From Wikipedia, the free encyclopedia
விடுதலை இராச்சியம் (Free State, 1995க்கு முன்னர் ஆரஞ்சு விடுதலை இராச்சியம்) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் புளும்பொன்டின், தென்னாப்பிரிக்காவின் நீதித்துறை தலைநகரமாகவும் விளங்குகின்றது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் ஆரஞ்சு விடுதலை இராச்சியமாகவும் போயர் குடியரசாகவும் பின்னாளில் ஆரஞ்சு விடுதலை இராச்சிய மாநிலமாகவும் இருந்துள்ளது. 1994இல் பந்துசுத்தானைப் பிரித்து தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தபோது இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. துவக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்த நான்கு மாநிலங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.
விடுதலை இராச்சியம்
| |
---|---|
குறிக்கோளுரை: கட்லெகோ கா கோபனோ (ஒற்றுமையே வெற்றிக்கு வழி) | |
![]() தென்னாப்பிரிக்காவில் விடுதலை இராச்சியத்தின் அமைவிடம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
ஆரஞ்சு விடுதலை இராச்சியம் | 17 பெப்ரவரி 1854 |
ஆரஞ்சு விடுதலை இராச்சிய மாகாணம் | 31 மே 1910 |
விடுதலை இராச்சியம் | 27 ஏப்ரல் 1994 |
தலைநகர் | புளும்பொன்டின் |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• வகை | நாடாளுமன்ற முறை |
• பிரதமர் | ஏசு மெகாசூல் (ஆ.தே.கா) |
பரப்பளவு [1]:9 | |
• மொத்தம் | 1,29,825 km2 (50,126 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் மூன்றாவது |
உயர் புள்ளி | 3,291 m (10,797 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 27,45,590 |
• மதிப்பீடு (2015) | 28,17,900 |
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் எட்டாவது |
• அடர்த்தி | 21/km2 (55/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் எட்டாவது |
மக்களினக் குழுக்கள் [1]:21 | |
• கருப்பினத்தவர் | 87.6% |
• வெள்ளையர் | 8.7% |
• கலவையர் | 3.1% |
• இந்தியர் (அ) ஆசியர் | 0.4% |
மொழிகள் [1]:25 | |
• சோத்தோ | 64.2% |
• ஆப்பிரிக்கானா | 12.7% |
• சோசா | 7.5% |
• சுவானா | 5.2% |
• சுலு | 4.4% |
• ஆங்கிலம் | 2.9% |
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-FS |
இணையதளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.