கதிரவனை ஆராய அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி ஆய்வுக் கலம் From Wikipedia, the free encyclopedia
ஆதித்தியா எல்1 (Aditya L1) என்பது சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட சூரியப்புறணி வரைவி விண்கலமாகும், இது தற்போது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) உட்பட்ட பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.[1] இது புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள எல்1 புள்ளியைச் சுற்றி ஒரு சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் நிலைநிறுத்தப்படும். அங்கு இது சூரிய வளிமண்டலம், சூரியக் காந்தப் புயல்கள், புவியைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்யும்.
ஏவல் வடிவில் ஆதித்தியா-எல்1 | |||||||||||||||||
திட்ட வகை | கதிரவ நோக்கீடு | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | இசுரோ | ||||||||||||||||
இணையதளம் | www | ||||||||||||||||
திட்டக் காலம் | 5.2 ஆண்டுகள் (திட்டம்)[1] | ||||||||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||||||||
செயற்கைக்கோள் பேருந்து | ஐ-1கே | ||||||||||||||||
தயாரிப்பு | இசுரோ / IUCAA / IIA | ||||||||||||||||
ஏவல் திணிவு | 1,475 kg (3,252 lb)[2] | ||||||||||||||||
ஏற்புச்சுமை-நிறை | 244 kg (538 lb)[1] | ||||||||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||||||||
ஏவப்பட்ட நாள் | 2 செப்டம்பர் 2023, 06:20 ஒசநே[3][4] | ||||||||||||||||
ஏவுகலன் | PSLV-XL(சி57)[1] | ||||||||||||||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் | ||||||||||||||||
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | ||||||||||||||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||||||||||||||
Reference system | சூரியன்–புவி எல்1 | ||||||||||||||||
சுற்றுவெளி | சமநிலை ஈர்ப்பு வட்டம் | ||||||||||||||||
சுற்றுக்காலம் | 177.86 நாள்கள்[5] | ||||||||||||||||
|
சூரியனை ஆய்வுசெய்ய இந்தியாவால் ஏவப்படும் முதல் சூரியச் சுற்றுகலன் திட்டமாகும். இத்திட்ட இயக்குநராக நிகார் சாஜி விளங்குகிறார்.[3][4][6][7] இது சூ2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][8]
ஆதித்தியா எல்1 திட்டத்தின் முதன்மை அறிவியல் நோக்கங்களாகப் பின்வருவன அமைகின்றன:
ஆதித்தியா விண்கலக் கருத்துப் படிமத்தை விண்வெளி ஆராய்ச்சிக் குழு 2008 இல் உருவாக்கியது.[10][11] முதலில் இது ஒரு சிறிய 400 kg (880 lb) எடையுள்ள 800 கிமீ குத்துயரத் தாழ் புவி வட்டணையில் இருந்து சூரியப்புறணியை ஆய்வுசெய்யும் செயற்கைக்கோளாகவே கருதப்பட்டது. இதில் ஒரு புறணிவரைவி மட்டும் பொருத்தலாம் என வரையரை செய்யப்பட்டது. இதற்காக, 2017-18 ஆம் நிதியாண்டில் செய்முறைப் பாதீடாக மூன்று கோடி இந்திய உருபா ஒதுக்கவும் பட்டது.[12][13][14] பிறகு, இத்திட்ட எல்லை விரிவாக்கப்பட்டது. இது தற்போது ஓர் எளிய சூரிய, விண்வெளிச் சுற்றுச்சூழல் நோக்கீட்டகமாக புவி-சூரியச் சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் எல் 1 இலாகிரேஞ்சுப் புள்ளியில் ஏழு அறிவியல் கருவிகளோடு நிலைநிறுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது;[15] எனவே, இத்திட்டம் ஆதித்தியா எல் 1 என பெயர் மாற்றப்பட்டு, 2019 சூலையில் ஏவுதல் செலவில்லாமல் ₹378.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.[16]
ஆதித்தியா-L1 திட்டம் நிறைவுற, ஏவியதும் 109 நாட்கள் எடுத்துகொள்ளும்;[17] ஏனெனில், சமனிலை ஈர்ப்பு வட்டத்தில் அமையும் எல் 1 புள்ளி புவியில் இருந்து 15,00,000 கிமீ தொலைவில் இருப்பதால் இந்நேரம் வேண்டியிருக்கிறது. 1,500 kg (3,300 lb) எடையுள்ள விண்கலம் பலவகை நோக்கங்களுக்கான ஏழு அறிவியல் கருவிகளைக் கொண்டுசெல்கிறது. இவற்றில், சூரியப்புறணிச் சூடாக்கம், சூரியக் காற்று முடுக்கம், சூரியப்புறணி காந்தமானி, புவி வளிமண்டலத்தை இயக்கி, புவிக் கோளகக் காலநிலையைத் தீர்மானிக்கும் புவியருகு புறவூதாக் கதிர்வீச்சின் தோற்றத்தையும் கண்காணிப்பையும் செய்யும் கருவி, ஒளி, நிறக் கோளங்களைச் சூரியப்புறணியுடன் பிணைத்தலை ஆயும் கருவி, விண்வெளி, புவித்தரைத் தொழில்நுட்பங்களைத் தாக்கும் புவிசுற்றிலுமுள்ள விண்வெளிச் சுற்றுச்சூழலின் களப் பான்மைகளை அறிய, உயர் ஆற்றல் துகள் பாயத்தையும் சூரியக் காற்று, சூரியக் காந்தப்புயல்களின் காந்தப்புலங்களை அளத்தலும் ஆகியன அடங்கும்.[1]
ஆதித்தியா-L1 விண்கலம் சூரியப்புறணி, ஒளி, நிறக்கோளங்களின் நோக்கீடுகளைத் தரும். மேலும், ஒரு கருவி எல் 1 வட்டணையை அடையும் உயர் ஆற்றல் சூரியத் துகள்களின் பாயத்தை ஆயும்; காந்தமானி சமனிலை ஈர்ப்பு வட்ட எல் 1 புள்ளியருகேயுள்ள சூரியக் காந்தப்புலச் செறிவில் நிகழும் மாற்றங்களை அளக்கும். இந்த அறிவியல் கருவிகள் புவிக் காந்தப்புலத்தின் குறுக்கீட்டுக்கு வெளியே அமையவேண்டும். எனவே, முதலில் முன்மொழிந்த தாழ் புவி வட்டணை ஆதித்தியா திட்டத்தில் இவற்றை வைத்து ஆய்வு செய்திருக்க முடியாது.[18]
சூரிய இயற்பியலில் இதுவரை தீர்க்கப்படாத முதன்மையான சிக்கல் சூரிய வளிமண்டல மேலடுக்கின் வெப்பநிலை 1,000,000 K (1,000,000 °C; 1,800,000 °F) அளவு சூடாகவும் அதன் கீழடுக்கின் வெப்பநிலை 6,000 K (5,730 °C; 10,340 °F) ஆக மட்டுமே அமைதலாகும். அதோடு, குறுங்கால இடைவெளியிலும் நெடுங்கால இடைவெளியிலும் சூரியக் கதிர்வீச்சு புவி வளிமண்டல இயங்கியலை சரியாக எப்படி தாக்குகிறது என்பதும் புரிந்துகொள்ளப்படாமலே உள்ளது. இத்திட்டம் சூரிய வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளின் படிமங்களை ஒரே நேரத்தில் பெறவுள்ளதால், ஆற்றல் ஓரடுக்கில் இருந்து மற்றோர் அடுக்குக்கு எப்படி வழிபடுத்தப்பட்டு கடத்தப்படுகிரது என்பதைத் தெளிவாக அறிய வாய்ப்புள்ளது. எனவே, ஆதித்தியா எல் 1 விண்கலத்திட்டம் சூரிய இயங்கியல் நிகழ்வுகளை எளிதாகப் புரிந்துகொள்ளவும் சூரிய இயற்பியலிலும் எல்லிய இயற்பியலிலும் உள்ள சில சிக்கல்களைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் உதவும்.
ஆதித்தியா எல் 1 கருவிகள் சூரிய வளிமண்டலத்தை நோக்கீடு செய்யும்; முதன்மையாக நிறக்கோளத்தையும் சூரியப்புறணியையும்ஆயும். களக்கருவிகள் L1புள்ளியின் களச்சூழலை நோக்கீடு செய்யும். விண்கலத்தில் ஏழு கருவிகள் உள்ளன; இவற்றில் நான்கு சூரியனை ஆயும் தொலையுணர்வுக் கருவிகள்; மற்ற மூன்றும் களச்சூழல் நோக்கீட்டுக் கருவிகள் ஆகும்:[19]
வகை | வ.எண் | கருவி | செயல் திறன் | உருவாக்கம் |
---|---|---|---|---|
தொலையுணர்வுக் கருவிகள் | 1 | கட்புல உமிழ்வரி சூரியப் புறணி வரைவி(VELC) | சூரியப் புறணி/படிமமாக்கம், சூரியப் புறணி வரைவி | இந்திய வானியற்பியல் மையம், பெங்களூரு |
2 | சூரிய புறவூதா படிமமாக்கத் தொலைநோக்கி (SUIT) | ஒளிக்கோளம், நிறக்கோளம் படிமமாக்கம்- குறும்பட்டையும் அகல்பட்டையும் | பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையம் , பூனா | |
3 | சூரியத் தாழ் ஆற்றல் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி (SoLEXS) (SoLEXS) | மென் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி: ஒரு விண்மீனாக சூரிய நோக்கீடு | யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு | |
4 | உயர் ஆற்றல் L1 வட்டணை எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி(HEL1OS) | வன் எக்சுக்கதிர் கதிர்நிரல்மானி: ஒரு விண்மீனாக சூரிய நோக்கீடு | யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், பெங்களூரு | |
கள ஆய்வுக் கருவிகள் | 5 | ஆதித்தியா சூரியக் காற்று துகள் செய்முறை(ASPEX) | சூரியக் காற்று]]/துகள் பகுப்பாய்வி மின்னன்கள், திசைகள் உள்ள அடர் இயனிகள் | இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாது |
6 | ஆதித்தியா மின்மப் பகுப்பாய்வித் தொகுப்பு (PAPA) | சூரியக் காற்று/துகள் பகுப்பாய்வி மின்னன்கள், திசைகள் உள்ள அடர் இயனிகள் | சூரிய இயற்பியல் ஆய்வகம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திருவனந்தபுரம் | |
7 | மேம்படுத்திய மூவச்சு உயர்பிரிதிறன் இலக்கவியல் காந்தமானிகள் | களக் காந்தப் புலம் (Bx, By, Bz). | மின்-ஒளியியல் அமைப்பு ஆய்வகம், பெங்களூரு | |
ஆதித்தியா எல் 1 திட்டம் சூரிய நடத்தையையும் புவி, விண்வெளி சூழலுடன்னன ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ளலைக் கணிசமான அளவில் மேம்படுத்தலை உறுதிபடுத்தும். திட்டத்தின் திட்டமிடப்பட்டுள்ள நோக்கீடுகளும் தர்வவுகளை திரட்டலும் புதிய திருப்புமுனை கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதோடு சூரிய இயற்பியல், எல்லிய இயற்பியல் புலங்களில் புதிய பார்வைகளைத் திறந்து வைக்கும்.
2023 செப்டம்பர் 2 அன்று 11:50 மணி (இசீநே) அளவில், முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV-C57) வழி, சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவான் விண்வெளி ஆய்வு மையம் (SDSC) இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து ஆதித்தியா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[3][4][6][25]
ஏவுநாள் காலையில், ஏவிடத்துக்கு அருகில் அமைந்த காட்சி அரங்கில் பல ஆயிரம் மக்கள் ஏவூர்தி சீறி விண்ணில் பாய்வதைப் பார்க்க குழுமிவிட்டனர், அதேவேளையில் ஒருங்கே , தேசியத் தொலைக்காட்சியிலும் ஏவுதல் பரப்புரையாளர்களின் விவரிப்போடு ஒளிபரப்பப்பட்டது.[4]
ஆதித்தியா எல் 1 விண்கலம்,63 மணித்துளிகள், 20 நொடிகள் பரந்த பிறகு, 12:54 மணி (IST) அளவில் புவி சுற்றும் நீள்வட்ட வட்டணையில் வெற்றிகரமாக நுழைவிக்கப்பட்டது. இந்த வட்டணையின் அளவுகள் 235x19500 கிமீ ஆகும்.
ஆதித்தியா எல் 1 விண்கலம் L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையில் மாற்றி வைப்பதற்கு முன்பு நான்கு புவி ஈர்ப்பு வட்டணைகளில் சுற்றிவரும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஏவிய பிறகு, ஆதித்தியா எல் 1 விண்கலம் தன் வரையறுத்த L1 இலாகிரேஞ்சியப் புள்ளி வட்டணையை அடைவதற்கு முன் தோராயமாக 127 நாட்கள் விண்ணில் L1 நோக்கிப் பயணம் செய்யும்.[26]
ஆதித்தியா எல் 1 விண்கலம் 2023, செப்டம்பர் 3 அன்று முதல் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 245 km (152 mi) க்கு 22,459 km (13,955 mi) ஆக உயர்த்தியது.[27]
ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 5 அன்று இரண்டாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 282 km (175 mi) க்கு 40,225 km (24,995 mi) ஆக உயர்த்தியது.
ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 10 அன்று மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 296 km (184 mi) into 71,767 km (44,594 mi) ஆக உயர்த்தியது.
ஆதித்தியா எல்1 2023, செப்டம்பர் 15 அன்று நான்காம் மூன்றாம் புவிசுற்றல் நடவடிக்கையாக, தன் வட்டணையை 256 km (159 mi) by 121,973 km (75,791 mi) ஆக உயர்த்தியது.
ஆதித்தியா-L1 2023, செப்டம்பர் 19 அன்று புவி வட்டணையை விட்டு வெளியேறி, இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழையும் இறுதி நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றி அப்புள்ளியை நோக்கிப் பரந்துள்ளது. இது 1.5 மில்லியன் கிமீ தொலவில் உள்ள தன் அறுதி இலக்கிடத்தை அடைய குறைந்தது நான்கு மாதங்கள் பிடிக்கும்.
ஆதித்தியAditya-L1 2023, செபுதம்பர் 30 அன்று புவு ஆட்ப்பாட்டுக் கோளத்திலிருந்து விடுபட்டு, இலாகிரேஞ்சியப் புள்லி 1 நோக்கிய தடவழியில் நுழைந்துவிட்டது.[28]
ஆதித்தியா L 1 2023, அக்தோபர் 6 அன்று தடவழித் திருத்தை(TCM) மேற்கொண்டது. இது 2023 செபுதம்பர் 19 இல் இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் நுழைவை(TL1I) நிகழ்த்திய பிறகான தடவழி இயக்கத்தை மதிப்பிட்டதில், தடவழித் திருத்தம் தேவையாகியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[28]
கட்டமும் செயல்வரிசையும் | நாள்/நேரம் | நேரம் (இசீநே) | அண்மைநிலை | சேய்மைநிலை | வட்டணைக் காலம் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|---|
ஏவுதல் | |||||||
புவி வட்டணயில் நுழைத்தல் | 2 செப்டம்பர் 2023 | 12:54 மதியம் | 235 km (146 mi) | 19,500 km (12,100 mi) | 22 மணி, 46 மணித்துளிகள் | [29] | |
புவிசார் நடவடிக்கைகள் | |||||||
புவிசார் நடவடிக்கை 1 | 3 செப்டம்பர் 2023 | 11:40 முற்பகல் | 245 km (152 mi) | 22,459 km (13,955 mi) | 39 மணி, 20 மணித்துளிகள் | [30] | |
புவிசார் நடவடிக்கை 2 | 5 செபடம்பர் 2023 | 3:00 விடியற்காலை | 282 km (175 mi) | 40,225 km (24,995 mi) | 4 நாள், 23 மணி, 30 மணித்துளி | [31] | |
புவிசார் நடவடிக்கை 3 | 10 செப்டம்பர் 2023 | 2:30 பின்னிரவு | 296 km (184 mi) | 71,767 km (44,594 mi) | 4 நாள், 23 மணி 45 மணித்துளிகள் | [31] | |
புவிசார் நடவடிக்கை 4 | 15 செப்டம்பர் 2023 | 2:00 பின்னிரவு | 256 km (159 mi) | 121,973 km (75,791 mi) | 3 நாள், 23 மணி 45 மணித்துளிகள் | [32] | |
இலாகிரேஞ்சியப் புள்ளி 1 க்குப் பெயரும் தடவழியில் நுழைத்தல் | 19 செப்டம்பர் 2023 | 2:15 பின்னிரவு | [33] | ||||
தடவழித் திருத்த நடவடிக்கைகள் | |||||||
தடவழித் திருத்த நடவடிக்கை | 6 அக்தோபர் 2023 | 16 நொ | [34] | ||||
சம ஈர்ப்பு வட்டணையில் நுழைத்தல் | |||||||
சம ஈர்ப்பு வட்டணையில் நுழைத்தல் | ஜனவரி 2024 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.