கொர்பு மலை
From Wikipedia, the free encyclopedia
கொர்பு மலை (மலாய் மொழி: Gunung Korbu; ஆங்கிலம்: Mount Korbu) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் அமைந்து உள்ளது. தித்திவாங்சா மலைத் தொடரில் மிக உயர்ந்த மலை.[1] 1885-ஆம் ஆண்டு, பிரித்தானிய நில அளவாய்வாளர் வில்லியம் கேமரன் என்பவர் கொர்பு மலை இருப்பதைக் கண்டுபிடித்தார். இவர்தான் கேமரன் மலையையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்தவர்.[2]
விரைவான உண்மைகள் கொர்பு மலை, உயர்ந்த புள்ளி ...
கொர்பு மலை | |
---|---|
Mount Korbu Gunung Korbu | |
கொர்பு மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,183 m (7,162 அடி) |
பட்டியல்கள் | ரீபு மலைகள் |
ஆள்கூறு | 4°41′0.00″N 101°18′0.00″E |
புவியியல் | |
அமைவிடம் | பேராக், தீபகற்ப மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய வழி | ஈப்போவில் இருந்து தஞ்சோங் ரம்புத்தான் நகருக்குச் செல்லும் வழி |
மூடு
தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது உயரமான மலை. இதன் உயரம் 2,183 மீட்டர்கள். இந்த மலையில் ஏறுபவர்களுக்கு நல்ல உடல் நலத்தகுதி இருக்க வேண்டும். முதன்முறையாக மலை ஏறுபவர்கள் இந்த மலையைத் தவிர்ப்பது நல்லது.[3] மலேசியாவில் இருந்து சென்று, இமயமலை ஏறிச் சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர், முதலில் இந்த கொர்பு மலையில் ஏறி தான் பயிற்சி, அனுபவம் பெற்றார்கள்.