கேமரன் மலையைக் கண்டுபிடித்தவர் From Wikipedia, the free encyclopedia
வில்லியம் கேமரன் (ஆங்கிலம்: William Cameron) என்பவர் மலேசியா, பகாங், மாநிலத்தில், கேமரன் மலையைக் கண்டுபிடித்தவர் என நினைவு கூரப்படுகிறது.[1][2]
சர் வில்லியம் கேமரன் William Cameron | |
---|---|
பிறப்பு | 1883 கிளாசுகோ இங்கிலாந்து |
இறப்பு | 20 நவம்பர் 1886 சிங்கப்பூர் |
பணி | கேமரன் மலையை கண்டுபிடித்தவர் |
இவரின் நினைவாக அந்த மலைக்கு கேமரன் மலை அல்லது கேமரன் ஐலண்ட்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.[3]
1880-ஆம் ஆண்டில் அவர் பகாங்கிலும், பின்னர் சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களிலும் ஆய்வுகள் செய்தவர். 1885-ஆம் ஆண்டில் நீரிணை குடியேற்றப் பகுதிகளில் (Straits Settlements) சிறப்பான ஆய்வுகள் செய்ததற்காக, இவருக்கு 'அரசு ஆய்வாளர் மற்றும் புவியியலாளர்' (Government Explorer and Geologist) எனும் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.[4]
ஐக்கிய இராச்சியம் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர். அங்கு உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் படித்த பின்னர், ஒரு கணக்காளராகப் பணியாற்றினார். பின்னர் அவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் புவியியல் துறையில் உயர்க்கல்வி பெற்றார்.
வில்லியம் கேமரன், ஆஸ்திரேலியாவில் இருந்து ஐரோப்பாவிற்குத் திரும்பிச் சென்றார். பிராங்கோ-ஜெர்மன் போரில் (Franco-German War) பிரெஞ்சு இராணுவத்துடன் இணைந்து போர் நிருபராகப் பணியாற்றினார். அந்தக் கட்டத்தில் ஓர் உளவாளியாகக் கைது செய்யப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டது.. இருப்பினும் அரச தந்திர தலையீட்டினால் விடுவிக்கப்பட்டார்.
சிறிது காலம், லண்டனில் அரசாங்க நிதித் துறையில் பணியாற்றினார். பின்னர் அவர் சிங்கப்பூர் சென்றார். அங்கு அவரின் சகோதரர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (Straits Times) பத்திரிகையின் உரிமையாளராக இருந்தார்.
வில்லியம் கேமரனுக்குத் திருமணமாகி, குழந்தைகள் சிலர் இருந்தனர். 1886 நவம்பர் 20-ஆம் தேதி சிங்கப்பூரில் பார்சி லாட்ஜ் (Parsee Lodge) எனும் இடத்தில் காலமானார்.[5]
1885-ஆம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில், அவர்களின் ஓய்வுத் தளமாக விளங்கிய இந்தக் கேமரன் மலை, 1925-ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாயத் துறையில் பிரசித்திப் பெறத் தொடங்கியது.[6]
கேமரன் மலையைப் பற்றி நில ஆய்வுகளை மேற்கொண்ட சர் வில்லியம் கேமரன், தன்னுடைய ஆய்வுக் குறிப்புகளைச் சமர்ப்பிக்கும் போது, சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருப்பதாகவும், பல பகுதிகளில் மென்மையான சரிவுகள் இருப்பதாகவும் கூறினார்.
அந்தக் காலகட்டத்தில் பேராக் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக சர் இயூ லோ (Sir Hugh Low) என்பவர் இருந்தார். வில்லியம் கேமரனின் நில ஆய்வுகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டார்.
அந்த மலைப் பகுதியில் ஒரு நல ஆக்க நிலையத்தையும்; உடல் நலம் பாதுகாக்கும் இடத்தையும் உருவாக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார். பின்னர் கேமரன்மலை உருவாக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.