பிறந்த குழந்தைகள் பாலூட்டுவது, விரல் சூப்புவது போன்றவற்றின் மூலம் ஆறுதல் பெறும். பாலூன்னும் எண்ணம் பிறந்த குழந்தைக்கு உள்ளுணர்வாகவே இருக்கிறது.[5]
புதிதாக பிறந்த குழந்தைகள் நேரடியாக தங்கள் முகத்தின் முன்னால் உள்ள பொருட்களில் 18 அங்குல (45 செமீ) மட்டுமே கவனம் செலுத்த முடியும். ஒரு பிறந்த தூங்குகின்ற, உணவு உண்கின்ற அல்லது அழுகின்ற நேரம் தவிர மீதி நேரம் பல்வேறு பொருட்களை பார்த்துக்கொண்டு செலவிடலாம். எனினும், பிறந்த குழந்தை எல்லாவற்றிற்கும் மேலாக மனித முகங்களை பார்ப்பதில் அதிக விருப்பம் உள்ளது. மேலும் பளபளப்பாக இருக்கும் பொருட்கள், கூர்மையானவை, மாறுபட்ட வண்ணங்கள் கொண்டவை அல்லது சிக்கலான வடிவங்கள் போன்றவற்றை பார்க்க குழந்தை ஆர்வமுடன் இருக்கும். கைக்குழந்தைகள் சுமார் மூன்று மாதங்களில் தங்கள் நகரும் பொருட்களை பின்பற்ற ஆரம்பிக்கின்றன. [6]
கைக்குழந்தை கருப்பையிலிருந்தே ஒலியை கேட்க ஆரம்பித்து விடும். கருப்பையிலியே தாயின் இதய துடிப்பு, அவரது செரிமான அமைப்பிலிருந்து வரும் சப்தங்கள்,தாயின் குரல், வெளி ஒலிகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் குரல்கள் குழந்தை கேட்க ஆரம்பித்து இருக்கும். மனித குரல்கள், குறிப்பாக தாயின் ஒசை பிறந்த குழந்தைக்கு ஒரு அடக்கும் அல்லது அமைதிப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும்.[7].உரத்த அல்லது திடீர் குரல்களை குழந்தையை திடுக்கிடவும் அல்லது பயமுறுத்தும்.
பிறந்த குழந்தைகள் இனிப்பு, கசப்பு, புளிப்பு மற்றும் உப்பு போன்ற சுவைகளை நன்கு உணர முடியும், இருந்தாலும் குழந்தை இனிப்பு சுவையை மிகவும் விரும்புகிறது.[8][9]
கைக்குழந்தைகள் அடிப்படையாக அழுகின்ற உள்ளுணர்வை கொண்டுள்ளன. ஒரு குழந்தை பசி, அசௌகரியம், தொட்டுவிட்டுதல், சலிப்பு, ஏதேனும் விருப்பம், அல்லது தனிமை உட்பட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த அழுவதன் மூலம் முயற்சி செய்யும்.
குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் அனைத்து முக்கிய குழந்தை சுகாதார அமைப்புகளாலும் பரிந்துரைக்கப்பட்ட உணவுட்டும் முறை ஆகும்.[10]. கைக்குழந்தைகள் உறிஞ்சும் அனிச்சை செயல்களுடன் இருக்கும்.
தாய்ப்பாலூட்டல் மூலம் 6-12 மாதங்கள் உணவூட்டல் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெற போதுமானதாக இருக்கும். கைக்குழந்தை போதுமான உணவை நுகர்வது ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். கைக்குழந்தை வளர வளர, கூடுதல் உணவு சேர்க்கப்படும்.
பொதுவாக தாய் குழந்தையின் அழுகையை நிறுத்த மற்றும் உறங்க வைக்க சேலையால் கட்டப்படும் தொட்டிலில் குழந்தையை இட்டு பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும். இது போன்ற பாடல்கள் தாலாட்டுப் பாடல் என்றழைக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் பெரியவர்கள் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நீரைத் தொட்டு வைப்பர். இதுவே சேனை தொடுதல் எனப்படும்.
குழந்தையின் தாய் மாமன் தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை ஆகியவற்றைக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில் குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்வதே தொட்டிலிடுதல் சடங்காகும்.
காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.