கொழும்பு
இலங்கையின் வர்த்தகத் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கொழும்பு (Colombo, சிங்களம்: කොළඹ) என்பது இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும்,[2] மக்கள்தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமும் ஆகும். கொழும்பு மாநகரத்தின் மக்கள்தொகை 5.6 மில்லியன்.[3][4][5][6] நகராட்சியில் மக்கள்தொகை 752,993 ஆகும்.[1] கொழும்பு இலங்கைத் தீவின் நிதி மையமும், சுற்றுலா மையமும் ஆகும்.[7] கொழும்பு நகரம் தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது, அத்துடன் இலங்கையின் அரசமைப்புத் தலைநகரான சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, தெகிவளை-கல்கிசை ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய கொழும்புப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பின் புறநகராதலால், கொழும்பு பொதுவாக இலங்கையின் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. இது மேல் மாகாணத்தின் நிருவாகத் தலைநகரமும், கொழும்பு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[8]
கொழும்பு
කොළඹ Colombo | |
---|---|
ஆள்கூறுகள்: 6°56′04″N 79°50′34″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
அரசு | |
• மாநகர சபை | கொழும்பு மாநகர சபை |
• தலைமையகம் | நகர மண்டபம் |
• நகர முதல்வர் | வெற்றிடம் |
பரப்பளவு | |
• தலைநகரம் (செயலாட்சி, நீதித்துறை) | 37.31 km2 (14.41 sq mi) |
• நிலம் | 699 km2 (270 sq mi) |
• மாநகரம் | 3,684 km2 (1,422 sq mi) |
ஏற்றம் | 1 m (3 ft) |
மக்கள்தொகை (2011[1]) | |
• தலைநகரம் (செயலாட்சி, நீதித்துறை) | 7,52,993 |
• அடர்த்தி | 20,182/km2 (52,270/sq mi) |
• நகர்ப்புறம் | 23,23,826 |
• பெருநகர் | 56,48,000 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே) |
அஞ்சல் | 0xxxx |
இடக் குறியீடு | 011 |
இணையதளம் | colombo |
1815 இல் இலங்கை பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, கொழும்பு தீவின் தலைநகராக மாற்றப்பட்டது,[9] 1948 இல் நாடு விடுதலை பெற்றபோது கொழும்பு இதன் தலைநகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1978-இல், அன்றைய அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பணிகள் சிறீ ஜெயவர்தனபுர கோட்டைக்கு மாற்றப்பட்டபோது, கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகராக நியமிக்கப்பட்டது.