கரௌலி சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

கரௌலி சமஸ்தானம்map


கரௌலி சமஸ்தானம் (Karauli State)[1]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் 565 சுதேச சமஸ்தானகங்ளில் இதுவும் ஒன்றாகும். இது இராஜபுதனம் முகமையில் இருந்த 24 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கரௌலி நகரம் ஆகும். 3216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த கரௌலி சமஸ்தானத்தின் 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 1,40,525 ஆகும்.

விரைவான உண்மைகள்
கரௌலி சமஸ்தானம்
करौली रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1348–1949
Thumb Thumb
கொடி சின்னம்
Thumb
Location of கரௌலி
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் கரௌலி சமஸ்தானத்தின் அமைவிடம்
வரலாறு
  நிறுவப்பட்டது 1348
  இந்திய விடுதலை 1949
பரப்பு
  1931 3,216 km2 (1,242 sq mi)
Population
  1931 140,525 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் கரௌலி மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா
மூடு

1348 முதல் 1818-ஆம் ஆண்டு வரை முடியாட்சி ஆக இருந்த கரௌலி இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் கரௌலி இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [2][3][4]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் கரௌலி இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[5]தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கில் கரௌலி மாவட்டமாக உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.