Remove ads
From Wikipedia, the free encyclopedia
புளும்பொன்டின் (Bloemfontein, ஆபிரிக்கானா, டச்சு மொழியில் "மலர்களின் ஊற்று" அல்லது "மலரும் ஊற்று") தென்னாப்பிரிக்காவின் மாநிலம் விடுதலை இராச்சியத்தின் தலைநகரமாகும்; தவிரவும் தென்னாப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றாகும் -- தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தலைநகரமாகும்; மற்ற இரு தலைநகரங்கள் சட்டப் பேரவை உள்ள கேப் டவுன் மற்றும் நிர்வாகத் தலைநகரமான பிரிட்டோரியா ஆகும்.
புளும்பொன்டின்
மாங்கவுங் | |
---|---|
அடைபெயர்(கள்): ரோசாக்களின் நகரம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாநிலம் | விடுதலை இராச்சியம் (ஃப்ரீ ஸ்டேட்) |
நகராட்சி | மாங்கவுங் |
நகரம் | 1846[1] |
பரப்பளவு | |
• நகரம் | 236.17 km2 (91.19 sq mi) |
• மாநகரம் | 6,283.99 km2 (2,426.26 sq mi) |
ஏற்றம் | 1,395 m (4,577 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,56,185 |
• பெருநகர் | 7,47,431 |
• பெருநகர் அடர்த்தி | 119/km2 (310/sq mi) |
இடக் குறியீடு | 051 |
புளும்பொன்டினில் உரோசாக்கள் மிகுதியாக விளைவதாலும் ஆண்டுதோறும் இங்கு உரோசா விழா நடப்பதாலும் இந்நகரம் பரவலாகவும் கவித்துவமாகவும் "உரோசாக்களின் நகரம்" என அறியப்படுகின்றது.[3][4] சோத்தோ மொழியில் இந்நகரம் மாங்கவுங் எனப்படுகின்றது; இதற்கு "சிவிங்கிப்புலிகளின் இடம்" எனப் பொருள்படும். 2011இலிருந்து மாங்கவுங் பெருநகராட்சியின் பகுதியாக புளும்பொன்டின் உள்ளது.
புளும்பொன்டின் 29°06′S 26°13′Eஆட்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 1,395 m (4,577 அடி) உயரத்தில் புல்வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 369,568 ஆகவும், மாங்கவுங் நகராட்சியின் மக்கள்தொகை 645,455 ஆகவும் உள்ளது.
புளும்பொன்டின் எச். டக்ளசு வார்டன் என்பவரால் தளபதி 1846இல் நிறுவப்பட்டது. இது ஒரு படைத்துறைக் கோட்டையாகவும் வாழுமிடமாகவும் உருவாக்கப்பட்டது. 1848–54 காலத்து பிரித்தானியக் கட்டுப்பாட்டிலிருந்த ஆரஞ்சு ஆறு இராச்சிய அரசின் ஆட்சி மையமாக விளங்கியது; தற்போதைய ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தின் (சுருக்கமாக விடுதலை இராச்சியம் எனவும் அறியப்படுகின்றது) தலைநகரமாகவும் விளங்குகின்றது.
1910இல் புளும்பொன்டின் தென்னாப்பிரிக்க நீதித்துறையின் தலைமையிடமானது. இங்கு பல அரசுக் கட்டிடங்களும் மருத்துவமனைகளும் பள்ளிகளும் உள்ளன.
தட்பவெப்பநிலை வரைபடம் புளும்பொன்டின் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
83
31
15
|
111
29
15
|
72
27
12
|
56
23
8
|
17
20
3
|
12
17
-2
|
8
17
-2
|
15
20
1
|
24
24
5
|
43
26
9
|
58
28
12
|
60
30
14
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: SAWS[5] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
புளும்பொன்டின் மத்திய தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஈரப்பதம் இல்லாத நிலப்பகுதியாக உள்ளது. புளும்பொன்டினைச் சுற்றிலும் சிறு குன்றுகள் உள்ளன. இந்நிலப்பகுதியில் பெரும்பாலும் புல் வளர்கின்றது. வெப்பமானக் கோடைக்காலத்தையும் மிதமான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது; ஆகத்து 2006இல் பனித்தூவி பொழிந்தது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Bloemfontein (1961−1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 39.3 (102.7) |
38.9 (102) |
34.7 (94.5) |
33.3 (91.9) |
29.5 (85.1) |
24.5 (76.1) |
24.1 (75.4) |
28.6 (83.5) |
33.6 (92.5) |
34.8 (94.6) |
36.6 (97.9) |
37.7 (99.9) |
39.3 (102.7) |
உயர் சராசரி °C (°F) | 30.8 (87.4) |
28.8 (83.8) |
26.9 (80.4) |
23.1 (73.6) |
20.1 (68.2) |
16.8 (62.2) |
17.4 (63.3) |
20.0 (68) |
24.0 (75.2) |
26.1 (79) |
28.1 (82.6) |
30.1 (86.2) |
24.4 (75.9) |
தினசரி சராசரி °C (°F) | 22.8 (73) |
21.4 (70.5) |
19.2 (66.6) |
14.9 (58.8) |
10.7 (51.3) |
6.9 (44.4) |
7.2 (45) |
10.1 (50.2) |
14.6 (58.3) |
17.5 (63.5) |
19.9 (67.8) |
21.9 (71.4) |
15.6 (60.1) |
தாழ் சராசரி °C (°F) | 15.3 (59.5) |
14.7 (58.5) |
12.4 (54.3) |
7.7 (45.9) |
2.5 (36.5) |
-1.5 (29.3) |
-1.9 (28.6) |
0.5 (32.9) |
5.2 (41.4) |
9.1 (48.4) |
11.7 (53.1) |
13.8 (56.8) |
7.5 (45.5) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.6 (42.1) |
4.3 (39.7) |
0.8 (33.4) |
-2.6 (27.3) |
-8.7 (16.3) |
-9.1 (15.6) |
-9.6 (14.7) |
-9.7 (14.5) |
-6.7 (19.9) |
-2.9 (26.8) |
-0.1 (31.8) |
3.3 (37.9) |
−9.7 (14.5) |
பொழிவு mm (inches) | 83 (3.27) |
111 (4.37) |
72 (2.83) |
56 (2.2) |
17 (0.67) |
12 (0.47) |
8 (0.31) |
15 (0.59) |
24 (0.94) |
43 (1.69) |
58 (2.28) |
60 (2.36) |
559 (22.01) |
% ஈரப்பதம் | 55 | 62 | 64 | 66 | 62 | 62 | 57 | 50 | 46 | 50 | 52 | 52 | 57 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 11 | 11 | 11 | 9 | 4 | 3 | 2 | 3 | 4 | 7 | 9 | 10 | 84 |
சூரியஒளி நேரம் | 296.3 | 247.9 | 258.6 | 250.2 | 266.0 | 249.9 | 272.6 | 285.9 | 278.0 | 290.9 | 296.5 | 319.5 | 3,312.3 |
Source #1: NOAA[6] | |||||||||||||
Source #2: தென்னாப்பிரிக்க வானிலை சேவை[5] |
நகரின் பொருளியல் பெரும்பாலும் அடைக்கப்பட்ட பழம், கண்ணாடி பொருட்கள், தளபாடம், நெகிழிகள், மற்றும் இரும்புவழிப் போக்குவரத்து பொறியியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நகரின் வடகிழக்கில் 160 கிமீ (100 மைல்) தொலைவில் தங்கக் களங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் நகரின் பொருளியல் வளர்ச்சி விரைவாக இருந்தது. ஆரஞ்சு ஆறு திட்டமும் பொருளியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. இத்திட்டத்தின் பயனாக அனல்மின்சாரமும் நீர்பாசனத்திற்கும் மனிதருக்கும் நீரும் கிடைக்கின்றது.
புளும்பொன்டினின் பரவலான உடல் திறன் விளையாட்டுக்களாக காற்பந்தாட்டம், ரக்பி, துடுப்பாட்டம் உள்ளன. 2010இல் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பின் உலகக்கோப்பை சில ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.