சங்கரசுப்ரமணியன், கே
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சங்கரசுப்பிரமணியன், கே. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) பணிபுரியும் இந்தியச் சூரிய அறிவியலாளர் ஆவார். 2023 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆதித்யா - எல் 1 திட்டத்தின் முதன்மை அறிவியலாளர் ஆவார்.[1]
சங்கரசுப்பிரமணியன்,கே Sankarasubramanian, K | |
---|---|
பிறப்பு | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இயற்பியலில் முனைவர்,
இந்திய வானியல், வானியற்பியல் நிறுவனம், பெங்களூரு. |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய வானியல், வானியற்பியல் நிறுவனம் (முனைவர்) |
பணி | சூரிய அறிவியலாளர் |
அமைப்பு(கள்) | [[இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்]] (இசுரோ) |
அறியப்படுவது | முதன்மை அறிவியலாளர், ஆதித்தியா எல் 1 |
சங்கரசுப்பிரமணியன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். கருவி ஒலியியல்,, சூரியக் காந்தப் புலம் ஆகியவை அவரது ஆர்வமுள்ள ஆராய்ச்சிப் பகுதிகளாகும்.[2]
சந்திரயான் - 1, சந்திரயான் 2 ஆகிய இசுரோ பயணங்களுக்குச் சங்கரசுப்பிரமணியன் ஏராளமான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 2023 செப்டம்பர் நிலவரப்படி , அவர் யுஆர் விண்வெளி மையத்தின் விண்வெளி வானியல் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் , இக்குழு ஆதித்யா - எல் 1, எக்ஸ்போசாட், சந்திரயான் - 3 உந்துவிசை தொகுதியின் விண்வெளிப் பயணங்களில் அறிவியல் கருவிகளை உருவாக்குகிறது. 2022 அக்தோபரில் ஆதித்யா எல் 1 திட்ட முதன்மை அறிவியலாலராக அவர் நியமிக்கப்பட்டார்.[3] ஆதித்யா - எல்1 இன் எக்சுக்கதிர் கருவிகளில் ஒன்றின் முன்னணி ஆராய்ச்சியாளராக அவர் உள்ளார். மேலும் சங்கரசுப்பிரமணியன் ஆதித்யா - எல் 1 அறிவியல் பணிக்குழுவின் தலைவராகவும் உள்ளார் , இதில் பல இந்திய நிறுவனங்களிலிருந்து சூரிய அறிவியல் புல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.