![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fe/The_Chief_Minister_of_Maharashtra%252C_Shri_Uddhav_Thackeray_calling_on_the_Prime_Minister%252C_Shri_Narendra_Modi%252C_in_New_Delhi_on_February_21%252C_2020_%2528Uddhav_Thackeray%2529_%2528cropped%2529.jpg/640px-thumbnail.jpg&w=640&q=50)
உத்தவ் தாக்கரே
மகாராட்டிராவின் முன்னாள் முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
உத்தவ் பால் தாக்ரே (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஆவார்.[1][2]. இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகன் ஆவார். [3] மேலும் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்ரே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
விரைவான உண்மைகள் உத்தவ் தாக்கரே, 18வது மகாராட்டிர முதலமைச்சர் ...
உத்தவ் தாக்கரே | |
---|---|
![]() | |
18வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் 28 நவம்பர் 2019 – 29 சூன் 2022 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னையவர் | தேவேந்திர பத்னாவிசு |
பின்னவர் | ஏக்நாத் சிண்டே |
சிவசேனா தலைவர் மற்றும் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 சனவரி 2013 - 10 அக்டோபர் 2022 மற்றும் 10 அக்டோபர் 2023 முதல் | |
முன்னையவர் | பால் தாக்கரே மற்றும் பதவி நிறுவப்பட்டது |
சாமனா பத்திரிகை ஆசிரியர் | |
பதவியில் சூன் 2006 மற்றும் 2022 முதல் – 28 நவம்பர் 2019 மற்றும் பதவியில் | |
முன்னையவர் | பால் தாக்கரே |
பின்னவர் | சஞ்சய் ராவத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சூலை 1960 (1960-07-27) (அகவை 63) பம்பாய், மஹாராஷ்டிரா, இந்தியா (தற்போது மும்பை) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவ சேனா மற்றும் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) |
துணைவர் | ராஷ்மி தாக்கரே |
பிள்ளைகள் | 2 (ஆதித்யா தாக்கரே உட்பட) |
பெற்றோர் | பால் தாக்கரே மீனா தாக்ரே |
வாழிடம்(s) | மும்பை , மகாராட்டிரம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மூடு
2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்தித்தாளான சாமனாவை நிர்வகித்து வருகிறார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.