பேராக் ஆறு
பேராக் மாநிலத்தில் மிக நீளமான ஆறு / From Wikipedia, the free encyclopedia
பேராக் ஆறு என்பது (மலாய்: Sungai Perak; ஆங்கிலம்: Perak River; ஜாவி: سوڠاي ڤيرق); மலேசியாவின் பேராக் மாநிலத்தில் மிக நீளமான ஆறு. 400 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, கிரிக்,லெங்கோங், கோலாகங்சார், பாரிட், பாசிர் சாலாக், தெலுக் இந்தான், பாகன் டத்தோ ஆகிய நகரங்களைக் கடந்து சென்று மலாக்கா நீரிணையை அடைகிறது.[1]
விரைவான உண்மைகள் பேராக் ஆறு Perak River, அமைவு ...
பேராக் ஆறு Perak River | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மலை சார்ந்த பேராக்-கிளாந்தான்-தாய்லாந்து பெலும் வனக் காப்பகம் |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | பாகன் டத்தோ |
⁃ ஆள்கூறுகள் | 4°01′N 100°47′E |
நீளம் | 400 km (250 mi) |
வடிநில அளவு | 14,900 km2 (5,800 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | கங்சார் ஆறு |
⁃ வலது | மாச்சாங் ஆறு; மேரா ஆறு |
நகரங்கள்- குடியிருப்புகள் | கிரிக் லெங்கோங் கோலாகங்சார் பாரிட் பாசிர் சாலாக் தெலுக் இந்தான் பாகன் டத்தோ |
மூடு
தீபகற்ப மலேசியாவில் மிக நீளமான ஆறு, பகாங் மாநிலத்தில் உள்ள பகாங் ஆறு ஆகும். அந்தப் பகாங் ஆற்றுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது நீளமான ஆறு இந்த பேராக் ஆறு ஆகும். பேராக் மாநிலத்தின் அரச நகரமான கோலாகங்சார் உட்பட பல நகரங்கள் இந்த ஆற்றின் கரைகளில் உள்ளன.[2]
ஈப்போ, கிந்தா பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் ஈயம் கண்டுபிடிக்கும் வரையில், பேராக்கில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகள் 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பேராக் ஆற்றின் அருகில்தான் அமைந்து இருந்தன.