![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Banjaran_titiwangsa1.jpg/640px-Banjaran_titiwangsa1.jpg&w=640&q=50)
தித்திவாங்சா மலைத்தொடர்
From Wikipedia, the free encyclopedia
தித்திவாங்சா மலைத்தொடர்; (மலாய்: Banjaran Titiwangsa; ஆங்கிலம்: Titiwangsa Mountains) என்பது தீபகற்ப மலேசியாவின் மத்தியமலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது.
விரைவான உண்மைகள் தித்திவாங்சா மலைத்தொடர்Titiwangsa Mountains மலேசியா தாய்லாந்து, உயர்ந்த புள்ளி ...
தித்திவாங்சா மலைத்தொடர் Titiwangsa Mountains ![]() ![]() | |
---|---|
சங்காலாகிரி தொடர் Sankalakhiri Range | |
![]() தித்திவாங்சா மலைத்தொடரின் அகலப்பரப்புக் காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கொர்பு மலை |
உயரம் | 2,187 m (7,175 அடி) |
பரிமாணங்கள் | |
நீளம் | 480 km (300 mi) |
அகலம் | 120 km (75 mi) |
புவியியல் | |
நாடு | ![]() |
மூலத் தொடர் | தெனாசிரிம் மலைத்தொடர் |
எல்லைகள் | மலேசியா |
நிலவியல் | |
பாறையின் வயது | பேர்மியன் காலம், திரியாசிக் காலம் |
பாறை வகை | கருங்கல் (பாறை), சுண்ணக்கல் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Banjaran_titiwangsa2.jpg/320px-Banjaran_titiwangsa2.jpg)
இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (ஆங்கிலம்: Sankalakhiri Range; தாய்லாந்து மொழி: ทิวเขาสันกาลาคีรี) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.