![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Klangvalley.gif/640px-Klangvalley.gif&w=640&q=50)
கிள்ளான் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
கிள்ளான் பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Klang Valley; மலாய்: Lembah Klang) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளையும்; அவற்றுக்கு அடுத்துள்ள சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும்.[1]
![கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு பகுதி](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/YosriPanoramaBukitBukauKelilingLembahKelang.jpg/640px-YosriPanoramaBukitBukauKelilingLembahKelang.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/32/Klangvalley.gif/320px-Klangvalley.gif)
இதன் தற்காலப் பெயராக கோலாலம்பூர் பெருநகர்ப் பகுதி அல்லது பெரும் கோலாலம்பூர் (Greater Kuala Lumpur) உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு, புவியியல் ரீதியாக தித்திவாங்சா மலைத்தொடரை (Titiwangsa Mountains) வடக்கிலும் கிழக்கிலும், மலாக்கா நீரிணையை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
வடமேற்கில் ரவாங்; தென்கிழக்கில் செமினி; மற்றும் தென்மேற்கில் கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் போன்ற நகரங்கள் வரை நீண்டுள்ளது.