![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/The_Quarterly_journal_of_the_Geological_Society_of_London_%25281916%2529_%252814784623302%2529.jpg/640px-The_Quarterly_journal_of_the_Geological_Society_of_London_%25281916%2529_%252814784623302%2529.jpg&w=640&q=50)
கிந்தா பள்ளத்தாக்கு
மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெ / From Wikipedia, the free encyclopedia
கிந்தா பள்ளத்தாக்கு என்பது (மலாய்:Lembah Kinta; ஆங்கிலம்:Kinta Valley; சீனம்:金塔谷) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிந்தா மாவட்டம்; கம்பார் மாவட்டம்; கோலாகங்சார் மாவட்டம்; பேராக் தெங்கா மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்து உள்ள ஒரு பள்ளத்தாக்குப் பகுதி ஆகும். 2018-ஆம் ஆண்டில் கிந்தா பள்ளத்தாக்கு மலேசியாவின் இரண்டாவது தேசியப் புவியல் பூங்கா எனஅறிவிக்கப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
கிந்தா பள்ளத்தாக்கு | |
பள்ளத்தாக்கு | |
நாடு | மலேசியா |
---|---|
மாநிலம் | பேராக் |
பகுதி | ஈப்போ |
மாவட்டம் | கிந்தா மாவட்டம் |
மாநகரசபை | ஈப்போ நகராண்மை கம்பார் நகராண்மை |
Range | தித்திவாங்சா கிளேடாங் |
ஆறு | பேராக் ஆறு கிந்தா ஆறு |
மிகவுயர் புள்ளி | |
- அமைவிடம் | கொர்பு மலை |
மிகத்தாழ் புள்ளி | |
- அமைவிடம் | கிளேடாங் மலை |
நீளம் | 48 மைல் (77 கிமீ) |
அகலம் | 24 மைல் (39 கிமீ) |
Easiest access | வடக்கு-தெற்கு விரைவுசாலை கூட்டரசு சாலை 1 |
மூடு
பேராக் ஆற்றின் துணை ஆறான கிந்தா ஆறு; கிளேடாங் மலைத் தொடருக்கு இடையில் பாய்ந்து செல்கிறது. அந்த இடத்தில் தான் இந்தக் கிந்தா பள்ளத்தாக்கு உள்ளது.
பழங்காலத்தில் இருந்தே பழங்குடி மக்களால் இங்கு ஈயம் தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர் மற்றும் ஐரோப்பியர்களின் வருகையினால் மேலும் தீவிரமாகத் தோண்டப்பட்டது.