ஆறுமுகன் தொண்டமான்
From Wikipedia, the free encyclopedia
சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் (Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman, மே 29, 1964 - மே 26, 2020) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.[1] இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[2] இவர் 2020 மே 26 இரவு தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் போட்டியிடவிருந்தார்.[3][4]
விரைவான உண்மைகள் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ...
ஆறுமுகன் தொண்டமான் | |
---|---|
![]() | |
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1999 – மே 26, 2020 | |
முன்னையவர் | சௌமியமூர்த்தி தொண்டமான் |
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா மாவட்டம் | |
பதவியில் 16 ஆகத்து 1994 – 02 மார்ச் 2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1964-05-29)29 மே 1964 |
இறப்பு | 26 மே 2020(2020-05-26) (அகவை 55) தலங்கமை மருத்துவமனை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை பொதுசன முன்னணி |
உறவுகள் | சௌமியமூர்த்தி தொண்டமான் |
பிள்ளைகள் | நாச்சியார் விஜி ஜீவன் தொண்டமான் |
வாழிடம்(s) | யாவத்தை வீதி, கொழும்பு 05 |
முன்னாள் கல்லூரி | கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி |
மூடு