பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்

From Wikipedia, the free encyclopedia

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்

பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள் (Ancient Egyptian funerary practices), எகிப்தின் துவக்க கால (கிமு 3150 - கிமு 2686) அரச குடும்பத்தினரின் இறந்த உடல்களுக்கு விரிவான இறுதிச் சடங்குகள் செய்தனர். எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை இருப்பதாக உறுதியாக நம்பியதால், மரணத்திற்கு பிறகும் உடல் மற்றும் உயிரின் அழியாமையை உறுதிப்படுத்த மந்திரங்களுடன் சடங்குகள் செய்வதுடன், இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி, சவப்பெட்டியில் வைத்து, மம்மியின் மூடி மீது மந்திர எழுத்துக்களை பொறிப்பதுடன், இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இறந்தவர்களுக்கான உணவு வகைகளுடன் கல்லறைக் கோயிலில் வைத்தனர்.[1][2]பழைய எகிப்திய இராச்சிய காலத்தில்தான் (கிமு 2686–கிமு 2181) இறந்தவர் சடலங்களை மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் தோன்றியது. பின்னர் பிரமிடுகள் கட்டாது, நைல் நதியின் மேற்குப் பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் உள்ள மன்னர்களின் சமவெளி மற்றும் அரசிகளின் சமவெளிகளில் இறந்த அரச குடும்பத்தினர் உடல்களை அடக்கம் செய்யும் வழக்கம் தோன்றியது. மேலும் பிரமிடு அருகே இறந்தவர்கள் வழிபட நினைவுக் கோயில்கள் எழுப்பினர்.

Thumb
நித்திய வீட்டில் உள்ளே சவப் பெட்டியில் இறந்தவர் உடலை வைப்பதற்கு முன்னர் மம்மியின் வாய் திறப்புச் சடங்கு நடத்தப்படும் காட்சி

பழங்கால எகிப்திய அடக்கம் செயல்முறை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து, பழைய பழக்கவழக்கங்கள் நிராகரிக்கப்பட்டு புதியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் இந்த இறப்புச் செயல்முறைகளில் பல முக்கிய கூறுகள் நீடித்தன. குறிப்பிட்ட விவரங்கள் காலப்போக்கில் மாறினாலும், இறந்த உடலை மம்மிப்படுத்தல், மந்திரச் சடங்குகள் செய்வது மற்றும் கல்லறையில் பொருட்கள் வைப்பது போன்ற வழக்கம் பிந்தைய கால எகிப்திய இராச்சியம் வரை தொடர்ந்தன.

வரலாறு

Thumb
மம்மியை அடக்கம் செய்யும் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தொழில் முறையாக ஒப்பாரி வைத்து அழும் பெண்கள்

துவக்க காலம், நித்திய வீடுகள் மற்றும் சவப்பெட்டிகள்

பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை இருப்பதாக உறுதியாக நம்பினர். எனவே முதல் வம்ச காலத்திலிருந்து எகிப்திய மன்னர்களின் பிணங்களை கல் சவப்பெட்டியில் வைத்து மஸ்தபா எனும் நித்திய வீடுகளில் அடக்கம் செய்தனர். இறப்பின் கடவுளான ஒசிரிசு உடன் தொடர்புறுத்தி, மம்மிகளைச் நித்திய வீடு எனும் மஸ்தபாவில் அடக்கம் செய்யும் போது, இறந்தவர் பயன்படுத்திய பொருட்களுடன், இறந்தவருக்கான உணவு வகைகள், நகைகள் மற்றும் விளையாட்டுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட ஜாடிகளில் ஆயுதங்கள், ஒப்பனைத் தட்டுகள் மற்றும் மது பானங்கள் ஆகியவை வைத்து அடக்கம் செய்தனர்.[3]

பழைய இராச்சியம், பிரமிடுகள் மற்றும் பிணத்தை பதப்படுத்தல்

Thumb
எகிப்தின் பழைய இராச்சிய (கிமு 2500 – 2350) காலத்திய சுண்ணக்கல் நினைவுச் சின்னம், இதில் மூன்று நபர்கள் காளை மாடுகளை கல்லறை உரிமையாளர்களுக்காக கொண்டு வருதல், இது எகிப்தியர்களின் உணவிற்காக வளர்க்கப்பட்டது.

பழைய இராச்சிய (கிமு 2500 – 2350) காலத்தில், மன்னர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் இறந்த உடல்களை அடக்கம் செய்ய முதன் முதலாக பிரமிடுகள் எழுப்பப்பட்டது. பிரமிடுகளில் அமைந்த நித்திய வீடுகள் எனும் கல்லறைக் கட்டிடங்களில் இறந்தவர்களின் உடலை மம்மியாக்கி மரச் சவப்பெட்டியில் அடக்கம் செய்தனர். எகிப்தியர்கள் தங்களின் முக்கிய சூரியக் கடவுளான இரா, கிழக்கு திசையில் உதிப்பதால், இரா கடவுளுக்கு மரியாதை செய்யும் வகையில் இறந்தவர்களின் உடல்களை நைல் நதியின் மேற்குக் கரைப் பகுதிகளில் புதைத்தனர்.

மம்மியக்கம் செய்யும் போது இறந்தவர் உடலில் உள்ள இதயம் தவிர்த்து மூளை, நுரையீரல், இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுநீரகம், குடல் போன்ற உடற்பகுதிகளை நீக்கி விடுவர். இறந்தவர் உடலை உப்பு கொண்டு பதப்படுத்திய பிறகு எண்ணெயில் முக்கி எடுத்த பருத்தி துணியைக் கொண்டு பல முறை சுற்றுவர். பூச்சி அரிப்புகளை தடுக்க எண்ணைய்த் துணி சுற்றிய உடல் மீது மூலிகை சாறுகளை பூசிவிடுவர். உடலில் எடுத்த பிற பகுதிகளை தனித்தனி கேனோபிக் ஜாடிகளில் இட்டு கல்லறையில் வைப்பர். மேலும் மம்மியின் முகத்தில் பொன் அல்லது மரத்தால் ஆன முகமூடி அணிவிப்பர். சவப்பெட்டி மீது இறந்த பார்வோன் குறித்தான செய்திகளை எகிப்திய மொழியில் எழுதி வைப்பர். கல்லறைச் சுவர்களில் இறந்த பார்வோனின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை படவெழுத்துகளில் பல வண்ண நிறத்தில் எழுதுவர். .[4]

மத்திய கால இராச்சியம்

Thumb
சவப்பெட்டியில் உள்ள மம்மியின் முகமூடி

மத்திய கால இராச்சிய காலத்தில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினொன்றாம் வம்ச காலத்தின் போது, தெற்கு எகிப்தில் உள்ள தீபை நகரத்தின் அருகே உள்ள மலைக்குன்றுகளில் கல்லறைகள் கட்டி அடக்கம் செய்தனர். ஆனால் பன்னிரண்டாம் வம்ச மன்னர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களின் மம்மிகளை பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மஸ்தபா எனும் கல்லறைக் கோயில்களில் அடக்கம் செய்ய விரும்பினர். ஒரு மம்மி அருகே நகையணிகள், பன்னிரண்டு ரொட்டிகளும், ஒரு கால் மாட்டிறைச்சியும், உணவு வகைகளுடன், ஒரு குடம் பீர் மட்டுமே இருந்தன. ஆனால் எளியவர்களின் மம்மிகளுக்கு அருகில் பெரும் மதிப்புள்ள பொருள்கள் அரிதாகவே காணப்பட்டன. எகிப்தின் முதல் இடைநிலை காலத்தில் பிரபலமாக இருந்த மரக்கல்லறைகள் மாதிரியான சில கல்லறைகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. மரப்படகுகளின் மாதிரிகள், உணவு உற்பத்தியின் காட்சிகள், கைவினைஞர்கள் மற்றும் பட்டறைகள் மற்றும் எழுத்தாளர்கள் அல்லது வீரர்கள் போன்ற தொழில்கள் இந்த காலகட்டத்தில் காணப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வம்சத்தின் சில செவ்வக சவப்பெட்டிகளில் குறுங்கல்வெட்டுகள் மற்றும் இறந்தவருக்குத் தேவையான மிக முக்கியமான உணவு வகைகள் இருந்தன. ஆண்களைப் பொறுத்தவரை, சித்தரிக்கப்பட்ட உசாப்திகள், கல் வண்டுகள் போன்ற உருவங்கள், ஆயுதங்கள் மற்றும் அலுவலக அடையாளங்கள் மற்றும் உணவுகள் இருந்தன. பெண்கள் சவப்பெட்டிகளில் உணவு மற்றும் பானம் கொண்ட கண்ணாடி ஜாடிகள், செருப்புகள் மற்றும் ஜாடிகளை சித்தரித்தனர். சில சவப்பெட்டிகளில் பண்டைய எகிப்திய மொழியில் உரைகள் கொண்டிருந்தது, இறந்தவரின் மம்மியாக மற்றொரு வகையான ஃபைன்ஸ் மாதிரியானது பன்னிரண்டாம் வம்சத்தில் மம்மியின் கல்லறையில் இறந்தவரின் சிலைகள் நிறுவப்பட்டது. பிற்கால பன்னிரண்டாம் வம்சத்தில், அடக்கம் செய்யப்பட்டதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இது மன்னர் மூன்றாம் செனுஸ்ரெத் (கிமு 1836-1818) இயற்றிய நிர்வாக மாற்றங்களை பிரதிபலிக்கிறது. பதின்மூன்றாம் வம்ச காலத்தில் மம்மியில் அலங்காரத்தில் மற்றொரு மாற்றத்தைக் கண்டது. வடக்கு மற்றும் தெற்கு எகிப்திய பகுதிகளில் வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டன, அந்த நேரத்தில் பரவலாக்கப்பட்ட அரசாங்க அதிகாரத்தின் பிரதிபலிப்பு. ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது, முந்தைய காலங்களில் இது ஒரு அரிதான நிகழ்வு மட்டுமே. ஒரு குடும்பத்தால் தலைமுறைகளாக ஒரு கல்லறையை மீண்டும் பயன்படுத்துவது செல்வம் மிகவும் சமமாக பரவியபோது நிகழ்ந்ததாகத் தெரிகிறது.[5]

புது எகிப்து இராச்சியம்

Thumb
மன்னர்களின் சமவெளி (கல்லறை எண் 62)-இல் பார்வோன் துட்டன்காமன் கல்லறையில் கண்டெடுத்த இறுதிச் சடங்குப் பொருட்கள்

புது எகிப்து இராச்சிய காலத்தில் நைல் நதியின் மேற்கு கரையில், அரச குடும்பத்தினர் மற்றும் கோயில் தலைமைப் பூசாரிகள், உயர் அரசு அதிகாரிகளின் மம்மிகளை மன்னர்களின் சமவெளியில் மலைக் குன்றுகளை குடைந்து கல்லறைகள் கட்டி அடக்கம் செய்யப்பட்டது. இக்காலத்தில் பிரமிடுகள் கட்டப்படவில்லை. நைல் நதியின் மேற்குக் கரையில் தீபை நகரத்திற்கு எதிரே கட்டப்பட்ட கல் கோயில்களில் பூசாரிகள் அவர்களுக்காக இறுதி சடங்குகளை நடத்தினர். தற்போதைய சான்றுகளிலிருந்து, பதினெட்டாம் வம்ச காலத்தில் எகிப்தியர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து பல பொருட்களை தங்கள் கல்லறைகளில் தவறாமல் சேர்த்த கடைசி காலகட்டமாகத் தோன்றுகிறது; பத்தொன்பதாம் வம்ச காலத்தில், கல்லறைகளில் குறைவான பொருட்கள் இருந்தன, குறிப்பாக அடுத்த உலகத்திற்காக தயாரிக்கப்பட்ட பொருட்களும் இதில் அடங்கும். ஆகவே, பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் வம்சங்களுக்கு ஏற்பட்ட மாற்றம் புதைகுழி மரபுகளில் ஒரு பிளவுக் கோடு உருவாக்கியது: பதினெட்டாம் வம்சம் அதன் பழக்கவழக்கங்களில், கடந்த காலத்தை மிக நெருக்கமாக நினைவில் வைத்திருந்தது.

Thumb
பார்வோன் துட்டன்காமன் மம்மியின் சவப்பெட்டியை மூடிய தங்க முலாம் பூசப்பட்ட தகடு

பதினெட்டாம் வம்சத்தின் உயரடுக்கு மக்கள் தளபாடங்கள் மற்றும் ஆடை மற்றும் பிற பொருட்களை தங்கள் கல்லறைகளில் வைத்தனர், இந்த கல்லறைகளில் படுக்கைகள், மகுடங்கள், நாற்காலிகள், தோல் செருப்புகள், நகைகள் மற்றும் இசைக்கருவிகள் இருந்தன . பட்டியலிடப்பட்ட பொருள்கள் அனைத்தும் உயரடுக்கினருக்கானவை என்றாலும், பல ஏழை மக்கள் ஆயுதங்களுக்கும், அழகுசாதனப் பொருட்களுக்கும் அப்பால் எதையும் தங்கள் கல்லறைகளில் வைக்கவில்லை. எகிப்தின் புதிய இராச்சியத்தின் ராமேசியம் காலத்தில் எந்த உயரடுக்கு கல்லறைகளும் மாற்றி அமைக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில், பழைய இராச்சியத்திலிருந்து பிரபலமாக இருந்த அன்றாட காட்சியைக் காட்டிலும், கலைஞர்கள் மேல்தட்டு மக்களுக்குச் சொந்தமான கல்லறைகளை மத நிகழ்வுகளின் காட்சிகளுடன் அலங்கரித்தனர். இறுதிச் சடங்குகள், பல உறவினர்களுடனான இறுதிச் சடங்கு, தெய்வ வழிபாடு, பாதாள உலகில் உள்ள புள்ளி விவரங்கள் கூட உயரடுக்கு கல்லறை அலங்காரங்களில் பாடங்களாக இருந்தன. ராமேசியம் கால கல்லறைகளில் காணப்பட்ட பெரும்பாலான பொருள்கள் பிற்பட்ட வாழ்க்கைக்காக செய்யப்பட்டன. ராமேசியக் கல்லறைகளில் உள்ள பொருள்கள் அடுத்த உலகத்திற்காக தயாரிக்கப்பட்டன.[6]

இறுதிச் சடங்குகள்

பிணச்சீரமைப்புக்கு பின், குறிப்பாக இறந்தவருக்கு உயர் தகுதியுடன் இருப்பின், அவர்களின் முகங்களை மண்ணால் மூடி, மார்பில் அடித்துக்கொண்டு நகரத்தை சுற்றி ஊர்வலமாக அணிவகுத்துச் செல்வர். ஒரு உயர் தகுதியுடன் கூடிய ஆணின் மனைவி இறந்துவிட்டால், அவளுடைய உடல் மூன்று அல்லது நான்கு நாட்கள் கடக்கும் வரை பிணச்சீரமைப்பு செய்யப்படாது. ஒருவர் நீரில் மூழ்கி இறந்தால் அல்லது தாக்கப்பட்டு இறந்தால், உடனடியாக அவர்களின் உடலை பிணச்சீரமைப்பு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடலைத்தொட பூஜாரிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பிணச்சீரமைப்பு செய்தபின், துக்கப்படுபவர்கள் ஒரு மணி நேர விழிப்புணர்வின் போது தீர்ப்பைச் செயல்படுத்தும் ஒரு சடங்கை மேற்கொள்வர். அவ்வமயம் ஒசைரிஸ் கடவுள் மற்றும் அவரது எதிரியும், சகோதரருமான சேத் கடவுள், தெய்வங்களாக இசிசு, ஓரசு மற்றும் அனுபிஸ் கடவுள்கள் இறந்தவருக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவதாக எகிப்தியர்கள் நம்பினர்..[7]

கல்லறைக்கு இறுதி ஊர்வலத்தின் போது பொதுவாக கால்நடைகள் பிணத்தை ஒரு ஸ்லெட்ஜ் வகை வண்டிகளில் இழுத்துச் செல்வது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பின்தொடர வேண்டும். ஊர்வலத்தின் போது, பூசாரி தூப தீபங்கள் ஏற்றிக் கொண்டே, இறந்த உடலுக்கு முன் பால் ஊற்றினார். கல்லறைக்கு வந்ததும், இறப்பிறகு பிந்தைய வாழ்க்கைகாக, இறந்தவரின் தலை தெற்கு நோக்கி திருப்பப்பட்டு, மம்மியின் வாய்த் திறப்புச் சடங்கு கல்லறைக் கோயில் பூசாரியால் நடத்தப்பட்டது. விழாவை முடிக்க இறந்தவருக்கு பொருட்கள் வழங்கப்பட்டன. இறந்தவர் பயன்படுத்திய நகைகள், ஆயுதங்கள், மதுக் குடுவைகள் மற்றும் பிற பொருட்கள் கல்லறையில் வைக்கப்பட்டது.

Thumb
பிணத்தின் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் இறந்தோர் நூல்

மம்மியாக்கம்

பிணச்சீரமைப்பு

இறந்தவர் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்கு, ஒரு இறந்தவரின் உடலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பண்டைய எகிப்தியர்கள் ஒரு நபர் இறந்தவுடன் உடலை விட்டு ஆன்மா வெளியேறுகிறது நம்பினர்.[8] எனவே இறந்தவர் உடலைப்பதப்படுத்தி மம்மியாக்கம் செய்து நித்திய வீட்டில் அடக்கம் செய்தனர்.

மம்மி செயல்முறை

Thumb
பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர் உடலை பிணச்சீரமைப்பு செய்து மம்மியாக்குதல்

இறப்பிறகு பிந்தைய வாழ்விற்காக, பண்டைய எகிப்தியர்கள் இறந்தவரை ஒசிரிசு கடவுள் முன் வைத்து உடலை பதப்படுத்தி மம்மியாக்கம் செய்வர். இதனால் இறந்தவரின் ஆன்மா மீண்டும் உடலுடன் இணைந்து உயிர்த்து எழுவர் என்பது நம்பிக்கையாகும்.

மம்மியாக்கல் முறையில் இறந்தவரின் இதயம் தவிர்த்த மூளை, நுரையீரல், இரைப்பை, குடல், சிறுநீரகம், கல்லீரல், கணையம், பித்தப்பை போன்ற உள் உறுப்புகளை நீக்கப்பட்டு, உப்பை பயன்படுத்தி உடலில் உள்ள நீர்சத்தை வெளியே எடுக்கப்படும். இதனால் தோல், முடி மற்றும் தசைகள் பாதுகாக்கப்படுகிறது.[9] பின்னர் மூலிகை எண்ணெய்யில் நனைத்த பருத்தித் துணிகளால் உடலைச் சுற்றி இறுகக் கட்டினர். மம்மியாக்க செயல்முறை 70 நாட்கள் வரை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல்பாட்டின் போது, கல்லறைக் கோயிலின் சிறப்பு பூசாரிகள் பிணச்சீரமைப்பாளர்களாகப் பணியாற்றினர். மம்மியாக்க முறை மூன்று வெவ்வேறு செயல்முறைகளில் இருந்தது; அவை மிகவும் விலையுயர்ந்த, மிதமான விலையுயர்ந்த மற்றும் மிகவும் எளிமையான அல்லது மலிவானவை ஆகும்.[10] மிகவும் உன்னதமான, பொதுவான மற்றும் மிகவும் விலையுயர்ந்த மம்மியாக்க முறை 18 வது வம்சத்தவர்கள் காலத்தில் நடத்தப்பட்டது. உடல் சிதைவடையாதபடி, உள் உறுப்புகளையும், உடலில் உள்ள இரத்தம் போன்ற திரவங்களை அகற்றுவதே முதல் படி ஆகும். பிணத்தை ஒரு மேஜையில் போடப்பட்ட பிறகு, மூக்கு வழியாக ஒரு உலோக கொக்கி போன்ற குழாயை சொருகி உறிஞ்சி மூளையை சிறிது சிறிதாக வெளியே எடுக்கப்படும். இதயம் எல்லா சிந்தனையையும் செய்தது என்று நினைத்ததால் எகிப்தியர்கள் இதயம் அகற்றாது மூளையை வெளியே எறிந்தனர். அடுத்த கட்டமாக, உள் உறுப்புகள், நுரையீரல், கல்லீரல், வயிறு மற்றும் குடல்களை அகற்றி, அவற்றை கடவுள் உருவங்கள் வரைந்த திரவ ஜாடிகளில் பாதுகாப்புடன் வைத்தனர். எகிப்தியக் கடவுள்கள் அவற்றை பாதுகாப்பர் என நம்பினர். கல் சவப்பெட்டியில் மம்மியாக்கம் செய்யப்பட்ட உடலுடன், உடல் பாகங்கள் கொண்ட ஜாடிகளையும் வைத்தனர். சவப் பெட்டியை அழகான வண்ணம் தீட்டப்பட்ட மூடியினால் மூடிவைத்தனர். பண்டைய எகிப்தியர்கள் இறந்தவரை தங்கள் உறுப்புகளுடன் அடக்கம் செய்வதன் மூலம், அவர்களுடன் மறு வாழ்வில் மீண்டும் சேரலாம் என்று நம்பினர்.

Thumb
வர்ணம் பூசப்பட்ட மம்மியின் கட்டு

விலங்குகளை மம்மியாக்கம் செய்தல்

Thumb
கழுகின் மம்மி

பண்டைய எகிப்தில் பல காரணங்களுக்காக விலங்குகள் மம்மியாக்கப்பட்டது. அவற்றின் உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டு செல்லப் பிராணிகளும் இற்ந்தவர் உடலுடன் புதைக்கப்பட்து. விலங்குகள் செல்லப்பிராணிகளாக மட்டும் இல்லாது எகிப்தியக் கடவுளர்களின் அவதாரங்களாகவும் பார்க்கப்பட்டது. எனவே, பண்டைய எகிப்திய தெய்வங்களை கௌரவிப்பதற்காக இந்த விலங்குகள் அதன் உரிமையாளரின் பிணத்துடன் புதைக்கப்பட்டன. எகிப்தியர்கள் பூனைகள், தவளைகள், மாடுகள், குரங்குகள் மற்றும் கழுகுகள் போன்ற விலங்குகளை மம்மியாக்கம் செய்தனர். பிற விலங்குகள் பிற்பட்ட வாழ்க்கையில் மனிதர்களுக்கு உணவுப் பிரசாதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மம்மியாக்கப்பட்டன. கூடுதலாக, அவற்றின் உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டு செல்லப்பிராணிகளும் அவர்களுடன் புதைக்கப்பட்டன.

பண்டைய நடு எகிப்தில் டெய்ர் அல்-பார்ஷா கிராமத்தை சுற்றியுள்ள கல்லறைகளில் பல வகையான விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்டுகள் மற்றும் புதைகுழிகளில் காணப்பட்ட எச்சங்களில் நாய்கள், நரிகள், கழுகு ஆந்தைகள், வெளவால்கள், கொறித்துண்ணிகள் மற்றும் பாம்புகள் ஆகியவை அடங்கும். .[11]

அடக்கச் சடங்குகள்

Thumb
இறந்த துட்டன்காமனின் வாய் திறப்பு சடங்கைச் செய்யும் மன்னர் ஆய்

மம்மி தயாரிக்கப்பட்ட பிறகு, அதை ஒரு பார்வோன் அல்லது பூசாரி மம்மியின் வாய் திறப்புச் சடங்கு நிகழ்த்த வேண்டும். மம்மியின் வாய் திறப்பு சடங்கின் போது, மம்மியின் கூர்மையான கத்தியால், மந்திரம் உச்சரித்து, மம்மியின் வாய் மீது தொடுவார். இந்த விழா, மம்மிக்கு பிந்தைய வாழ்க்கையில் சுவாசிக்கவும் பேசவும் முடியும் என எகிப்தியர்கள் நம்பினர். இதேபோன்ற முறையில், பூசாரி மம்மியின் கைகள், கால்கள் மற்றும் பிற உடல் பாகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க மந்திரங்களை உச்சரிப்பர். பூசாரிகள் அல்லது மன்னரின் வாரிசு மம்மியை நித்திய வீட்டில் வைப்பர். இங்குதான் பிரார்த்தனை ஓதப்பட்டது, தூபம் எரிக்கப்பட்டது, மேலும் மன்னர் தனது இறுதிப் பயணத்திற்குத் தயாராகும் வகையில் மேலும் சடங்குகள் செய்யப்பட்டன. மன்னரின் மம்மி பின்னர் பிரமிட்டுக்குள் ஏராளமான உணவு, பானம், தளபாடங்கள், உடைகள் மற்றும் நகைகள் ஆகியவற்றுடன் வைக்கப்பட்டது.

யாரும் மீண்டும் பிரமிடுவில் உள்ளே நுழையக்கூடாது என்பதற்காக பிரமிடு வாயில் முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. இருப்பினும், மன்னரின் ஆத்மா விரும்பியபடி அடக்கம் செய்த அறை வழியாக செல்ல முடியும். இறுதிச் சடங்கிற்குப் பிறகு பார்வோன் ஒரு கடவுளாகி, அவரது பிரமிட்டுக்கு அருகிலுள்ள கோயில்களில் வணங்கப்படுவார்.

கல்லறைகள்

Thumb
மஸ்தபா எனும் நித்திய வீட்டிற்கான எடுத்துக்காட்டு

மஸ்தபா எனும் கல்லறை இறந்தவருக்கான வீடாகும். இது இறந்தவர் ஓய்வெடுக்க கல்லறை எல்லையற்ற பாதுகாப்பையும், துக்கப்படுபவர்களுக்கு சடங்குகளைச் செய்வதற்கான இடத்தையும், இறந்தவருக்கு நித்திய ஜீவனுக்கு உதவியது. எனவே, பண்டைய எகிப்தியர்கள் கல்லறைகள் கட்டப்பட்ட விதம் குறித்து மிகவும் தீவிரமாக இருந்தனர்.[12]

மஸ்தபா மம்மியை அடக்கம் செய்யப்பட்ட அறையாகவும், மற்றும் இறுதிச் சடங்குகள் செய்யும் இடமாகவும், துக்கப்படுபவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூடும் ஒரு தேவாலயத்தை ஒத்திருந்தது. இது மன்னரின் கல்லறைக் கோயிலாக இருந்தது. .[12] பண்டைய எகிப்தியர்கள் இறந்தவரை குறிப்பாக வளமான அல்லது தாவரங்களுக்கு பயனுள்ளதாக இல்லாத நிலத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். எனவே, கல்லறைகள் பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளில் கட்டப்பட்டன. கல்லறைகள் அருகருகே கட்டப்பட்டிருந்தன. இருப்பினும், இறந்த ஒரு பார்வோனின் கல்லறை மிகவும் புனிதமான இடத்தில் அமைந்திருந்தது. வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில், மம்மிகள் பாலைவனங்களில் புதைக்கப்பட்டது, ஏனெனில் அவை இயற்கையாகவே நீரிழப்பால் பாதுகாக்கப்படும். "கல்லறைகள்" மணலில் தோண்டப்பட்ட சிறிய முட்டை அல்லது செவ்வக குழிகள் ஆகும். இறந்தவரின் உடலை அதன் இடது பக்கத்தில் ஒரு சில ஜாடிகளுடன் உணவு மற்றும் பானம் மற்றும் மாயாஜால மந்திரங்களுடன் தட்டுகளுடன் சேர்த்து வைப்பர். தகுதி மற்றும் செல்வத்தின் படி கல்லறைகளின் அளவு இறுதியில் அதிகரித்தது. வறண்ட, பாலைவன நிலைமைகள் பண்டைய எகிப்தில் ஏழைகளின் அடக்கங்களுக்கு ஒரு நன்மையாக இருந்தன, அவர்கள் செல்வந்தர்களிடம் இருந்த சிக்கலான அடக்கம் தயாரிப்புகளை வாங்க முடியவில்லை. எளிய கல்லறைகள் எனப்படும் மஸ்தபா கட்டமைப்புகளில் உருவாகின. ஒரு பார்வோன் அரியணை ஏறிய அடுத்த நாளே தனக்கான பிரமிட்டைக் கட்டத் தொடங்குவார்.

நைல் நதியின் மேற்குக் கரைப் பகுதிகளில் பெரும்பான்மையான கல்லறைகள் அமைந்திருந்தன. எனவே இப்பகுதியை மன்னர்களின் சமவெளி மற்றும் அரசிகளின் சமவெளி என்று அழைக்கப்பட்டது.

சவப்பெட்டிகள்

Thumb
கல் சவப்பெட்டி

இறந்தவரின் உடலை மம்மியாக்கம் செய்த பிறகு கல் சவப்பெட்டி அல்லது கடினமான மரப் பெட்டியில் வைக்கப்பட்டடது. சவப்பெட்டி புழு, பூச்சிகளால் அரிக்காமல் இருப்பதற்கு மூலிகை சாறுகளால் ஆன வண்ணங்கள் பூசப்பட்டது.

பழைய எகிப்திய இராச்சிய காலத்தில் ஒவ்வொரு சவப்பெட்டியிலும் பின்வருபவை சேர்க்கப்பட்டன: இறந்தவரின் பெயர், படையல்களின் பட்டியல் ச்வப்பெட்டி மீது குறிக்கப்பட்டது.மேலும் இறந்தவர் சவப்பெட்டி வழியாக பார்க்கும் வகையில் கண்களை வரைந்தார்.[13]

சவப்பெட்டியின் அலங்காரங்கள் பொதுவாக இறந்தவரின் தகுதிக்கு ஏற்ற வகையில் இருந்தது. மத்திய கால இராச்சியத்தின் போது, சவப்பெட்டி ஒரு குறும் கல்லறையாக கருதப்பட்டது. மேலும் அது வர்ணம் பூசப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சவப்பெட்டி இறந்தவரை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் பாதுகாப்பதாகக் கூறப்பட்டது. சவப்பெட்டிகளின் பக்கங்களில், ஓரசு கடவுளின் ஹோரஸின் நான்கு மகன்களும் மற்றும் பிற கடவுள்களிண் வர்ணம் பூசப்பட்டது. பிரார்த்தனைகள் பெரும்பாலும் சவப்பெட்டிகளிலும் பொறிக்கப்பட்டன. மானுட சவப்பெட்டிகள் விரைவில் வெளிவந்தன, அவை இறந்தவரின் உடலின் விளிம்புக்கு ஏற்ப அமைக்கப்பட்டன. இறந்தவரின் முகம் மற்றும் தலைமுடி சவப்பெட்டியில் மேலும் தனிப்பயனாக்க வண்ணம் வரையப்பட்டது. மம்மியை பாதுகாக்கும் கல் சவப்பெட்டி ஒரு பெரிய கல் கொள்கலனாகவும், மம்மிக்கு பாதுகாப்பை கொடுத்தது..[14]

சவ அடக்கம்

எகிப்தியர்கள் பின்பற்றிய இறுதிச் சடங்குகளில் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த சடங்குகள் முக்கிய இடம் பெற்றத். இறந்தவரின் உடலை சரியான முறையில் பிணச்சீரமைப்பு செய்து மம்மி]]யாக்கம் செய்யாமல் புதைத்தால், மரணத்திற்கு பின் இறந்தவரின் ஆன்மா மீண்டும் திரும்பாது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

பிணச்சீரமைப்பு மற்றும் மம்மியாக்கம் செய்வதில் சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தண்டனை மற்றும் அழிவு என்றும், இறந்தவர்களின் பிற்பட்ட வாழ்க்கையின் மகிமைகளை அனுபவிக்க மாட்டார்கள் என்று நம்பினர். சரியான முறையில் அடக்கம் செய்யப்பட்டால், இறட்ந்தவர்கள் கடவுளால் வரவேற்கப்படுவார்கள். இறந்தோர் நூலில் பாதாள உலகத் தண்டனைகள் சித்தரிக்கப்பட்டது.

இறுதித் தீர்ப்பு

Thumb
மம்மியின் இதயத்தை எடை போடும் காட்சி

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படுவதற்காக, இறந்தவர்கள் சில கடவுள்களின் தீர்ப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இறந்தோர் நூலில் தீர்ப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான காட்சிப் படம் பண்டைய எகிப்திய இடிபாடுகள் மற்றும் கலைப்பொருட்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டம், அறநெறி மற்றும் நியாயம் ஆகியவற்றிக்கு அதிபதியான மாத் கடவுளின் இறகை தராசின் ஒரு தட்டிலும், இறந்தவரின் இதயத்தை ஒரு தட்டிலும் வைத்து அனுபிஸ் எனும் கடவுள் எடைபோடுவார். ஒசிரிசு கடவுள் இறந்தவருக்கான இறுதித் தீர்ப்பு வழங்குவார்.[15] அச்சமயம் அம்மித் எனும் பாதாள உலகக் கடவுள் இறந்தவரின் இதயத்தை பறித்து சாப்பிட முயலும். இறந்தவரின் முதன்மை உறுப்பு (இதயம்) மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நுழைகிறது. தீர்ப்பை வழங்கிய பின்னர், இறந்தவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவர்களைக் கொண்டாடி, மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நுழைவதற்கு அவர்களின் நீதியைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்வர்.

இறுதிச் சடங்கு நூல்கள்

இறந்தோர் நூல் போன்ற இறுதிச் சடங்கு நூல்களில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் செய்வது குறித்தும், இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை குறித்தும் பேசுகிறது.[16]

மம்மியுடன் அடக்கம் செய்யப்படும் பொருட்கள்

Thumb
பண்டைய எகிப்தியர்களின் மம்மிகளின் உள்ளுறுப்புகளை வைத்த நான்கு சுண்ணாம்புக் கல் கேனோபிக் ஜாடிகள், காலம் கிமு 900 – 800
Thumb
மம்மியின் கல்லறையில் உசாப்தி சிலைகளின் தொகுதி

பண்டைய எகிப்திய வரலாறு முழுவதும் அடக்கம் செய்யப்பட்ட பொருட்களின் வகைகள் மாறினாலும், இறந்தவர்களைப் பாதுகாப்பதற்கும், இறப்பிற்கு பிநதைய வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும், அவர்களின் நோக்கம் அப்படியே இருந்தது. எகிப்திய வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து இறந்த பிறகு அவசியம் என்று நினைத்த சில பொருட்களையாவது மம்மியுடன் புதைத்தனர். இவை அன்றாடத் தேவைகளான கிண்ணங்கள், சீப்பு மற்றும் ப உணவுகளுடன் இருந்தன. செல்வந்த எகிப்தியர்கள் நகைகள், தளபாடங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் அடக்கம் செய்தனர். பின்னர் இது கல்லறை கொள்ளையர்களின் இலக்குகளாக அமைந்தது. ஆரம்பகால வம்ச காலத்தில், கல்லறைகள் அன்றாட வாழ்க்கை பொருட்களான தளபாடங்கள், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களால் நிரப்பப்பட்டன. அவற்றில் பல கல் மற்றும் மட்பாண்ட கப்பல்களும் இருந்தன.

மம்மியின் கல்லறையில் மம்மியின் இதயம் தவிர்த்த நுரையீரல், இரைப்பை, கல்லீரல், குடல் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளை பதப்படுத்தி கேனோபிக் ஜாடிகளில் சேமித்து வைத்தனர். இவ்வுறுப்புகள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு பயன்படும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினர். இந்த ஜாடிகளின் மூடிகளில் ஓரசு கடவுளின் 4 மகன்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டது. ஓரசு கடவுளின் மகன்கள் இவ்வுறுப்புகளைக் காப்பர் என்பது பண்டைய எகிப்தியர்கள் நம்பிக்கை.

பண்டைய எகிப்திய வரலாறு முழுவதும் அடக்கம் செய்யப்பட்ட பொருட்களின் வகைகள் மாறினாலும், இறந்தவர்களைப் பாதுகாப்பதற்கும், இறப்பிற்கு பிநதைய வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும், அவர்களின் நோக்கம் அப்படியே இருந்தது. எகிப்திய வரலாற்றின் ஆரம்ப காலங்களிலிருந்து இறந்த பிறகு அவசியம் என்று நினைத்த சில பொருட்களையாவது மம்மியுடன் புதைத்தனர். இவை அன்றாடத் தேவைகளான கிண்ணங்கள், சீப்பு மற்றும் ப உணவுகளுடன் இருந்தன. செல்வந்த எகிப்தியர்கள் நகைகள், தளபாடங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன் அடக்கம் செய்தனர். பின்னர் இது கல்லறை கொள்ளையர்களின் இலக்குகளாக அமைந்தது. ஆரம்பகால வம்ச காலத்தில், கல்லறைகள் அன்றாட வாழ்க்கை பொருட்களான தளபாடங்கள், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களால் நிரப்பப்பட்டன. அவற்றில் பல கல் மற்றும் மட்பாண்ட கப்பல்களும் இருந்தன.

பண்டைய எகிப்திய கல்லறைகளின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான காரணி இறுதிச் சடங்குகளுக்கு சேமிப்பு இடம் தேவையானது. பழைய இராச்சியத்தில் அடக்கம் தொடர்பான பழக்கவழக்கங்கள் வளர்ந்ததால், செல்வந்த குடிமக்கள் மரம் அல்லது கல் சவப்பெட்டிகளில் மம்மிகளை புதைத்தனர். இருப்பினும், அடக்கம் செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை குறைந்தது. அவை பெரும்பாலும் செப்பு மாதிரிகள், கருவிகள் மற்றும் பாத்திரங்களின் தொகுப்பாக இருந்தன. முதல் இடைநிலைக் காலத்தில் மரச் சவப்பெட்டிகள் மிகவும் பிரபலமான புதைகுழிகளாக மாறியது. மேலும் ஒரு வகை செவ்வக சவப்பெட்டி மீது எகிப்திய பிரசாத வண்ணமயமாக வரையப்பட்டிருந்தது மற்றும் காணிக்கைப் பொருட்களும் படைக்கப்பட்டிருந்தது.

Thumb
பார்வோன்களின் கல் சவப்பெட்டியில் மம்மியுடன் வைக்கப்பட்டிருக்கும் க்ல்வெட்டுகளுடன் கூடிய பச்சை நிற கல் வண்டுகள்

எகிப்தின் மத்திய கால இராச்சிய காலத்தின் முடிவில் முடிவில் புதை குழிகளில் வண்டுகள் போன்ற புதிய பொருட்களை படைக்கும் முறை அறிமுகமானது.

Thumb
இறுதிச் சடங்கில் கல்லறையில் மம்மியைக் காக்க உசாப்தி எனும் பணியாளர்களின் குறும் களிமண் சிலைகள்

இறந்தவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவிட உசாப்தி எனும் பணியாளர்களின் குறும் களிமண் சிலைகள் செய்து கல்லறைகளில் வைத்தனர். மேலும் கல்ல றைகள் பாதுகாக்க பச்சை நிற கல் வண்டுகள் செய்து வைத்தனர். புதிய இராச்சியத்தில், சில பழைய அடக்கம் பழக்க வழக்கங்கள் மாற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு மனித வடிவத்தில் சவப்பெட்டி வடிவம் மாற்றப்பட்டது. மேலும் இறந்தவர்களுக்காக ஒரு சிறிய அளவில் உசாப்தி சிலை நிறுவப்பட்டது. இது எகிப்தியர்கள் பிற்பட்ட வாழ்க்கையில் தங்களுக்கு வேலை செய்யும் என்று நம்பினர்.

இறுதி ஊர்வலச் சடங்குப் படகுகள்

Thumb
பண்டைய எகிப்தியர்களின் இறுதி ஊர்வலச் சடங்குப் படகு

படகுகள் பண்டைய எகிப்திய இறுதிச் சடங்களின் ஒரு பகுதியாக இருந்தன. ஏனென்றால் அவைகள் மூலம் தெய்வங்கள் வானம் முழுவதும் மற்றும் பாதாள உலகம் வழியாக பயணிக்கும் முக்கிய வழிமுறையாக கருதப்பட்டன.[17] அபிதோஸ் போன்ற புனித தலங்களுக்கு மம்மியின் இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு ஒரு வகை படகு போன்ற மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டது.[18]

இறுதி சடங்குகள் படகுகள் நைல் நதி வழியாக படகு சவப்பெட்டியை சுமந்து சென்றது. இறந்தவரை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒரு நாய் இட்டுச் செல்லும் என்று எகிப்தியர்கள் நம்பியதால் படகில் ஒரு நாய் வைக்கப்பட்டிருந்தது.[19]

படகுகள் வழக்கமாக சுமார் 20 அடி அல்லது அதற்கு மேற்பட்டவை. இருப்பினும் பழைய இராச்சியத்தின் பார்வோன் கூபுவின் படகு 144 அடி நீளம், 12 அடி அகலத்துடன் இருந்தது. பொதுவான இறுதி சடங்கு படகுகள் சிறிய அளவில் இருந்தன.[20]

பண்டைய எகிப்தில் மரணம் ஒரு படகுப் பயணமாக காணப்பட்டது. இன்னும் குறிப்பாக, இது வடக்கு மற்றும் தெற்கில் இணைந்த அவர்களின் நைல் நதியின் குறுக்கே ஒரு பயணமாகக் காணப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.