எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் (Twelfth Dynasty of Ancient Egypt - Dynasty XII) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட நான்கு வம்சங்களில் இம்வம்சம் இரண்டாவது ஆகும். பிற வம்சங்கள் எகிப்தின் பதினொன்றாம் வம்சம், எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் மற்றும் எகிப்தின் பதிநான்காம் வம்சம் ஆகும். இவ்வம்ச மன்னர்கள் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1991 முதல் கிமு 1802 முடிய 189 ஆண்டுகள் ஆன்டனர்.[1] கிமு 1991-இல் இவ்வம்சத்தை நிறுவியவர் மன்னர் முதலாம் அமெனம்ஹத் ஆவார்.
எகிப்தின் மத்தியகால இராச்சியம் 12-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 1991 – கிமு 1802 | |||||||||
தலைநகரம் | தீபை, இட்ஜ்தாவி | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 1991 | ||||||||
• முடிவு | கிமு 1802 | ||||||||
|

ஆட்சியாளர்கள்
இவ்வம்ச பார்வோன்களில் ஒரு இராணி சோபெக்னெபெரு ஆட்சியாளராக இருந்துள்ளார். இவ்வம்ச மன்னர்கள் தாங்கள் ஆட்சிபீடம் ஏறியவுடன், தங்கள் இறப்பிற்குப் பின்னர் தங்கள் உடலை அடக்கம் செய்தவதற்கான பிரமிடுகளை முன்னரே கட்டி வைத்துக் கொண்டனர். எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்ச பார்வோன்களில் முக்கியமானவர்கள்:[2]
- முதலாம் அமெனம்ஹத் - கிமு 1991 – 1962 - அமெனம்ஹத் பிரமிடு
- முதலாம் செனுஸ்ரெத் - கிமு 1971 – 1926 - எல்-லிஸ்டு பிரமிடு
- இரண்டாம் அமெனம்ஹத் -கிமு 1926 - 1895 - வெள்ளைப் பிரமிடு
- இரண்டாம் செனுஸ்ரெத் - கிமு 1897 – 1878 - எல்-லகூன் பிரமிடு
- மூன்றாம் செனுஸ்ரெத் - கிமு 1878 – 1839 - தச்சூர் பிரமிடு
- மூன்றாம் அமெனம்ஹத் - கிமு 1860 – 1814 -கருப்பு பிரமிடு
- நான்காம் அமெனம்ஹத் - கிமு 1815 – 1806 - தெற்கின் மஸ்குனா பிரமிடு
- அரசி சோபெக்நெபரு - கிமு 1806 – 1802 - வடக்கின் மஸ்குனா பிரமிடு


பண்டைய எகிப்திய இலக்கியம்

எகிப்தின் பனிரெண்டாம் வம்சத்தவர், எகிப்தை ஆண்ட பார்வோன்களை பெயர்களை பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் பல நமக்காக பாதுகாத்து வைத்தனர்.
பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.