துங்கர்பூர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
துங்கர்பூர் சமஸ்தானம் (Dungarpur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இச்சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கில் அமைந்த பழைய துங்கர்பூர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் துங்கர்பூர் ஆகும்.1901-இல் இதன் மக்கள் தொகை 100,103 ஆக இருந்தது.
துங்கர்பூர் சமஸ்தானம் डूंगरपुर रियासत | |||||
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் துங்கர்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | துங்கர்பூர் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1197 | |||
• | இந்திய விடுதலை | 1947 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,781 km2 km2 (Expression error: Unrecognized word "km". sq mi) | |||
Population | |||||
• | 1901 | 100,103 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | ||||
Dungarpur (Princely State) |
துங்கர்பூர் பகுதியை கிபி 12-ஆம் நூற்றாண்டில் இராஜபுத்திரர்களால் வெல்லப்படும் வரை, பில் பழங்குடி மக்களால் நிறைந்திருக்கப் பெற்றிருந்தது.[1] மேவார் இராஜபுத்திர மன்னர் சமந்து சிங் என்பவர் துங்கர்பூர் அரசை 1197-இல் நிறுவினார்.[2][3] பில் மக்கள் இப்பகுதியில் பெரும்பாண்மை மக்களாகவே உள்ளனர்.[4]
1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் துங்கர்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [5][6][7] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று துங்கர்பூர் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.