மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)

From Wikipedia, the free encyclopedia

மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)

மாசிடோனியா (Macedonia) அல்லது மாசிடோன் (Macedon, கிரேக்க மொழி: Μακεδονία, Makedonía) பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும். கிரேக்க மூவலந்தீவின் வடகிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த இராச்சியம்,[2] மேற்கில் எபிரசு நாட்டையும் வடக்கில் பேயோனியா நாட்டையும் கிழக்கில் திராசு பகுதியையும் தெற்கில் தேசாலி நாட்டையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் மாசிடோனியாΜακεδονίαMakedonía, தலைநகரம் ...
மாசிடோனியா
Μακεδονία
Makedonía
கி.மு 808–167
Thumb
வெர்ஜினா சன்
Thumb
கி.மு 336இல் இருந்த மக்கெடோனிய இராச்சியம்.
தலைநகரம்ஐகை
(கி.மு 808–399)
பெல்லா[1]
(கி.மு 399–167)
பேசப்படும் மொழிகள்பண்டைய மக்கெடோனிய மொழி,
அட்டிக் கிரேக்கம், கோயின் கிரேக்கம்
சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம்சிலவர் ஆட்சி முடியாட்சி
மன்னர் 
 கி.மு 808–778
மக்கெடோனின் கரானுசு (முதல்)
 கி.மு 179–167
மக்கெடோனின் பெர்சியசு (கடைசி)
சட்டமன்றம்சைனெட்ரியான்
வரலாற்று சகாப்தம்மரபார்ந்த பண்டையம்
 கரானுசால் நிறுவப்பட்டது
கி.மு 808
 மக்கெடோன் எழுச்சி
கி.மு 359–336
 பெர்சியக் கைப்பற்றுகை
கி.மு 335–323
 பாபிலோன் பிரிவினை
கி.மு 323
 டியாடோச்சி போர்கள்
கி.மு 322–275
 பைடுனா சண்டை
கி மு167
நாணயம்டெட்ராடிராகிம்
முந்தையது
பின்னையது
கிரேக்க இருண்ட காலம்
பெரகமோன் இராச்சியம்
செலுகிட் பேரரசு
தாலமிய இராச்சியம்
மக்கெடோனியா (உரோமானிய மாநிலம்)
மூடு

பண்டைக் கிரேக்கத்தின் ஒரு சிறுநாடாக இருந்த மக்கெடோன் முழுமையான ஹெல்லனிய உலகில் பெற்ற எழுச்சிக்கு முதன்மை காரணமாக மக்கெடோனின் இரண்டாம் பிலிப் இருந்தார். பேரரசன் அலெக்சாந்தரின் வெற்றிகளுக்குப் பின்னர், உலகின் மிகவும் வலிமையான நாடாக சிறிது காலம் விளங்கியது; இக்காலத்தில் முன்னாள் அகாமனிசியப் பேரரசை உள்ளடக்கிய இதன் ஆட்சி சிந்து ஆறு வரையும் பரவியிருந்தது.

பெயர்

மக்கெடோனியா என்ற பெயர் (கிரேக்க மொழி: Μακεδονία, Makedonía) "உயரமானவர்" அல்லது "மேட்டுவாசி" என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான μακεδνός (Makednos) என்பதிலிருந்து வந்தது. இங்குள்ள மக்களின் உயரத்தை ஒட்டி இவ்வாறு பெயரிடப்பட்டதாக கருதப்படுகிறது. [3][4] ஆங்கிலச் சுருக்கமான மக்கெடோன் என்பது பிரான்சிய பெயரிலிருந்து திரிந்து வந்திருக்கலாம்.[5]

வரலாறு

துவக்க காலமும் மரபுக்கதைகளும்

ஏகெயைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை முதல் மக்கெடோனியத் தலைநகராகக் கொண்டு பல மக்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது இது எமாத்தியா என (மன்னன் எமாத்தியன் பெயரைக் கொண்டு) அழைக்கப்பட்டது. தலைநகர் ஐகெயும் அப்போது எடெசா என அழைக்கப்பட்டது. பரவலாக அறியப்படும் மைதாசின் இளமைக்காலத்தில் இதுவே தலைநகரமாக இருந்தது. ஏறத்தாழ கி.மு 650இல் ஆர்கெட் பரம்பரை தங்கள் அரண்மனை-தலைநகரை இங்கு அமைத்துக் கொண்டனர்.இவர்கள் ஆர்கோசு என்ற நகரத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்.[6]

கி.மு 8ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் இந்த ஆர்கெட் பரம்பரையினர் உருவாக்கிய இராச்சியமே முதல் மக்கெடோனிய நாடாக கருதப்படுகிறது.

மற்ற உருவாக்க மரபுக்கதையாக கரானுசு தனது மக்களுடன் இங்கு இடம்பெயர்ந்து ஓர் இராச்சியத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. [7] இவரே எடெசாவை ஐகெ எனப் பெயரிட்டதாகவும் மன்னன் மைதாசையும் பிற மன்னர்களையும் வெளியேற்றி தனது இராச்சியத்தை நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது. எரோடோட்டசு கூற்றின்படி ஹெலனின் மகன் டோரசு தம் மக்களுடன் இங்கு வந்து குடியேறினார். இவர்களிலிருந்து ஒரு பிரிவினர் பின்னர் மேலும் தெற்கே குடியேறி டோரியன்கள் என அழைக்கப்பட்டனர்.[8]

எலியாக்மொன் ஆற்றுக்கும் ஆக்சியசு ஆற்றுக்கும் இடைப்பட்ட வளமிக்க வண்டல்மண் சமவெளியில் இந்த இராச்சியம் அமைந்திருந்தது. மெக்கெடோனின் முதலாம் அலெக்சாண்டர் காலத்தில் ஒலிம்பசு மலையின் உயரமான பகுதிகளுக்கு இராச்சியம் விரிவுபடுத்தப்பட்டது. இது மேல் மக்கெடோனியா என அழைக்கப்பட்டது. மற்ற திசைகளிலும் இராச்சியம் விரிவடையத் தொடங்கியது.[9] மக்கெடோனியாவின் வடக்கே கிரேக்கரல்லாத மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுடன் மக்கெடோனியர்கள் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். தெற்கே இருந்த தெசாலி மக்களுடன் பண்பாடு மற்றும் அரசியலால் ஒன்றுபட்டிருந்தனர். மேற்கிலிருந்த எபிரசுடன் உடன்பாடு கண்டு அமைதியாக வாழ்ந்தனர். கிமு நான்காம் நூற்றாண்டில் இல்லியன் படையெடுப்புக்களுக்கு எதிராக இணைந்து செயல்பட உடன்படிக்கை செய்து கொண்டனர்.[10]

சிறிதுகாலம் பெர்சிய ஆட்சியில் இருந்த மக்கெடோனியா மக்கெடோனின் முதலாம் அலெக்சாண்டர் கீழ் விடுதலை பெற்றது. பெலோப்போனாசியப் போரில் ஏதென்சுக்கும் இசுபார்த்தாக்கும் தனது ஆதரவை மாறி மாறி வழங்கி வந்தது.[11]

Thumb
ஏறத்தாழ கி.மு 431இல் பெலோப்போனாசியப் போரின்போது மக்கெடோன்

பண்டைய கிரேக்க உலகுடனான உறவு

கி.மு நான்காம் நூற்றாண்டிற்கு முன்னதாக மக்கெடோனிய இராச்சியம் தற்கால கிரேக்கத்தின் மேற்கு, மத்திய மக்கெடோனியா மாநிலத்தின் பகுதிகளடங்கிய நிலப்பரப்பில் அமைந்திருந்தது. கி.மு 393 முதல் கி.மு 370 வரை ஆண்ட மூன்றாம் அமின்தாசு மன்னர் காலத்தில்தான் ஐக்கியப்பட்ட மக்கெடோனிய இராச்சியம் உருவானது. பசுமை வளமிக்க கடலோரச் சமவெளிக்கும் உட்பகுதியில் தனித்திருந்த பழங்குடிகளின் குடியேற்றங்களுக்கும் இருந்த வேற்றுமைகளை திருமண உறவுகள் மூலம் மன்னர் ஒற்றுமைப்படுத்தினார். இவர்கள் வடக்கிலிருந்தும் வடமேற்கிலிருந்தும் இல்லிரியர்கள் நடத்திய தாக்குதல்களை தடுக்க உதவினர். பெரும்பாலும் அத்திக் கிரேக்கம் (தூய்மையான கிரேக்க மொழி) பேசினாலும் முக்கிய ஏதென்சுக்காரர்கள் மக்கெடோனியரை பண்பாடற்றவராகவே கருதினர்.[12] பின்னாளில் மக்கெடோனிய மன்னர் பிலிப்பின் தலைமையில் பெர்சியப் பேரரசிற்கு எதிராக கொரிந்த் கூட்டணி உருவாகும்வரை மக்கெடோனியர்கள் கிரேக்க மொழி பேசினாலும் தங்களை கிரேக்கராக பெருமையாக அறிமுகப்படுத்திக் கொண்டாலும் தெற்கத்திய நகர அரசுகள் மக்கெடோனியர்கள் நகர அரசு சார்ந்த அரசாண்மையைக் கொண்டில்லாததால் செவ்விய கிரேக்க பண்பாட்டை உடையவர்களாக ஏற்க மறுத்தனர்.[11][13]

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.