1947 இந்தியப் பிரிவினைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் (Princely States) அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. [1][2][3][4]
பிரித்தானிய இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்களில் 119 சமஸ்தானங்களின் மன்னர்களுக்கு மட்டுமே பிரித்தானிய அரசினர் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை வழங்கினர். சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஆண்டு வருமானம், செலுத்தும் திறை மற்றும் மக்கள் தொகை பொறுத்து, வணக்கத்திற்காக வெடிக்க வைக்கும் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை 9 முதல் 21 வரை இருந்தது.
இந்தியா-பாகிஸ்தான் விடுதலைக்குப் பின்னர், சிக்கிம் தவிர்த்த பிற அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியா, பாக்கித்தான் மற்றும் பர்மாவில் இணைந்தது.
சுதந்திர இந்திய அரசுடன் இணைந்த மன்னராட்சி அரசுகள் பட்டியல்:[5]
மேலதிகத் தகவல்கள் அரசு, பிரித்தானியப் பிரதிநிதி ...
அரசு |
பிரித்தானியப் பிரதிநிதி |
இன்று இணைந்திருப்பது |
கடைசி அல்லது இன்றைய ஆட்சியாளர் |
ஐதராபாத் நிசாம் |
தனி மன்னராட்சி |
இந்தியா
தெலுங்கானா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், இந்தியா |
ஒஸ்மான் அலிகான், ஏழாம் அசப்ஜா |
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் |
தனி மன்னராட்சி |
இந்தியா சம்மு காசுமீர், இந்தியா;
பாக்கித்தான் ஆசாத் காஷ்மீர், பாக்கித்தான்;
வடக்கு நிலங்கள், பாக்கித்தான்;
சீனா சீனா, சிஞ்சியாங்கின் இரண்டு மாவட்டங்கள் |
குலாப் சிங், ஹரி சிங், கரண் சிங் |
மைசூர் |
தனி மன்னராட்சி |
இந்தியா கருநாடகம், இந்தியா |
ஜெயசாமராஜா உடையார் |
சிக்கிம் இராச்சியம் |
தனி மன்னராட்சி |
இந்தியா சிக்கிம் இராச்சியம் |
சோக்யால் வாங்சுக் நம்கியால் |
திருவிதாங்கூர் திருவிதாங்கூர் |
தனி மன்னராட்சி |
இந்தியா தென் கேரளம், மற்றும் வட்டங்கள் (கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா |
சித்திரைத் திருநாள் பாலராம வர்மா, திருவாங்கூர் மகாராஜா |
பரோடா அரசு |
தனி மன்னராட்சி |
இந்தியா காதி பரோடா, அம்ரேலி, நவ்சாரி (குசராத்து) |
கெயிக்வாட் மகாராஜா |
மூடு
மத்திய மேற்கு இந்திய மன்னராட்சி அரசுகள்
- இதர் சமஸ்தானம்
- தாண்டே அரசு (Danta State)
- விஜயநகர சமஸ்தானம்
- மால்பூர் அரசு (Malpur State)
- மன்சா அரசு (Mansa State)
- மோகன்பூர் அரசு (Mohanpur State)
- அம்பிலியரா அரசு (Ambliara State)
- கோட்சார் அரசு (Ghodasar State)
- இலோல் அரசு (Ilol State)
- காடோசன் அரசு (Katosan State)
- கதல் அரசு (Khadal State)
- பேதாப்பூர் அரசு (Pethapur State)
- புண்டரா அரசு (Punadra State)
- ரானாசன் அரசு (Ranasan State)
- வர்சோரா அரசு (Varsora State)
- டாபா அரசு (Dabha State)
- டாதால்லியா அரசு (Dadhalia State)
- மகோரி அரசு (Magori State)
- ரூபல் அரசு (Rupal State)
- சதம்பா அரசு (Sathamba State)
- சுதஸ்னா அரசு (Sudasna State)
- வாஸ்னா அரசு (Vasna State)
கிழக்கு-வடகிழக்கு இந்திய மன்னராட்சி அரசுகள்
- மணிப்பூர் இராச்சியம்
- திரிபுரா இராச்சியம்
- கூச் பெகர் சமஸ்தானம்
- ஆத்கர் அரசு (Athgarh State)
- ஆத்மாலிக் அரசு (Athmallik State)
- பாம்ரா அரசு (Bamra State)
- பாரம்பா அரசு (Baramba State)
- பவுத் அரசு (Baudh State)
- பொனாய் அரசு (Bonai State)
- தாசப்பல்லா அரசு (Daspalla State)
- டேங்கானாள் அரசு (DhenkanalState)
- கங்க்பூர் அரசு (Gangpur State)
- இந்தோல் அரசு (Hindol State)
- கேந்துஜர் அரசு (Keonjhar State)
- கந்தபரா அரசு (Khandpara State)
- கர்சவான் அரசு (Kharsawan State)
- நரசிங்பூர் அரசு (Narsinghpur State)
- நயாகர் அரசு (Nayagarh State)
- நீள்கிரி அரசு (Nilgiri State)
- பால லஹரா அரசு (Pal Lahara State)
- ராய்ரக்கோல் அரசு (Rairakhol State)
- ரண்பூர் அரசு (Ranpur State)
- சரைக்கேலா அரசு (Saraikela State)
- தல்சேர் அரசு (Talcher State)
- டிகிரியா அரசு (Tigiria State)
ஒடிசா, சத்திஸ்கர் பகுதி மன்னராட்சி அரசுகள்
- பாட்னா சமஸ்தானம்
- களஹண்டி சமஸ்தானம் (Kalahandi State)- (Karond)
- சோன்பூர் சமஸ்தானம்
- மயூர்பஞ்ச் சமஸ்தானம்
- பஸ்தர் அரசு (Bastar State)
- சாங்பாகர் அரசு (Changbhakar State)
- சுகைகாதன் அரசு (Chhuikhadan State)
- ஜஷ்பூர் அரசு (Jashpur State)
- கங்கேர் அரசு (Kanker State)
- கவார்தா அரசு (Kawardha State)
- கைரகார் அரசு (Khairagarh State)
- கொரியா அரசு (Koriya State)- (Korea)
- நந்தகோன் அரசு (Nandgaon State)
- ராய்கர் அரசு (Raigarh State)
- சக்தி அரசு (Sakti State)
- சாரங்கர் அரசு (Sarangarh State)
- சுர்குஜா அரசு (Surguja State)
டல்ஹவுசி பிரபு அறிவித்த ஆண் வாரிசு இல்லா இராச்சியங்களை அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானியாவின் இந்திய ஆட்சியில் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளின் பட்டியல்[6]:
- சதாரா அரசு - 1848
- சீக்கியப் பேரரசு - 1849
- ஜான்சி இராச்சியம் - 1853
- நாக்பூர் அரசு - 1854
- தஞ்சாவூர் மராத்திய அரசு - 1855
- அயோத்தி இராச்சியம் - 1859
- அங்குல் (அனுகோள்) அரசு - (Angul State-1848)
- ஆற்காடு அரசு - 1855
- பண்டா இராச்சியம் - 1858
- குடகு இராச்சியம் - (1834)
- சம்பல்பூர் சமஸ்தானம், 1849
- குல்லர் அரசு (Guler State-1813)
- ஜெயந்தியா இராச்சியம் (Jaintia State_1835)
- ஜெய்த்பூர் இராச்சியம் (Jaitpur State_1849)
- ஜலாவுன் இராச்சியம் (Jalaun State_1840)
- ஜஸ்வான் இராச்சியம் - 1849)
- கச்சாரி அரசு (Kachari State-1830)
- காங்கிரா அரசு (Kangra State-1846)
- கண்ணனூர் இராச்சியம் (Kannanur State-1819)
- கிட்டூர் இராச்சியம் - (Kittur State-1824)
- கொலபா அரசு (Kolaba State-1840)
- கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806)
- குல்லூ அரசு (Kullu State-1846)
- கர்னூல் அரசு (Kurnool State-1839)
- குட்லேகர் அரசு (Kutlehar State-1825)
- மக்கரை அரசு (Makrai State-1890 - 1893)
- நர்குண்டு அரசு (Nargund State-1858)
- ராம்கர் அரசு (Ramgarh State-1858)
- சூரத் அரசு (Surat State-1842)
- சிபா அரசு
- துளசிப்பூர் அரசு (1859)
- உதய்ப்பூர் இராச்சியம், (சத்தீஸ்கர்) (1860)
- ஷாகர் இராச்சியம் (Shahgarh), 1857
- பன்பூர் இராச்சியம் (Banpur), 1857[7]
Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908
Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908